Saturday, October 25, 2008

பதிவுலகில் எழுபத்தைந்து நாட்கள்

இன்றுடன் நான் பதிவுலகில் எழுபத்தைந்து நாட்கள் பதிவுபோதை மூலம் கடந்துள்ளேன். (சினிமாக்காரன் உள்ளே இருந்து குதிக்கிறான், சாதனை என்று!)

பதிவுலகில் மூழ்கி, பழம் தின்று கோட்டை போட்டவர்கள் இருக்கிறார்கள், நான் எல்லாம் அவர்கள் முன்னாள் சும்மா!

பதினைந்தாயிரம் வாசகர் படிப்பு என்றும் சொல்ல ஆசை தான். ஆனால் பெரிய விஷயம் கிடையாது. சரக்கிருந்தால், தேடி வரும்.

















வாசகர்களுக்கு நன்றிகள். என்னுள் இருக்கும் எழுத்தாளர், நிறைய வாசகர்கள் கேட்கிறார்.

அப்புறம் ஒருவர் என்னிடம் கேட்டார், இந்த பரிசல்காரனும் பதிவுபோதையும் போஸ்டுக்கு பிறகு எப்படி இருக்கு அலெக்சா ராங் என்று... இது முடிவுகள்... (சனிக்கிழமைங்க, டின்னெர் ரெடி ஆகுரவரைக்கும் கொஞ்சம் ...)



எட்டு நாட்களில் நாற்பது பதிவுகள், மூன்றாயிரம் வாசகர்கள் (பக்கங்கள்) படித்தனர், அப்புறம் இந்திய, மலேசிய, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் படிப்பது நல்ல ரீச்.

நன்றி நன்றி.

இண்டர்நெட்டில் பலான படங்கள் ஜாக்கிரதை

இண்டர்நெட்டில் பலான படங்கள் இருபது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இல்லையா?

எல்லோரும் இருக்கும் இன்டர்நெட், படிக்கும் இடம், அதில், மறைமுக தாக்குதல் நடத்த வருகிறார்கள் நெட் திருடர்கள்..

மயங்கி விடாதீர்கள் ஜாக்கிரதை! கம்ப்யுட்டர் காலி!

ஜான் ஸ்டோசல் எழுதுகிறார் இங்கே.

Terror Porn

ஒரு நிமிடம் படித்தவுடன், ஆடி போய்விட்டேன்.

(அப்புறம் மனைவி கேட்கிறாள், பலான கதைகள் படிப்பவர்கள் என்ன ஆவார்கள் என்று... நீங்களே சொல்லுங்கள்.)

நாகர்ஜுனன் பதிவும், என் கேள்வி பதிலும்

நான் தவறாமல் வாசிக்கும் எழுத்தாளர் நாகர்ஜுனன் ஒரு பதிவில் எழுதினார்.... படிக்க இங்கே கிளிக்கவும் ...

அதற்கு நான் எழுதிய ஒரு தொடர்புடைய பதிவு...
Friedrich Nietzsche ப்ரெட்ரிக் நீட்ஷே

நான் போட்ட ஒரு பின்னூட்டத்தை, ஒரு கருத்தாக மதிப்பளித்து, அதற்கு ஒரு விரிவான பதில் கொடுத்துள்ளார். நன்றிகள். :-)

Here is the snippet!

Ramesh said...

//நீட்ஷதான் சொன்னான்: "நம்மால் கடவுளைக் கைவிட்டு விட முடியுமென்று தோன்றவில்லை: ஏனெனில் நாம் இலக்கணத்தைக் கைவிடவில்லை." //

கடவுளை தேடிக்கொண்டே இருக்கிறோம் (இதை போன்ற வரிகள்) சொன்னதும் நீட்ஷே தான்!

அப்புறம் கடைசியில் அவர் சொன்னது... God is dead!

வேறு விஷயம் இருந்தால் எழுதுங்கள்!

நாகார்ஜுனன் said...

நண்பருக்கு

தர்க்க அடிப்படையில் நீட்ஷ முரண்பட்டுச் சிந்திப்பதைப்போல முதலில் தோன்றும். ஆனால் அந்த முரணியக்கத்தின் மூலம் அவர் வந்துசேரும் புள்ளிகளை நிதானமான வாசிப்பின்மூலம் புரிந்துகொள்ளலாம். நம்மைக் கொஞ்சம் இழந்துதான் இதைச் செய்ய வேண்டும்.

கடவுள் இறந்துவிட்டார் என்று நீட்ஷ கூறுவதைப் பரவலாக நேரடி அர்த்தத்தில் பலர் பார்க்கிறார்கள். நீட்ஷ, கேளிக்கையான ஞானம் என்ற புத்தகத்தில்தான் முதலில் மூன்றுமுறை இதுபற்றிப் பேசுகிறார். பிறகு ஜரதுஷ்டிரன் பேசுகிறான் என்ற புத்தகத்தில் பேசுவதைத்தான் நீங்கள் உள்ளிட்ட பலரும் மேற்கோள் காட்டுகிறீர்கள். அந்த முழு வாசகம் ஆங்கிலத்தில் இதோ.

God is dead. God remains dead. And we have killed him. How shall we comfort ourselves, the murderers of all murderers? What was holiest and mightiest of all that the world has yet owned has bled to death under our knives: who will wipe this blood off us? What water is there for us to clean ourselves? What festivals of atonement, what sacred games shall we have to invent? Is not the greatness of this deed too great for us? Must we ourselves not become gods simply to appear worthy of it?

இதை முழுவதும் வாசிக்க வேண்டும். நீட்ஷ கூறுவதற்கு உருவக அர்த்தம் உண்டு. அதாவது அறம், ஒழுக்கம் போன்றவற்றை கடவுள் மற்றும் பிற ஆன்மீக அடிப்படையில் இனியும் அணுக முடியாது என்கிறார். நீட்ஷ இதை ஒரு நெருக்கடியாகக் காண்கிறார். கிறித்துவத்தை வைத்தே இதைக் கூறினார் என்றாலும் பொதுவான அர்த்தத்தில் கடவுளின் குணாம்சங்கள், அல்லது குணாம்சங்கள்-அற்ற-தன்மை பற்றி மதங்கள் பலவும் விவாதித்துவந்திருப்பதோடு வைத்துப்பார்க்கும்போது நீட்ஷ கூறுவதற்குப் புதுப்பரிமாணம் வருகிறது. இதையடுத்து ஒரு பித்தனை நீட்ஷ பேசவைக்கிறார். அவன் பேசுவது நாத்திகவாதிகளை நோக்கி என்பதாகத் தெரிகிறது. அதாவது, தேவவிதி, ஒழுங்கு என்பது இல்லாத நிலையில் எப்படி அறத்தைச் சாத்தியப்படுத்துவது என்பதே கேள்வி.

கடந்த நூற்றாண்டும் சரி, இந்த நூற்றாண்டும் சரி, நீட்ஷவின் சிந்தனையும் எழுத்தும் உலகெங்கும் பலரை இந்தக்கேள்வியைச் சந்திக்கச்செய்கிறது. என்னையும்தான். ஒருவிதத்தில் என் எழுத்துப்பரப்பு முழுதும் இந்தக்கேள்வி தலைகாட்டுகிறது என்பேன். ஆக, இதுதவிர எழுதுவதற்கு எனக்கு வேறுவிஷயமே இல்லை என்று தோன்றுகிறது.

