Tuesday, October 21, 2008

தமிழ் ஈழம் சில கேள்விகள்

சில பதிவுகள், பதிவர் வட்டம் கொஞ்சம் நிறைய எழுதுகிறார்கள்.

ரஜினி மாதிரி நான் வாய்ஸ் கொடுக்க நினைக்கவில்லை.

சில எண்ணங்களை பதிவு செய்கிறேன். பிறப்பால் மராட்டி என்றாலும் (ராஜ் தாக்ரே மாதிரி இல்லை) இப்போது மனைவி தமிழ், குழந்தைகள் தமிழராக வாழ்கிறோம்.

தமிழ் ஈழம் சில கேள்விகள் .....

இதை படியுங்கள்...

ஈழம் குறித்து கேள்வி கேட்ட தூயாவிற்காக...

அப்புறம்
இதை படியுங்கள்..

ஈழம் தொடர்பாக தமிழகத்தில் நடக்கும் கேலிக்கூத்து

இப்போ நான்...

1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்?

நியூஸ் பேபரில் படிப்பது. ஹிந்துவில் அருமையான நடு நிலை கட்டுரைகள் வருகின்றன. நண்பர்களுடன் உரையாடல். அப்புறம் மனைவயின் தமிழ் சொந்தம் வெளியுறவு துறையில் இறந்தார், கொலோம்புவில். இப்போது திரும்பி வந்து விட்டார்.

கண்டி, கொலோம்போ சென்ற அனுபவங்கள் அருமை. பயம். காஸ்மீரில் பயத்தோடு சென்ற வந்த மாதிரி.

தமிழர்கள், ஸ்ரீ லங்கா அரசாங்கத்திற்கும், சில ஆயுதம்
ந்தியவர்களுக்கு கொடை கொடுத்து, திண்டாடுகிறார்கள். எனக்கு தெரிந்த ஈழம் தமிழர்கள், சென்னை மற்றும் திருச்சியில் இருக்கிறார்கள். அவர்களிடம் போலிஸ் நடக்கும் விதம், கட்டாய வசூல், கொடுமை!

அந்த காலத்தில் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள், சிங்களர்களால்... கொடுமை படுத்தப்பட்டு, இப்போது இந்த நிலைமை.
பிரிந்து பிரிந்து போராடுகிறார்கள் என தோன்றுகிறது. ஒற்றுமை இருந்தால், அஹிம்சா வழியில் வெற்றி உண்டு.

ஐந்து அமைப்புகள் இருந்தால், வருடம் ஒருவர் தலைமை பொறுப்பு மாற்றி ஆளேலாம். ஒருவரே வாழ்க்கை பூராம் தலைவராக இருக்க நினைப்பது தான் சிலருக்கு வயிற்று எரிச்சல் ஆகிறது!

யாழ்பாணத்தில் தமிழ் முஸ்லிம்கள், மற்றும் தலித்கள் வேற்றுமையாக பார்கிறார்களாம். கொடுமைங்க இது.

கவிஞர் காசி அனந்தன் தெரியும்.

சிங்களர் தமிழ் மொழி விற்பன்னர்களாக இருப்பதும் தெரியும். உதாரணம் எழுத்தாளர்கள் பத்மநாபா, மற்றும் ஸ்ரீ பண்டாரநாயகே.


2. தமிழீழத்திற்கு உங்கள் ஆதரவு எந்த அளவிற்கு உண்டு?

ஆயுதம் எடுத்து போராடுவது தவறு என்று நினைப்பவன் நான். ஏன் என்றால், நீங்கள் அடித்தால், திருப்பி அடிக்கிறார்கள். இரண்டு பக்கமும் சாவுகள். கஷ்டமாக இருக்கிறது, ஒரு உயிர் மடிந்தாலும். நாடு பிரிப்பது நார்வே சொல்வது மாதிரி கொஞ்சம் கஷ்டமான விஷயம். தனியாட்சி மாநிலம் என்பது உடனே வேண்டும்.

கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான்.

3. ஈழத்து செய்திகளை ஆர்வத்துடன் படிப்பீர்களா? எங்கு படிப்பீர்கள்?

இனணயம். ஹிந்து. ஸ்ரீ லங்கா அரசின் வாதங்கள் புரியவில்லை. அவர்களை முதலில் நிறுத்த சொல்லுங்கள் என்கிறார்கள், என் என்றால் இவர்கள் நிறுத்தினால், அவர்கள் பலத்த சேதம் விளைவிக்கிரார்களாம்.

அப்புறம்
ஸ்ரீ லங்கா முழுதும் ஏன் மக்கள் ஒருமித்த கருத்து தெரிவிக்க வில்லை? மதம் தானே காரணம்?

சில நண்பர்கள் (கனடாவில், யுரோப்பில்) சொல்வது கேட்பது கஷ்டம். அங்கு டாக்ஸ் அதிகம், அதை கட்டி, பிறகு, ஆயுதம் எடுத்து போராடுபவர்களுக்கு கொடை என்று ஒரு வேலை உணவு கம்மி செய்து உண்டு வாழ்கிறார்களாம். இளைஞ்சர்கள் கட்டாயமாக போதை மருந்து கடத்தல், விற்பனை என்று மனம் வேறு திசையில் போகிறது என்கிறார்கள். வேலை செய்து சம்பாரித்து குடும்பத்தை காப்பாற்றுவது அவர்கள் முதல் கடமை.

சார்க் ஒப்பந்தம் படி, அனைத்து சார்க் நாடுகள் ஒன்றுடன் ஒன்று ஆயுதம் கொடுத்து, வேற்று நாடுகளிடம் இருந்து காப்பாற்றுவது ஒரு மிக பெரிய ஒப்பந்த நிர்பந்தம். அமேரிக்கா அல்லது சீனா நம்மை (இன்வெட்) கடல் வழி பிடிக்க கூடாது அல்லவா?

அதே மாதிரி நாமும் இன்னொரு சார்க் நாட்டை
இன்வெட் செய்ய முடியாது, சிக்கிம் பிறகு இப்படி ஒரு நிர்பந்தம். யாருக்கு தெரியும் அதை பற்றி?

4. அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக ஒலிக்கும் குரல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?

திடீர் என்று அறிவிப்புகள் வருகின்றன. அரசியல் வேறு, மக்கள் மனம் வேறு என்று கொள்ள கூடாது. இங்கு வந்திருக்கும் அகதிகளுக்கு, நல்ல முறையில் உதவி செய்தால் போதும்.

தினம் அறிக்கைகள் கொடுக்க வேண்டும் பழ.நெடுமாறன், வைக்கோ போல.

5. ஈழத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு சொல்ல விரும்புவது?

கவலை பட வேண்டாம். ஆயுதம் இல்லாத அறப்போர், நிச்சயம் வெற்றி பெரும். எல்லோரும் ஒற்றுமையாக பாடு படுங்கள். ஜாதி மதம் பார்க்க வேண்டாம். கடவுள் இருக்கிறார்!




1 comment:

Vinitha said...

படிப்பதற்கு கஷ்டமாக உள்ளது.