Showing posts with label குடிகாரப்பாவிகள். Show all posts
Showing posts with label குடிகாரப்பாவிகள். Show all posts

Wednesday, September 24, 2008

குடிகாரப்பாவிகள்

குடிகாரப்பாவிகள்
திருந்தமாட்டர்களா?
நாளொரு மேனி பொழுதொரு வண்ணம்
குடியால் நாடு முழுகிப்போச்சு!

அப்படி என்ன இருக்கின்றது அதில்?
போதைக்கு தான் இருகிறதே போகம்?
உணவு கொடுப்பது ஒரு நல்ல சுகம்.
அது எதில் தான் வரும்?
நளபாகம் ராஜயோகம்
இப்போ சிலபேருக்கு சரபோஜி யாகம்!

சாத்தான்கள் ஓதும் வேதம்
தாஸ்மாக்கிலெ டீக்கடையிலே
பப்பிலே, அங்காடி தெருவிலே
கோவையிலே ஒப்பணக்கார சந்திலே
தேனியிலே மல்லிகை தெருவிலே
மதுரையிலே மாட்டுதாவனியிலே
பொள்ளாச்சியிலே சந்தையிலே
நெல்லையிலே வாத்தியார் விட்டுலே
திருச்சியிலே மலர்வனத்திலே
ஈரோட்டிலே கருங்கல்பாளயத்திலே
சென்னையிலே பெருங்குடியிலே

எல்லா இடத்திலேயும்
குடிக்கிரான்கள்
குடிகாரப்பாவிகள்
நிருத்தமாட்டாங்களா?

திருந்தாத ஜென்மங்கள்..
குடும்பம் நடுத்தெருவிலே
குழந்தைக்கு பாலில்லே
மனசு தான் செத்து போச்சு!