புத்தக வெளியீடு

இது வரை ப்லோக் மூலம் ஸ்பான்சர் ஒன்றும் வரவில்லை... அதனால், என் செலவில், வரும் ஏப்ரலில் வெளியீடு...

அதை பற்றி நான் எழுதிய பழைய பதிவு ஒன்று, இங்கே.

மீண்டும் திவ்யா ( சாந்தி )

இன்னும் டைம் இருக்கிறது, யாரவது முயற்சி செய்து, அவர்கள் விளம்பரம் தர.. ஹி ஹி.

என் நண்பர்கள் அஸ்லம், மூர்த்தியும், விஜயும் முதன்மை ஸ்பான்சர்கள் ஆகிறார்கள்!

ஆட்டு புழுக்கை கவிதைகள்

திவ்யாவின் காதலர்கள் எழுதிய நான் இப்படி ஆகிவிட்டேன் என்று நண்பர்கள் திட்டுகிறார்கள்.

எதற்கு ஆட்டு புழுக்கை கவிதைகள் எழுதுகிறாய் என்றார்கள்...

யோசிக்க வேண்டிய விஷயம்.

அப்புறம், ஒரு பிரபல ஹிந்தி பட இயக்குனருடன் திங்கள் செவ்வாய் சந்திப்பு சென்னையில் திட்டம்.

சோ கொஞ்சம் ப்லோக் நாளை முதல், கம்மியா போடுவேன். அறுக்க மாட்டேன்.

தீபாவளிக்கு என்ன ரிலீஸ்?

தீபாவளிக்கு என்ன ரிலீஸ்?

ஒண்ணுமே தெரியலே... இது ஒரு விடுமுறை காலம்...

டிவி பார்க்கணும்... நல்ல ரெஸ்ட் எடுக்கணும்...

எங்காவது கொஞ்சம் தூரம் டிரைவ் போகணும். புதன் வரை லீவு, இன்னும் ரெண்டு நாள் சேர்த்தால், மெதுவா ஒரு பாண்டிச்சேரி ட்ரிப்?

அப்படியே சென்னை வரை காரிலே போயி மழை பார்கலாம்னு யோசனை!

சிட்டிக்குள்ளே போக வேண்டியது இல்லே, பூந்தமல்லிலே இருக்கு கெஸ்ட் ஹவுஸ்.

பெங்களூர் டு கிருஷ்ணகிரி வந்து ரெண்டு மணி நேரம், அப்புறம் வேலூர் வழியா, ஒரு நாலு மணி நேரம் மேக்சிமம்!

Friday, October 24, 2008

பதிவுகளும் பாதைகளும்

பதிவுகளும் பாதைகளும் வேறு வேறு. அது சில சமயம் போதை ஆகும்.

ஒரு கவிதை அதை பற்றி!

மனதில் இல்லை காயம்
வழியில் எல்லாம் சாணம்
புரிகிறது வெக்கைகள்
ரோட்டில் ஆட்டு புழுக்கைகள்

எச்சில் கோழைகள்
ஊனத்திற்கு எரிமலைகள்
கையுன்றி நடப்பவர்களுக்கு
தெரியும் அதன் கஷ்டங்கள்

போதைகள் சில காவியங்கள்
அவை பயணங்களில் இல்லை
புரியாத மோகங்கள்
அவை காண்ட்ராக்ட் திருமணங்கள்!

*****
This is the post that influenced me to write this கவிதை!

ஊட்டி சென்று வந்த கதை - 2

Thangavel is a good writer, who comments on my blogs!

இந்தியாவின் தேசிய கொடி கேவலபடுத்தபட்டது





கொஞ்ச நேரம் முன்னாடி நண்பர் ஒருத்தர் அனுப்பியிருந்தார்.

எகொர்னை பற்றி

எகொர்னை ஒரு வகை உணவு, பற்றி இங்கே பாருங்கள்..
Acorns of Sessile Oak
கொரியாவில் விரும்பி சாப்பிடும் உணவு. காசு இல்லாதவர்களுக்கு அது சொர்க்கம் கொடுக்கும் உணவு. இந்தியாவில் காட்டு கிழங்கு சாப்பிடுவதை போல.
Dotorimuk muchim (도토리묵무침), a Korean dish made with acorn starch
காட்டில் பன்னிகளும், மான்களும், கரடிகளும் சாப்பிடும் கடலை போன்ற ஒன்று. வாசம் தாங்காது!

அப்புறம் நண்பர் ஒருவர் எழுதுகிறார்... சியோலில் கிம்ச்சி சூப்... உவ்வே.

எகோர்ன்

எகோர்ன் என்பது அமெரிக்காவில் உள்ள கூட்டங்களின் (குடும்பம்?) கூட்டமைப்பு.

நியூ யார்க் டைம்சில் அவர்களை பற்றி சில செய்திகள் படித்தேன்.

இதோ... படியுங்க...

நம்ம ஊர் மாதிரி கள்ளவோட்டு போட போலி வோட்டர்கள் ரெடி பண்ணி இருக்காங்க.

ஜனநாயகம் கிளிஞ்சது போங்க!

பரிசல்காரனின் கவிதை

பரிசல்காரனின் கவிதை (அவர் எழுதுனாரா இல்லே திருப்பூர் கவிஞர் வைரமுத்து எழுதுனாரா தெரியாது!)

அஞ்சலி, உன்னை நினைத்து உறக்கமின்றி இருக்கிறேன்
நீயோ இரக்கமின்றி இருக்கிறாய்!

சூப்பர்!

A poem is one which tells or simulates the state of an author to titillate the feelings of the reader!

மாட்டு சாணி, யானை சாணினு சிலர் கவிதைகளை கிண்டல் பண்றாங்கோ, அதனால் தான் கி.ரா. சொல்ற மாதிரி, அவீங்க இருக்க வேண்டிய இடத்தில் வச்சிருக்கான் அவன்.

கி.ரா. எழுதிய ஒரு வரி, நான் அவரை சென்னையில் ஜெயகாந்தனோடு ஒரு முறை சந்தித்த போது சிலாகித்து போய் சொன்னது.. (வார்த்தைகள் அப்படியே ரீபீட் முக்கியம் இல்லை, மீனிங் இது தானுங்) குழந்தை முலைப்பால் வேண்டாங்குது, மனம் கணம் கனக்க அவள் தூங்கும் குழந்தை பார்த்தாள்.. பின் செவிரிலே, தன் முலைப்பாலை பீச்சி அடித்தாள்...

True story artist! Brought in front of my eyes, the feelings of the village ladies feelings! I have seen the depiction of similar passion scene with dagger in Othello, by Shakespeare.

அப்புறம், பரிசல்காரனின் பதிவு, என் கதை! நெஞ்சை தொட்டது... நான் கேட்க வேண்டிய கேள்விகள், பதில் சொல்லியுள்ளார்!

