Wednesday, October 22, 2008

வாழ்க்கை ஒரு மாயை

ஒன்னுமே புரியலே
உலகத்துலே !
என்னமோ நடக்குது
மர்மாய் இருக்குது !
கண்ணாலே கேட்டதும்
கனவாய் தோன்றுது!
காதலே கேட்டதும்
கதை போல் ஆனது !

சில சமயம் ஒருவருக்கு சில விஷயங்கள் பிடிக்கிறது. பிடிக்காமல் போகிறது.

பிடிக்காவிட்டால், எதற்கு அந்த விஷத்தை செய்ய வேண்டும்?

சில விஷயங்கள் கனவாய் தோன்றும், ஆனால் அவை மாயை!

பொண்டாட்டி ஒன்று தான், மனதில் எத்தனை கனவுகன்னி வேண்டுமானாலும் வைத்துகொள்... (சரியான உவமை இதுவல்ல, மன்னிக்கவும்) ஆனால் ஒழுக்கமாக இரு. உத்தமனாக இரு... உத்தமளாக இரு...

எப்படி?

நான் நியூ யார்க்கில் வேலை செய்த நேரம், காதலும் பட்டிருந்தேன், மனைவியாக வேண்டியவர், ஆறு மணி நேரம் தள்ளி. நான் என் அக்கா விடு போகும் போது, பாதி தூரத்தில்...அவளும் சில மணி நேரங்கள் வண்டி ஓட்டி வருவாள். பாசம், பந்தம்... இருதாலும் முறை தவறி நடக்கவில்லை. போனில் பேசுவதை விட, நேரில் பேசுவது அழகு.

தனிமை ஒரு கொடுமை இல்லை.

நண்பர்கள் எல்லாம், நியூ ஜெர்சி சென்று நூடி பார் போவார்கள். தப்பில்லை. அளவோடு நிறுத்திக்கொண்டால். ஒரு முறை அது என்ன என்று பார்ப்பதற்கு சென்றேன். தப்பில்லை.

ஆனால் சில நண்பர்கள், மாதம் மிச்சம் செய்யும் ஆயிரம் டாலர்களை, பாதி அந்த விசயத்திற்கு செலவு செய்தார்கள். தவறு. வீடு என்று ஒன்று உள்ளது. கேவலம்.

அதே போல தான், லஞ்சம். கை காட்டி விட்டால், இன்சைட் இன்பார்மேசன் கொடுத்தால், கோடிகள் புழலும் பதவி, மோகம் வரும், ஆனால் அதற்கு ஆசைப்பட்டு, பிடிபட்டால்... கேவலம் வேறு இல்லை.

You have to live with principles, and take things as it comes along!

3 comments:

DIVYA said...

வாழ்க்கை ஒரு மாயை!

True!

Vijayashankar said...

Applies to all situations!

Anubavam?

Vinitha said...

என்ன சொல்ல வரீங்க? பகவத் கீதை மாதிரி இருக்கு!