Showing posts with label தனி நபர் தாக்குதல். Show all posts
Showing posts with label தனி நபர் தாக்குதல். Show all posts

Thursday, April 23, 2009

தனி நபர் தாக்குதல்

பதிவுலகில் தனி நபர் தாக்குதல் அதிகம் ஆகிவிட்டது என்று நண்பர் வெங்கட் கிருஷ்ணா எழுதுகிறார். உண்மை. மிக மிக உண்மை. ஜாதி மதம் குலம் கோத்திரம் பார்த்து எழுதுவதில்லை பதிவர்கள்.

சில பதிப்பகங்கள் ஜாதி பார்த்து தான் எழுத்தாளர்களை ஊக்குவிக்கிறது, என்கிறார் ஒரு நண்பர். சரியா தவறா தெரியவில்லை.

சரத்பாபு தேர்தலில் நிற்பது தவறாம். என்ன கொடுமை? :-(

சென்ற தேர்தலில் ஐ.ஐ.டி. கட்சி ஒன்று இருந்ததே. அப்போதே எங்கே போயிற்று இந்த பதிவர்கள் புத்தி?

அய்யா, எழுதுவதற்கு பேனாவும், கி போர்டும் இருந்தால் மட்டும் போதாது. ஒரு நல்லா போதை வேண்டும். உண்மை நிலை வேண்டும். பேச்சு துணிவு வேண்டும்.

********

சில எழுத்தாளர்கள், திருத்தவே முடியாது. அவர்கள் எழுதுவது ஜனரஞ்சகமாக இருப்பதால் தான் (படித்தால் புரியும் விதம், ஆர்வத்தை தூண்டும் நிலைமை) அவர்களுக்கு ஒரு வாசகர் வட்டம் இருக்குது. அதை வைத்துக்கொண்டு பிச்சை எடுப்பது போல காசு காசு என வேண்டுவது தேவையற்ற ஒன்று.

கொடுத்தாலும் நன்றி தெரிவிப்பதில்லை.

எழுதுங்கள் , நன்றாக எழுதுங்கள்.

வாழ்த்துக்கள்.