Thursday, October 23, 2008

Biriyani at Hyderabad

Best Biriyani in Hyderabad Twin Cities in order! (taste differs)

My ex colleagues reco's. (no guarantees)

(1) Alpha near Sec'bad station. People traveling from Mumbai to Calcutta, run in to collect packets, while there is a 20 mintues stop.
(2) Parwaaz, Near Nampally Rly stn
(3) Paradise in the circle + Falooda
(4) Abriruchi on SD Road, Andhra Biriyani
(5) Sailors Inn, Paradise circle, the raitha what goes along is super!
(6) Rajdoot, Koti
(7) Bhagwan Dhaba, Nagpur Highway
(8) X? in RTC X Road, in front of Devi theater

சில பதிவுகள்

சில பதிவுகள் இப்போது நான் ரசித்தேன்...

அவியல்....!

கிழிஞ்ச டவுசரும் கிழியாத மனசும்....

நெஞ்சம் மறப்பதில்லை - இயக்குநர் ஸ்ரீதர்

ஹி ஹி ... எனக்கு ரொம்ப பிடிச்சது ....

தீபாவளி கொண்டாடுவதை நிறுத்தி விடுகிறோம்

வைகோ கைது

வைகோ கைது ஒரு அதிர்ச்யான செய்தி.

மீண்டும் பொடா ஸ்டைல்? POTA was used to arrest the unrest among unemployed youth who take up extremism, not the politicians, unwanted comments! Here TN Govt. will say that POTA bail has been violated. God Speed!

ஆயுதம் ஏந்தி பாடுபடுவோம் என்று சொன்னது , ஒரு பிரிவினை ஆக கருத வேண்டும்!

அஹிம்சா வழி தான் ஜெயிக்கும்.

There is nothing like a soft and steady approach to make your point!

ஒற்றுமையான வாழ்க்கை

ஒற்றுமையான வாழ்க்கை எல்லோருக்கும் தேவை என் நண்பரோடு ஒரு வாக்குவாதம் நேற்று இரவு.

இந்தியர்களும் ஒவ்வொரு இடத்தில் வேறு வேறு கொள்கை வைத்துள்ளார்கள். எனக்கும் அது தான் தோன்றுது.

இந்தியாவில் ஒரு மாதிரி பேசுவார்கள். வெளிநாடு போய்விட்டால்.... அதுவும் திரும்பி வந்து விட்டால்...பெருமை நம்ம ஆட்களுக்கு கை வந்த கலை! வெற்றி கொடி கட்டு படம் வடிவேல் ஞாபகம் இருக்கா?

காவேரி பிரச்சனை வைத்து கன்னடம், தமிழ் என்ற பாகுபாடு!

வேலை
பிரச்சனை வைத்து மராட்டி, பிஹாரி பாகுபாடு!

தேவையா?

ஒரு தாய்நாடு என்ற எண்ணம் வேண்டும். லோகல் ஆளுக்கு முன்னுரிமை கொடுப்பது நல்ல விஷயம்.

இப்போது பெங்களூர் புது ஏர்போர்டில், லோகல் கிராமம் ஆட்களுக்கு தான் முத்தலில் வேலை என்ற கொள்கை. நான் ஒரு டாக்ஸி எடுத்தேன், அந்த டிரைவர் சொல்கிறான், இவ்வளவு ஆயிரம் கொடுத்து ப்ளைட்டில் போகிறீர்கள், எலிகளுக்கு பணம் கொடுக்க கூடாதா? வேலை செய்து சம்பாரிப்பது எதற்கு என்றேன். ஒன்றும் சொல்லவில்லை அவன். கேள்வி கேட்டதால், நான் கொடுக்கும் இருபத்து ருபாய் டிப் போனது அவனுக்கு. யாருக்கு நஷ்டம்?

தமிழ்
ஆள் கன்னடகாரனை திட்டினால் வெட்டிடமாட்டானா பெங்களூரில்?

அதே ஒரு கன்னடக்காரன் தமிழ் ஆளை சென்னையில் திட்டினால்?

அதனால் ஒற்றுமையான வாழ்க்கை எல்லோருக்கும் தேவை.

ஒன்று பட்டு வாழ்வோம் நன்மை செய்வோம்.

Wednesday, October 22, 2008

தீபாவளி கொண்டாடுவதை நிறுத்தி விடுகிறோம்

தமிழ் ஓவியர் என்று என் வயது ஒத்த ஒருவர், பழநிக்காரர் எழுதுகிறார், என் பதிவில் ஒரு பின்னூட்டம் போடுகிறார்! முதலில் நான் தமிழனே கிடையாது! என்னுடைய பழைய பதிவுகள் படித்து பார்த்திருக்கலாமே?

"தீபாவளி தமிழர் விழாவா? சிந்தியுங்கள்!"

என் பதில் இதோ...

இதையும் சிந்தித்து பாருங்கள்.

சுப.வீரபாண்டியனும் ஒத்துக்கொள்வார்! அவரை எனக்கு நன்றாக தெரியும்!

இது ஒரு பண்டிகை - அவ்வளவே! சைன்டிபிக் ஆக தினக் செய்யவும். சப்பைக்கட்டு இல்லை.

அக்டோபர், நவம்பர் மாதங்கள், மலை காலம், குளிர் வாட்டி எடுக்கும்.

அதற்க்கு எதாவது போட்டு எரித்தால், கொஞ்சம் சூடாவது காலை வரை இருக்கும், நிம்மதியாக தூங்கலாம்!

அப்படி வந்தது தான் நரகாசூரன் எரிப்பு. காவியங்கள், கட்டுக்கதைகள்... கூட்டமாக இருந்து பேசி காலம் காலமாய் ஆயிரம் ஆண்டுகளாக வருவது.

அப்புறம், பண்டிகைகள் எல்லாம், ஒரு சந்தோஷ முயற்சி. சொந்தங்கள் வரும்... எழவிற்கு மட்டும் தானா சொந்தம்?

எதற்கு ஞாயிறு லீவு? எல்லாம், ஒரு தினம் குறித்துக்கொண்டு, உலகம் முழுதும் ரெஸ்ட் எடுக்க தான்... அதை போல சிந்தியுங்கள்.

நாத்திகவாதிகர்களாக இருந்து கொண்டு, பெரியார் சிலைக்கு மாலை போடுவது என்னை நியாயம்? மரியாதையை, ஏன் கடவுளுக்கு செய்கிற மாதிரி செய்கிறார்கள்? அநியாயம்.

இதில் நாத்திகம் இல்லை, ஆத்திகம் இல்லை. ஆத்திகர்கள் செய்வது தான் அஞ்சலி. ஆனால் முதலில் நிற்பது கி.வீரமணி தான். கமல் தான். நானும் சென்றிருந்தேன் சுஜாதா செத்த சமயம். கண்ணீர் வேறு! செத்த உடம்பு தானே என்று தூக்கி போட்டு எரிக்க வேண்டியது தானே? எதற்கு மாலை மரியாதை?

