அதனால் இதுவரை திவ்யா சொன்ன கதைகள், இரண்டாம் பாகம் அவரே தொடருவார், அவருடைய வெப்சைட்டில் திவ்யாவின் எண்ணங்கள் . ஹெல்ப் கேட்டால், நான் எடிட்டிங் செய்வேன்.
அதனால், ஒரு குழப்பத்தின் ஊடே.. புதிய ஒரு பெண் நண்பர் கிடைத்தார். சாந்தி ஜெய்குமார். மேற்கூறிய பதிவில் அந்த விஷயம் பார்த்திருக்கலாம். திவ்யாவின் காதலர்கள் என்ற ப்லோக் எழுதியவர். இப்போது அது இல்லை. ஆனால்...
அதனால் பதிவுபோதையின் வழியாக... திவ்யா சாந்தியின் கதைகள் வரும். (திவ்யா என்ற புனைப்பெயரில் அவர் எழுதினார்!)
ஒரு மகிழ்ச்சியான விஷயம், என் செலவில் ஒரு பதிப்பகம், இந்த கதைகளை ஒரு தொகுப்பாக, மீண்டும் கொஞ்சம் வர்ணனை சேர்த்து வெளியிட முயற்சி செய்கிறோம். தீபாவளி அல்லது பொங்கல் ரிலீஸ். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோம்.
வாசகர்களின் அதரவு நிச்சயம் வேண்டும். ஆயிரம் புத்தககங்கள் முதலில் ருபாய் ஒரு லட்சம் செலவு செய்து வெளியிடுகிறோம். நெடும் நாவலின் - புத்தகத்தின் தலைப்பு திவ்யாவின் காதலர்கள். ஐ.எஸ்.பி.என் நம்பர் வாங்கிவிட்டோம்.
ஸ்பொன்சர் செய்ய விரும்புபவர்கள் என்னை தொடர்பு கொல்லேலாம். ஐந்தாயிரம் கொடுப்பவர்களுக்கு பின் அட்டையில், அவர்கள் பெயர் வரும். மொத்தம் இருபது பேர் மட்டும். முந்துங்கள். ச்போன்சர்களுக்கு ஆளுக்கு பத்து பிரதிகள் கொடுக்கப்படும். தபால் செலவு தனி.
புத்தகத்தின் விலை ருபாய் இருநூறு (௨00) என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சிலருக்கு இலவசமாக கொடுப்பேன், கமண்ட்ஸ் (பின்னூட்டம்) தினமும் இடும் வாசகர்களுக்கு என் ஒவ்வொரு பதிவுலும். கமண்ட்ஸ் போடுபவர்கள், ஈமெயில் முகவரி அவர்கள் ப்ரோப்யிலில் தெரிகிற மாதிரி வைக்க வேண்டும்.
என் முடிவே இறுதியானது. நிலாவில் ஜூரிச்டிச்டின் அமைக்கப்படும். பூமியில் நான் தான் ஜெயிப்பேன்.
எனக்கு ஐந்நூறு முதன்மை வாசகர்கள். இது போதும் ஆயிரம் பிரதிகள் விற்று விடும் என்று சுஜாதாவின்அருமை பதிப்பாளர் சொல்கிறார்.
செலவு போக ஒரு ஐம்பதாயிரம் ரூபாயாவது ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும். காசு பண்ணுவதற்கு எனக்கு தொழில் இருக்கு.
நன்றி. நாளை திவ்யா சாந்தியின் கதைகள் (பாகம் ஒன்று) மூலம் சிந்திப்போம்.
2 comments:
மீண்டும் திவ்யா ( சாந்தி ) கதைகள் மூலம் ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள். நன்றி!
- சாந்தி ஜெய்குமார்
Best wishes! Eagerly waiting for the stories...
Post a Comment