ஒற்றுமையான வாழ்க்கை எல்லோருக்கும் தேவை என் நண்பரோடு ஒரு வாக்குவாதம் நேற்று இரவு.
இந்தியர்களும் ஒவ்வொரு இடத்தில் வேறு வேறு கொள்கை வைத்துள்ளார்கள். எனக்கும் அது தான் தோன்றுது.
இந்தியாவில் ஒரு மாதிரி பேசுவார்கள். வெளிநாடு போய்விட்டால்.... அதுவும் திரும்பி வந்து விட்டால்...பெருமை நம்ம ஆட்களுக்கு கை வந்த கலை! வெற்றி கொடி கட்டு படம் வடிவேல் ஞாபகம் இருக்கா?
காவேரி பிரச்சனை வைத்து கன்னடம், தமிழ் என்ற பாகுபாடு!
வேலை பிரச்சனை வைத்து மராட்டி, பிஹாரி பாகுபாடு!
தேவையா?
ஒரு தாய்நாடு என்ற எண்ணம் வேண்டும். லோகல் ஆளுக்கு முன்னுரிமை கொடுப்பது நல்ல விஷயம்.
இப்போது பெங்களூர் புது ஏர்போர்டில், லோகல் கிராமம் ஆட்களுக்கு தான் முத்தலில் வேலை என்ற கொள்கை. நான் ஒரு டாக்ஸி எடுத்தேன், அந்த டிரைவர் சொல்கிறான், இவ்வளவு ஆயிரம் கொடுத்து ப்ளைட்டில் போகிறீர்கள், எலிகளுக்கு பணம் கொடுக்க கூடாதா? வேலை செய்து சம்பாரிப்பது எதற்கு என்றேன். ஒன்றும் சொல்லவில்லை அவன். கேள்வி கேட்டதால், நான் கொடுக்கும் இருபத்து ருபாய் டிப் போனது அவனுக்கு. யாருக்கு நஷ்டம்?
தமிழ் ஆள் கன்னடகாரனை திட்டினால் வெட்டிடமாட்டானா பெங்களூரில்?
அதே ஒரு கன்னடக்காரன் தமிழ் ஆளை சென்னையில் திட்டினால்?
அதனால் ஒற்றுமையான வாழ்க்கை எல்லோருக்கும் தேவை.
ஒன்று பட்டு வாழ்வோம் நன்மை செய்வோம்.
ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு சாகித்ய அக்காதமி
3 hours ago
No comments:
Post a Comment