ஒன்று தெரியுமா.. சாஸ்திரங்கள் கரைத்து குடித்த என் தாத்தா திரு ரத்தன் டெண்டுல்கர், சொன்னது, ஈம சடங்கு செய்வது, வேசியின் குழந்தைகளுக்கு தான். நல்ல முறையில் பிறந்தவர்கள் எல்லாம் கழுகுக்கு தின்ன போட வேண்டும்.. டாட்டா குடும்பம் இன்னும் அதை தான் செய்கிறது. (பார்சிகள்) எனக்கு அதில் உடன்பாடில்லை. உடல் தானம் செய்யுங்கள் முதலில் ஆத்திகரோ, நாத்திகரோ.

இன்றும் மஹராஸ்த்ராவில் அம்பேத்கர் சிலைக்கு எங்கள் வம்சம் மாலை அணிவிக்காது. புத்த மதம் ஒரு காரணம். நாத்திகவாதிகள் அதிகம், எங்கள் வம்சத்தில்.

என் அப்பா பயங்கர ஆத்திகவாதியாக இருந்து நாத்திகவாதி ஆனவர். அவர் ஒன்றும் எங்களை, தீபாவளி கொண்டாட வேண்டாம் என்று கல்கத்தாவில் சொல்லவில்லை. தடுக்கவில்லை. ஒரு கொண்டாட்டம் தான். புது துணி உடுத்த ஒரு வழி. சந்தோசங்கள் பகிர்ந்து கொள்ள ஒரு வழி. ஸ்வீட் கிடைக்கும். போனஸ் கிடைக்கும் தோழர்களுக்கு.

எங்கள் மராட்டி ராவ் வம்சத்தில்... தலித்.. மர்மயோகி கதை... தீபாவளி கிடையாது.

மனைவி தமிழ் பிராமணாள்... கடவுள் நம்பிக்கை உள்ளவர்... ஆனால் பண்டிகை ஒரு நாட்டு மரபு என்று கொண்டாடும் உணர்வு உள்ளவர்! அவ்வளவு தான்.

எதிர்த்து பேசுபவர்கள், பேசிக்கொண்டு தான் இருப்பார்கள்.

ஏழைகள் இன்றும் மலத்தை உண்டு வாழ்கிறார்கள்... அவர்களுக்கு ஒரு வழி செய்யுங்கள். இந்தியாவை ஏழைகள் இல்லாத நாடாக மாற்றுங்கள்.

ஒரு பிச்சைக்காரர் கூட இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுங்கள், நானும் என் குடும்பமும் தீபாவளி கொண்டாடுவதை நிறுத்தி விடுகிறோம்.

14,000 ஹிட்ஸ் வெகு விரைவில்...


14,000 ஹிட்ஸ் வெகு விரைவில்...

மூன்று நாட்கள் ஆயிரம் பேர்... எப்போதும் சொல்வது. நன்றி. நன்றி.

படம், அப்டேட் செய்வேன் அப்புறம்...

அப்புறம் அலெக்சா ராங்கிங் முன்னேறி விட்டது!

தீபாவளியும் பகவத் கீதையும்

பகவத் கீதை என்ன சொல்கிறது?

கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே.

ஆனால், இந்த தீபாவளி வந்தால்...

ஸ்வீட்ஸ் எதிர்பார்ப்பு...

வேலைக்காரிக்கு சேலை எதிர்பார்ப்பு...

குழந்தைகள் புது டிரஸ் எதிர்பார்ப்பு...

தொழிலாளிகள் போனஸ் எதிர்பார்ப்பு... (என்னிடம் கமிசன் வாங்கும் ஒருவர், போனஸ் கேட்டார்! நிலைமை விலைவாசி என்று போனது பேச்சு)

என் அப்பா கல்கத்தாவில் லேத் ஷாப் வைத்திருந்தார், பின்னாளில் பெரிய தொழில் ஆனது... பழைய உருக்கு இரும்பு, வைத்து, டைடானியம் மிக்ஸ் பார்ட்ஸ் செய்வார்கள். ஒரு ஐந்நூறு டிகிரி சூட்டில் வேலை செய்தால், அந்த காலத்தில் ஒரு நாளைக்கு ஐம்பது அறுபது கூலி. இருபது வருடம் முன்னால்.

தீபாவளி சமயத்தில், நிச்சயம் ஒவ்ஒருவருக்கும் ஆயிரம் ருபாய் கொடுக்க வேண்டும். போனஸ்! அவ்வளவு லாபம் வராது. கொடுத்தால், அதிகம் வேலை செய்து, தொழில் முன்னேறும். இதெல்லாம் ஒரு வகை பிசினஸ் தந்திரம்.

அப்பா கொஞ்ச காலம் முன்பு தொழில் விற்று விட்டார்.

இன்று நண்பர் அழைத்திருந்தார். பத்தாயிரம் மினிமம் கொடுக்கிறார்கள் என்றார். பாருங்கள்.. மாதம் மூன்றாயிரம் சம்பளம், போனஸ் மூன்று மாதம்.

அதனால், கடமை செய்வோம், அந்த ஷணத்தில் வாழ்வோம்...

வாழ்க்கை ஒரு மாயை

ஒன்னுமே புரியலே
உலகத்துலே !
என்னமோ நடக்குது
மர்மாய் இருக்குது !
கண்ணாலே கேட்டதும்
கனவாய் தோன்றுது!
காதலே கேட்டதும்
கதை போல் ஆனது !

சில சமயம் ஒருவருக்கு சில விஷயங்கள் பிடிக்கிறது. பிடிக்காமல் போகிறது.

பிடிக்காவிட்டால், எதற்கு அந்த விஷத்தை செய்ய வேண்டும்?

சில விஷயங்கள் கனவாய் தோன்றும், ஆனால் அவை மாயை!

பொண்டாட்டி ஒன்று தான், மனதில் எத்தனை கனவுகன்னி வேண்டுமானாலும் வைத்துகொள்... (சரியான உவமை இதுவல்ல, மன்னிக்கவும்) ஆனால் ஒழுக்கமாக இரு. உத்தமனாக இரு... உத்தமளாக இரு...

எப்படி?

நான் நியூ யார்க்கில் வேலை செய்த நேரம், காதலும் பட்டிருந்தேன், மனைவியாக வேண்டியவர், ஆறு மணி நேரம் தள்ளி. நான் என் அக்கா விடு போகும் போது, பாதி தூரத்தில்...அவளும் சில மணி நேரங்கள் வண்டி ஓட்டி வருவாள். பாசம், பந்தம்... இருதாலும் முறை தவறி நடக்கவில்லை. போனில் பேசுவதை விட, நேரில் பேசுவது அழகு.

தனிமை ஒரு கொடுமை இல்லை.

நண்பர்கள் எல்லாம், நியூ ஜெர்சி சென்று நூடி பார் போவார்கள். தப்பில்லை. அளவோடு நிறுத்திக்கொண்டால். ஒரு முறை அது என்ன என்று பார்ப்பதற்கு சென்றேன். தப்பில்லை.

ஆனால் சில நண்பர்கள், மாதம் மிச்சம் செய்யும் ஆயிரம் டாலர்களை, பாதி அந்த விசயத்திற்கு செலவு செய்தார்கள். தவறு. வீடு என்று ஒன்று உள்ளது. கேவலம்.

