பகவத் கீதை என்ன சொல்கிறது?
கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே.
ஆனால், இந்த தீபாவளி வந்தால்...
ஸ்வீட்ஸ் எதிர்பார்ப்பு...
வேலைக்காரிக்கு சேலை எதிர்பார்ப்பு...
குழந்தைகள் புது டிரஸ் எதிர்பார்ப்பு...
தொழிலாளிகள் போனஸ் எதிர்பார்ப்பு... (என்னிடம் கமிசன் வாங்கும் ஒருவர், போனஸ் கேட்டார்! நிலைமை விலைவாசி என்று போனது பேச்சு)
என் அப்பா கல்கத்தாவில் லேத் ஷாப் வைத்திருந்தார், பின்னாளில் பெரிய தொழில் ஆனது... பழைய உருக்கு இரும்பு, வைத்து, டைடானியம் மிக்ஸ் பார்ட்ஸ் செய்வார்கள். ஒரு ஐந்நூறு டிகிரி சூட்டில் வேலை செய்தால், அந்த காலத்தில் ஒரு நாளைக்கு ஐம்பது அறுபது கூலி. இருபது வருடம் முன்னால்.
தீபாவளி சமயத்தில், நிச்சயம் ஒவ்ஒருவருக்கும் ஆயிரம் ருபாய் கொடுக்க வேண்டும். போனஸ்! அவ்வளவு லாபம் வராது. கொடுத்தால், அதிகம் வேலை செய்து, தொழில் முன்னேறும். இதெல்லாம் ஒரு வகை பிசினஸ் தந்திரம்.
அப்பா கொஞ்ச காலம் முன்பு தொழில் விற்று விட்டார்.
இன்று நண்பர் அழைத்திருந்தார். பத்தாயிரம் மினிமம் கொடுக்கிறார்கள் என்றார். பாருங்கள்.. மாதம் மூன்றாயிரம் சம்பளம், போனஸ் மூன்று மாதம்.
அதனால், கடமை செய்வோம், அந்த ஷணத்தில் வாழ்வோம்...
பொழுதுபோக்கு நூல்களை ஏன் வாசிக்கவேண்டும்?
5 hours ago