அதே போல தான், லஞ்சம். கை காட்டி விட்டால், இன்சைட் இன்பார்மேசன் கொடுத்தால், கோடிகள் புழலும் பதவி, மோகம் வரும், ஆனால் அதற்கு ஆசைப்பட்டு, பிடிபட்டால்... கேவலம் வேறு இல்லை.

You have to live with principles, and take things as it comes along!

ரஜினி நியூஸ்: பெங்காலி படத்தில் ரஜினி

ஆச்சிரியம் ஆனால் உண்மை! பெங்காலி படத்தில் ரஜினி! ஒரு கௌரவ தோற்றம்.




பாக்யதேவதா என்ற படம் ( பாக்கியம் கொடுக்கும் தெய்வம்) முற்றிலும் புதுமுகங்கள் கொண்டு ஆனது. 1995 வந்த படம்.

டான்ஸ் மாஸ்டர் பிரபு (ரகு) ராம் பர்மன் இயக்கியது.

நான் இன்னும் பார்க்கவில்லை.

தமிழில் வருகிறதாம்... அதில் மீண்டும் ரஜினி அதே கௌரவ வேடத்தில்! (இந்த வருடம்)

ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன், தயவு செய்து குசேலன் மாதிரி மார்கெடிங் ஹைப் வேண்டாம், ப்ளீஸ். வள்ளி மாதிரி இருக்கட்டும்.

சந்திராயன் விண்ணில் பறந்தது

நிலவினில் காலடி வைப்போன் என்று பாடினான் ஒரு கவிஞன்.

அது இந்திய மூலம், ஒரு தமிழனால் நனவாகிறது.

சந்திராயன் விண்ணில் பறந்தது இன்று காலை 6.20 AM.

இந்தியாவிற்கு நிச்சயம் சந்திராயன் தேவை. நிலவை தொடுவோம். ;-)

உலகிற்கு நம் அறிவை காட்டலாம். நிலவிலிருந்து சில கனிமங்கள் எடுத்து வரலாம்.
Click for full image
நிலா அனைவரின் சொத்து. பிளாட் போட்டு விற்று விடாதீர்கள், அரசியல்வாதிகளே!

கொஞ்ச அதிகம் பாசம் நிலா மீது, என்னை போன்ற கவிஞர்களுக்கு. (நடிகை நிலா இல்லை ;-))

ராஜ் தாக்கரே ஒரு மடையன்

ராஜ் தாக்கரே ஒரு மடையன் , எனக்கு ஒரு வகையில் சொந்தக்காரன் கூட.

மகாராஷ்டிரா நவ நிர்மான் சென என்ற கட்சி அமைப்பு நடத்தும் ஒரு பயங்கரவாதி.

நாங்கள் மராட்டிகள், அதை கேட்டோமா? என்னத்தை நவ நிர்மான் செய்ய போகிறான்! புனே மாநகராட்சி தேர்தலில், சரத் பவாரிடம் கையுட்டு வாங்கி வோட்டு போட்ட கட்சி தானே அது?

போலிஸ் நல்லது செய்துள்ளார்கள், ரொம்ப காலம் கழித்து!

அனைவரும் பயந்து, வீட்டிற்க்கு வெளியே போவதில்லை. ஸ்கூல்கள் பயந்து லீவு விடுகிறார்கள். பத்தி கடைகள் மூடிவிட்டன.

இது நாட்டுக்கு நல்லது இல்லை. ஒருவர், மற்றவர்களுக்கு விட்டு கொடுப்பது அழகு. சரி யு.பி. பீகார் ஆட்கள் வந்து பரீட்சை எழுதினால், இந்த நாய்களுக்கு எங்கே சொரிகிறது? படிக்க வேண்டியது தானே. படிக்காதவர்கள், வேலை இல்லாமல் கல்லை கையில் எடுப்பது அழகா?

கலெக்டர்கள் என்ன செய்கிறார்கள்?

தவறு செய்யும் கலகக்காரர்களை, காலில் சுட ஆர்டர் போட வேண்டாமா? நான் மகாராஷ்டிரா கேடர் வாங்கியிரிந்துருக்க வேண்டும்!

முதலில் இந்தியாவை சரி செய்துவிட்டு, வெளி நாடுகள் பற்றி நினைப்போம்.

தமிழ்நாட்டு அரசியல் பரவாயில்லை! வாழ்க!

Tuesday, October 21, 2008

Confessions of an Economic Hitman


The book by John Perkins, "Confessions of an Economic Hitman" is a mind thriller, pot boiler of people who wants to understand how the American market works in the financial sector.

The book was published in 2004, and had rave reviews, and was on New York Times bestseller list for a long time.

See the picture cover! (Mafia like eh?)

அமெரிக்காவின் தந்திரங்களை உலகிற்கு சுட்டி காட்டும் ஒரு புத்தகம் இது.

எப்படி கம்முன்னிச்டுகளை எதிர்க்க ஒரு ஆயுதம் எடுக்கலாம் என்று வளர்ந்த நாடுகளுக்கு ஒரு வம்ச விருத்தி ஐடியா கொடுத்த ஆட்கள் இருந்த என்.எஸ்.ஏ. என்ற அமைப்பின் ஒரு அங்கமாக வேளை பார்த்தவர், உண்மை சொல்கிறார்.

இது ஒரு புனைவு என்று சொல்லி விடுவார்கள், உயிர் தப்பிக்க வேறு நாட்டில்!

வெள்ளை புலி

அரவிந்த் அடிகா எழுதிய வெள்ளை புலி (THE WHITE TIGER) என்ற ஆங்கில நாவல் தான், மேன் பூக்கேர் பரிசு வென்றது, இந்த வருடத்துக்கு உரியது. (2008)



அரவிந்த் அடிகா சென்னையில் பிறந்து (ஒரு கன்னடிகர்) மங்களூரில் வளர்ந்து, ஆஸ்த்ரேலியாவில் படித்து செட்டில் ஆகி, திரும்பவும் வேலைக்காக மும்பையில் வாழ்கிறார். 34 வயது ஆகிறது.

இந்தியாவின் இன்னொரு பகுதி என்ற வகையில் (ரொட்டி தண்ணீரில் உப்பு சேர்த்து தொட்டு சாபிடுவது ஒரு துக்கமான சீன்) கஷ்டங்களை, கலக்கியுள்ளார். ஓர் ஏழை குடும்பத்து டிரைவர், ஒரு பணக்காரர் குடும்பத்தில் வேலைக்கு சேர்ந்த பிறகு நடக்கும் சம்பவங்கள் (அந்த குடும்பத்துக்கு அரசாங்க பலம்...). தமிழ்நாட்டில் நடப்பது போல இருக்கிறது!

அதை தான் வெளி நாடுகளில் விரும்புகிறார்கள்? Blatant exploitations of human sorrows!

ஒருவன் நன்றாக இருந்தால் யாருக்கும் கவலை இல்லை. கஷ்டம் வந்தால், பங்கு போட யாரும் வரமாட்டார்கள்.

There is a message in this irony!

Friedrich Nietzsche ப்ரெட்ரிக் நீட்ஷே

ப்ரெட்ரிக் நீட்ஷே ஒரு தத்துவ ஞானி!

அவருடைய கோட்பாடுகள் விசித்திரமானவை!

கடவுளை தேடிக்கொண்டே இருக்கிறோம் (இதை போன்ற வரிகள்) சொன்னதும் நீட்ஷே தான்!

கமல் பட டயலாக் (சுஜாதா பாணி) "கடவுள் இருந்திருந்தா நல்ல இருந்திருக்கும்..." Expectations!

அப்புறம் கடைசியில் அவர் சொன்னது... God is dead! இது ஒரு மிக பேமஸ் ஆன ஒன்று!

****

ஹிந்துக்கள் பற்றி படித்திருந்தால், அவருக்குக்கு messiah பற்றி தெரிந்திருக்கும். அவர்களே (சாயி பாபா, அம்மா அம்ரிடானந்த மாயி போன்றவர்கள்) கடவுளாக மதிக்கிறார்கள்!

என் மனைவி தீவிர சாயி பாகத்தை. ஷிர்டி சாயி பாபாவை கடவுளாக நினைத்து கும்பிடுகிறாள்! எதற்காக கும்பிடுகிறாய் என்றேன்! மதித்து என்றாள்... There lies the meaning of worship!

வேறு விஷயம் இருந்தால் எழுதுங்கள், கேளுங்கள்! என்னால் முடிந்தவரை சொல்கிறேன்.

தமிழ் ஈழம் சில கேள்விகள்

சில பதிவுகள், பதிவர் வட்டம் கொஞ்சம் நிறைய எழுதுகிறார்கள்.

ரஜினி மாதிரி நான் வாய்ஸ் கொடுக்க நினைக்கவில்லை.

சில எண்ணங்களை பதிவு செய்கிறேன். பிறப்பால் மராட்டி என்றாலும் (ராஜ் தாக்ரே மாதிரி இல்லை) இப்போது மனைவி தமிழ், குழந்தைகள் தமிழராக வாழ்கிறோம்.

தமிழ் ஈழம் சில கேள்விகள் .....

இதை படியுங்கள்...

ஈழம் குறித்து கேள்வி கேட்ட தூயாவிற்காக...

அப்புறம்
இதை படியுங்கள்..

ஈழம் தொடர்பாக தமிழகத்தில் நடக்கும் கேலிக்கூத்து

இப்போ நான்...

1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்?

நியூஸ் பேபரில் படிப்பது. ஹிந்துவில் அருமையான நடு நிலை கட்டுரைகள் வருகின்றன. நண்பர்களுடன் உரையாடல். அப்புறம் மனைவயின் தமிழ் சொந்தம் வெளியுறவு துறையில் இறந்தார், கொலோம்புவில். இப்போது திரும்பி வந்து விட்டார்.

கண்டி, கொலோம்போ சென்ற அனுபவங்கள் அருமை. பயம். காஸ்மீரில் பயத்தோடு சென்ற வந்த மாதிரி.

தமிழர்கள், ஸ்ரீ லங்கா அரசாங்கத்திற்கும், சில ஆயுதம்
ந்தியவர்களுக்கு கொடை கொடுத்து, திண்டாடுகிறார்கள். எனக்கு தெரிந்த ஈழம் தமிழர்கள், சென்னை மற்றும் திருச்சியில் இருக்கிறார்கள். அவர்களிடம் போலிஸ் நடக்கும் விதம், கட்டாய வசூல், கொடுமை!

அந்த காலத்தில் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள், சிங்களர்களால்... கொடுமை படுத்தப்பட்டு, இப்போது இந்த நிலைமை.
பிரிந்து பிரிந்து போராடுகிறார்கள் என தோன்றுகிறது. ஒற்றுமை இருந்தால், அஹிம்சா வழியில் வெற்றி உண்டு.

ஐந்து அமைப்புகள் இருந்தால், வருடம் ஒருவர் தலைமை பொறுப்பு மாற்றி ஆளேலாம். ஒருவரே வாழ்க்கை பூராம் தலைவராக இருக்க நினைப்பது தான் சிலருக்கு வயிற்று எரிச்சல் ஆகிறது!

யாழ்பாணத்தில் தமிழ் முஸ்லிம்கள், மற்றும் தலித்கள் வேற்றுமையாக பார்கிறார்களாம். கொடுமைங்க இது.

கவிஞர் காசி அனந்தன் தெரியும்.

சிங்களர் தமிழ் மொழி விற்பன்னர்களாக இருப்பதும் தெரியும். உதாரணம் எழுத்தாளர்கள் பத்மநாபா, மற்றும் ஸ்ரீ பண்டாரநாயகே.


2. தமிழீழத்திற்கு உங்கள் ஆதரவு எந்த அளவிற்கு உண்டு?

ஆயுதம் எடுத்து போராடுவது தவறு என்று நினைப்பவன் நான். ஏன் என்றால், நீங்கள் அடித்தால், திருப்பி அடிக்கிறார்கள். இரண்டு பக்கமும் சாவுகள். கஷ்டமாக இருக்கிறது, ஒரு உயிர் மடிந்தாலும். நாடு பிரிப்பது நார்வே சொல்வது மாதிரி கொஞ்சம் கஷ்டமான விஷயம். தனியாட்சி மாநிலம் என்பது உடனே வேண்டும்.

கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான்.

3. ஈழத்து செய்திகளை ஆர்வத்துடன் படிப்பீர்களா? எங்கு படிப்பீர்கள்?

இனணயம். ஹிந்து. ஸ்ரீ லங்கா அரசின் வாதங்கள் புரியவில்லை. அவர்களை முதலில் நிறுத்த சொல்லுங்கள் என்கிறார்கள், என் என்றால் இவர்கள் நிறுத்தினால், அவர்கள் பலத்த சேதம் விளைவிக்கிரார்களாம்.

அப்புறம்
ஸ்ரீ லங்கா முழுதும் ஏன் மக்கள் ஒருமித்த கருத்து தெரிவிக்க வில்லை? மதம் தானே காரணம்?

சில நண்பர்கள் (கனடாவில், யுரோப்பில்) சொல்வது கேட்பது கஷ்டம். அங்கு டாக்ஸ் அதிகம், அதை கட்டி, பிறகு, ஆயுதம் எடுத்து போராடுபவர்களுக்கு கொடை என்று ஒரு வேலை உணவு கம்மி செய்து உண்டு வாழ்கிறார்களாம். இளைஞ்சர்கள் கட்டாயமாக போதை மருந்து கடத்தல், விற்பனை என்று மனம் வேறு திசையில் போகிறது என்கிறார்கள். வேலை செய்து சம்பாரித்து குடும்பத்தை காப்பாற்றுவது அவர்கள் முதல் கடமை.

சார்க் ஒப்பந்தம் படி, அனைத்து சார்க் நாடுகள் ஒன்றுடன் ஒன்று ஆயுதம் கொடுத்து, வேற்று நாடுகளிடம் இருந்து காப்பாற்றுவது ஒரு மிக பெரிய ஒப்பந்த நிர்பந்தம். அமேரிக்கா அல்லது சீனா நம்மை (இன்வெட்) கடல் வழி பிடிக்க கூடாது அல்லவா?

அதே மாதிரி நாமும் இன்னொரு சார்க் நாட்டை
இன்வெட் செய்ய முடியாது, சிக்கிம் பிறகு இப்படி ஒரு நிர்பந்தம். யாருக்கு தெரியும் அதை பற்றி?

4. அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக ஒலிக்கும் குரல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?

திடீர் என்று அறிவிப்புகள் வருகின்றன. அரசியல் வேறு, மக்கள் மனம் வேறு என்று கொள்ள கூடாது. இங்கு வந்திருக்கும் அகதிகளுக்கு, நல்ல முறையில் உதவி செய்தால் போதும்.

தினம் அறிக்கைகள் கொடுக்க வேண்டும் பழ.நெடுமாறன், வைக்கோ போல.

5. ஈழத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு சொல்ல விரும்புவது?

கவலை பட வேண்டாம். ஆயுதம் இல்லாத அறப்போர், நிச்சயம் வெற்றி பெரும். எல்லோரும் ஒற்றுமையாக பாடு படுங்கள். ஜாதி மதம் பார்க்க வேண்டாம். கடவுள் இருக்கிறார்!




கூபாவும் பிடெல் காஸ்ட்ரோவும்

Fidel Castro

கூபா என்றாலே எல்லோருக்கும் நினைவில் வருவது பிடெல் காஸ்ட்ரோ தான். அவர் தம்பி ரவுல் காஸ்ட்ரோ தான் இப்போது கூபாவின் தலைவர். அப்புறம் கூபான் சுருட்டு, உலக பேமஸ். ஒரு சுருட்டு 600 ருபாய் என்கிறார்கள்.

புரட்சி 1956 முதல் 1958 வரை நடந்தது. ஜனவரி 1958 முயற்சி வெற்றி.

1959 ப்ரைம் மினிச்டெர் ஆனார் பிடெல் காஸ்ட்ரோ. 1976 ப்ரெசிடென்ட் ஆனார். குருஷேவ் (ரஷ்யா) தவிர அதிகம் நாள் ப்ரெசிடென்ட் ஆக இருதவர் இவர்.

கூபாவின் கம்யூனிஸ்ட் பார்டியை 1965 முதல் வழி நடத்தினார். ஆயுதம் ஏந்தி போராடியவர். அப்படியும் ஒரு வழி என்று தோற்றுவித்தார். சே குவாராவுன் நெருங்கிய நண்பர்.

மக்களுக்கு தேவையான உணவு, கல்வி மற்றும் பொருளாதார சீர் திருத்தங்கள் கொண்டு வந்தவர். மனிதனை மனிதனாக வாழ வைக்கும் பாலிசிகள். கலைஞர் கருணாநிதி சந்திக்க விரும்பும் தலைவர்.

சொகுசு வாழ்க்கை வேண்டுவோர் ஓடியது அமெரிக்காவிற்கு. அதனால், அமேரிக்கா அகதிகள் அதிகம் சேர்த்தார்கள். ப்ளோரிடா மாகாணம் கூபர்கள் அதிகம் இருக்கும் மாநிலம். கரை விட்டு கரை சேர்பவர்கள் அதிகம். இது ஒரு வகையில் நல்லதா கெட்டதா யாருக்கும் தெரியாது.

ரஷ்யாவிற்கு சப்போர்ட் செய்ததால், அணு குண்டு போடுவதாக மிரட்டல் எதிரொலி... அமேரிக்கா பிடெல் காஸ்ட்ரோவை கொலை செய்ய முயற்சி எல்லாம் தோல்வி. ஜான் கென்னெடி முதல் எல்லா அமேரிக்கா ப்றேசிதேன்ட்களும் அவர் மீது தாக்குதல், இப்போது வரப்போகும் ஒபாமாவை தவிர.

1956 முதல் நடந்த சுபன் ரேவலுசன் எல்லோரும் படிக்க வேண்டிய ஒன்று. மக்கள் சக்தி மகத்தான சக்தி.

என்ன சொகுசு வாழ்க்கை வேண்டாம் என்பார்கள்!

பிடெல் காஸ்ட்ரோ 1995 யு.என்.இல் ஆற்றிய உரை மிகவும் பிரபலம்.

பிடெல் காஸ்ட்ரோ வயது இப்போது ... 82. பிறந்த தேதி ஆகஸ்ட் 13, 1926.

சில கதைகள் அறிமுகம்

நண்பரின் ப்லோக் படித்து கொண்டு இருந்தேன்.

அதில் அறிவியல் கதைகள் இரண்டு எழுதியதை, மீண்டும் வாசித்தேன். வித்தியாசமான கதைகள்.

நீங்களும் படிக்கலாம்.

கூடு விட்டு கூடு

வேலை

சுஜாதாவின் அறிவியல் கதைகள் எனக்கு பிடிக்கும். அது மாதிரி நானும் முயற்சி செய்ய வேண்டும்!

Monday, October 20, 2008

யார் இந்த மேதை?

யார் இந்த மேதை?

ராமராஜன்
, கரகாட்டக்காரன் புகழ்! லேட்டஸ்டா வரார்! (லேப்டாப் இருக்கு!)

எங்கிட்ட அந்த கரகாட்டக்காரன் டிவிடி இருக்கு. சென்பகமே பாடல் அருமை.

நடிகர் நளினியின் புருஷன் (?)

அம்மா கட்சியில் இருப்பவர்!

ரஜினிகாந்த், கமல் படங்களை விட வசூல் அள்ளியவர்!

மேதை, வெற்றிபெறும்!

கந்தசாமியின் அறிவுத்திறன்

எல்லோரும் ஜோக் சொல்கிறார்கள். திவ்யாவும் ஒபாமா ஜோக் என்று சப்போர்ட் செய்பவரையே கலைக்கிறார்! கொடுமைங்!

சரி நானும் கொஞ்சம் தமிழ் வாசத்துடன் எனக்கு தெரிந்த ஜோக்ஸ் எழுதுறேன்!

மறக்க முடியாத சிறு துளி இது!

***

கந்தசாமியின் அறிவுத்திறன் , எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அவ்வளவு அட்டகாசமாக பேசுவான். எல்லோரும் அவனை நம்பிவிடுவார்கள். நீங்களும் படித்து பாருங்க.

ஒரு நாள், அவன் நின்று நிலவை பார்த்துக்கொண்டு இருந்தான்.

அங்கு அவனை கடந்த ரங்கசாமி, "என்ன கந்தசாமி செய்யறே" என்றுகேட்டான்.

அதற்கு கந்தசாமியின் பதில் "நான் சென்னையிலே பார்த்தே நிலா மாதிரியே இருக்கு இது!"

***

ஒரு நாள், கந்தசாமி ஆற்று ஓரமாக நடந்து போய்க்கொண்டு இருந்தான்.

அப்போது அவன் காலில் ஒரு மண்டை ஓடு இடறியது.

உடனே பக்கத்தில் குழி தோண்டி தேட ஆரம்பித்தான்.

அதை கவனித்த ரங்கசாமி, "என்ன கந்தசாமி தேடறே" என்று கேட்டான்.

கந்தசாமியின் அறிவு பதில் "இது பெரிய வயசு மண்டை ஓடு. சின்ன வயசுது கிடைக்குதா தேடறேன்" என்றான்.

***

ஒரு நாள் கந்தசாமி, பனை மரத்தடியில் நின்று கொண்டே இருந்தான்.

அதை கவனித்த ரங்கசாமி " என்ன கந்தசாமி வெகு நேரம் இங்கே நிக்குறே" என்றான்.

கந்தசாமியின் அறிவான பதில், "ஒண்ணுமில்லே. இந்த பனை மரத்து மேலேஒரு காக்க உட்கார்ந்து இருக்கு. பனம் பழம் விழாதானு பாக்குறேன்" என்றான்.



சொல்லாடல்

சுகத்திற்கு இல்லை சொல்லாடல்
மனதிற்கு இல்லை தள்ளாடல்

வார்த்தைகள் வேண்டாமடி கண்ணே
உன் மௌனம் ஒன்று போதுமே!

நீ பேசும் மொழி தாலாட்டு
இதமாய் இருக்கிறது உன் பாட்டு!

காதலுக்கு ஏதடி கண்
கண்மூடி காதை வருடு தெரியும்!

(கவிதை காலையில் எழுதினேன்!)

**************
படித்ததில் பிடித்தது!

ஜ்யோவ்ராம் சுந்தரின் பார்வைப் பிழை .... நல்ல கவிதை! 1992 என்று சொல்கிறார்... நான் தமிழ் தட்டு தடுமாறி, என் மனைவி சொல்லிகொடுக்க படித்த வருடம்.

இப்போது புரிந்திருக்கும், ஏன் என் புது தமிழ் வாத்தியார் என்று சொன்னேன் என்று!

*************

அப்புறம் the யூசுவல். ஆயிரம் ஹிட்ஸ் இன் the போர்த் டே! 13000+ ஹிட்ஸ். 70 நாட்கள். அக்டோபரில் மட்டும் எழாயிரம் ஹிட்ஸ்!

நன்றி
.

கொஞ்சம்
ஸ்லோ தான்..

பரவாயில்லை
. திடம் முக்கியம்!


அப்புறம் என்னுடைய மலேசியா வாசகர்கள், என்னுடைய அலெக்சா ரேங்க் இம்ப்ரூவ் செய்தார்கள்!

அமேரிக்கா தேர்தல்: ஒபாமா நிச்சயம் வெற்றி

எல்லோரும் அமேரிக்கா தேர்தலில் நிச்சயம் ஒபாமா வெற்றி பெறுவார் என்று கருத்து கூறுகிறார்கள்...

அமேரிக்காத் தேரு பாருடா

ஒபாமாவின் வெற்றி உறுதி

OBAMA it is?

ஆறு பாயிண்ட் வோட்டுக்கள் வித்தியாசம் என்கிறார்கள், போல் பண்டிட்ஸ்.

சரி ஒபாமா வெற்றி பெற்றால், என்னுடைய எச்.எப்.சி.எல் ஸ்டாக்குகள், மீண்டும் 2500 ருபாய் தொடுமா? ஓர் லட்சம் போட்டது இப்போ 2450 ரூபாய்கள் மட்டும். கூல்!

இந்த அமைதில் மேல் பூனைகள் வோட்டுக்கள், கொஞ்சல் விசித்திரமானவை!

ஒபாமா வெற்றி பெறட்டும். வாழ்த்துக்கள்!

உணவு பழக்கங்கள்

என்னுடைய உணவு பழக்கங்கள் தாரு மாறானவை. அதனாலேயே வெயிட் போட்டுள்ளேன்.

ஒரு மனிதன் உண்ணும் நேரங்கள்... இப்படி இருக்கு வேண்டும்!

காலை உணவு - 8 மணிக்குள். (அளவு குறைவு, ஜூஸ் முடிந்தால் நிறைய!)

இடையில் ஒரு சிறு ஸ்நக் அல்லது ஓர் டீ. 11 மணிக்கு.

மத்திய உணவு 1 மணிக்கு. 2 மணிக்குள் முடித்து விடுங்கள். ஸ்வீட் வேண்டாம்! தயிர் குறைத்து, உப்பு இல்லாமல்.

சாயந்திரம், கிட்னிச்க்கு நீர் வேண்டும், 4 டு 7, அதனால், நிறைய நீர் குடியுங்கள். காப்பி அளவாய்! ஜிம் செல்லெலாம்.

ஒரு சிறு ஸ்நாக். இரண்டு பிஸ்கட் அல்லது ஒரு பவேர் பார். ஜிம் சென்றால்!

இரவு உணவு, 7 டு 8, நல்ல டைம். எப்படியும் படுக்க போகும் முன், 1 மணி நேரம் முன்னால், உண்டுவிடுங்கள்!

முடிந்த வரை, கொழுப்பு இல்லாத உணவு சாப்பிடவும். வெஜிடரியன்.

இதை தான் என் டாக்டர் அக்காவும் பரிந்துரை செய்கிறார்!

(என்னுடைய ஸ்நாக் - பொறி மட்டும் இப்போது, வெயிட்! 30 கிலோ ஜாஸ்தி!)

Sunday, October 19, 2008

என்னுடைய ஆங்கில பதிவு: நூறாவது போஸ்ட்

என்னுடைய ஆங்கில பதிவு - Astrology and Ayurveda

அதில் நான் ஜோடிதம் மற்றும் ஆயுர்வேதம் பற்றி எழுதுகிறேன், கொஞ்ச நாட்களாக! சில சமயம் வெறும் ஆன்மீக கட்டுரைகள் மட்டும்...

அதில் இன்று நூறாவது போஸ்ட் , எழுதியுள்ளேன்!

இன்று அதிசயமாக, 5000 ஹிட்ஸ் - மிகவும் சந்தோசம்! தினம் ஒரு ஐம்பது பேராவது படிக்கிறார்கள்!

நன்றி. Thanks.

யு ஆர் ஹியர் - மீனாக்ஷி ரெட்டி மாதவன்

யு ஆர் ஹியர் என்ற புத்தகம் எழுதியவர் மீனாக்ஷி ரெட்டி மாதவன்... தையிரியம் ஜாஸ்தி! சில பின் நவீனத்துவ கதைகளை குட்டி எழுதுபவர்கள், இவரை பார்த்து காப்பி அடிக்கலாம்! அந்த புக் வாங்க, இங்கே க்ளிக்கவும்.
You Are Here, Meenakshi Reddy Madhavan, 0143064347
அவர் ஒரு ஆங்கில ப்லோகும் எழுதுகிறார்... The Compulsive Confessor
http://www.penguinbooksindia.com/14082008_pg8.jpg

மீண்டும் எழுதுகிறேன்

மீண்டும் எழுதுகிறேன்

யாரும், எதுவும் என்னை எழுத நிறுத்தவில்லை....

ஒரு சிறு ஓய்வு தான்... கமண்ட்ஸ் தான் போடுகிறேனே?

ப்லோக் செய்வது ஒரு ஜாலிக்கு தான்... தொழில் பார்த்துவிட்டு.

இது என் இடம், வேலையை பாத்துட்டு போங்க! ஹி ஹி