கௌரி ஒரு அழகான இளம்புயல். உயரமான பெண். கருப்பு என்றாலும் அழகு.
விளையாட்டு வீராங்கனை. வானதியின் தங்கை. ஒரு வயது சிறியவள். வானதியை விட மிக அழகு.
இருவரும் ஒரே பள்ளி. ரேஸ் கோர்ஸ் வீட்டிலிருந்து நடந்தே தான்செல்வார்கள்.
என்.சி.சி. போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு. ஆண்கள் பிரிவில் பிரகாஷ் காப்டன். பெண்களில் இவள்.
பிரகாஷ் அறிமுகம் ஆனது திவ்யா வீட்டில் தான். அமுதவன் உடன் எப்போதும் சுற்றிக்கொண்டு இருப்பான். படிக்கிறேன் பேர்வழி என்று கோட்டம்அடித்து கொண்டு இருப்பார்கள். திவ்யாவின் அம்மா தான் பாவம் காப்பி டீஎன்று கொடுத்து கொண்டு இருப்பார்கள். நன்றாக படிப்பதால் பசங்கோளோடு பழகுவது ப்ராப்ளம் இல்லை.
ஐ.ஐ.டீ. எக்ஸாம் வேறு வந்தது. இவளும் படிக்க விருப்பம். ஒரு வருடம் மட்டும் படித்தல் பத்தாது. இரண்டு வருடமாவது படித்தால் தான் இடம் கிடைக்கும். நல்ல ரேங்க் எடுக்க வேண்டும்.
அப்படி வந்தது குரூப் ஸ்டடி. இவளும் பழைய க்வேச்டியான் பேப்பர் வைத்து விடை கூறுவாள்...
நண்பர்கள் பேசுவதெல்லாம், இளம் வயசில் பேசுவது தான். காதல், உடல், சினிமா...
ஒரு நாள் திவ்யா சொன்னாள்... ஒரு தடவை பிரகாஷ் என்னை கிஸ் அடிச்சாண்டி... என்ன என்ன என்று இவள் கேட்க.. திவ்யா சொன்னாள்.. "அன்னைக்கு ஒரு நாள் நான் கேம்ஸ் பீரியட் பந்துகள் எடுக்க அவன் கூட போனேன். யாருமே இல்லை. அவன் மேல எனக்கு எப்போதும் ஒரு கண். சைட் அடிப்பேன். நல்ல அழகான லிப்ஸ். பந்து எடுக்காமே அவனையே பார்த்தேன். என்ன பாக்குறேன்னு கேட்டான். ஒரு பந்து வேணும்னு கேட்கறதுக்கு பதிலா, ஒரு கிஸ் வேணும்னு வாய் தவறி உளரிட்டேன். அடிச்சான் பாரு ஒரு லிப் கிஸ். ஒரு ஊறுகாய், மாங்காய் வாசம். உவ்வேன்னு ஆயிடுச்சு." சிறிது கொண்டாள் திவ்யா. முதல் அனுபவும் முற்றிலும் கோணல் ஆனது.
"எனக்கும் தாண்டி ஆசை" சொன்னாள் கௌரி..."வானதி கிட்டே சொல்லட்டுமா?" கொக்கரிதாள் திவ்யா. "இல்லே திவ்யா. நான் அவனை லவ் பண்றேன்". தயங்கி சொன்னாள் கௌரி. முறைத்து பார்த்தாள் திவ்யா. "உன் கிட்டே தப்பு எதாவது பண்ணினானா?". "இல்லே".
என்னடா இது வம்பு என்று நினைத்து கொண்டால். சரி காதல் என்று ஒருவருக்கு வந்தால் உதவி செய்வது தான் நல்லது. எவ்வளவு சினிமா பார்த்திருப்போம்? "நிஜமா அவனை உனக்கு பிடிக்குமா?" அப்பாவியாய் கேட்டால் திவ்யா. காதலர்களை சேர்க்க என்ன செய்ய வேண்டும்?
ஒரு பார்ட்டி வைக்க வேண்டியது தான்.
திவ்யாவின் அப்பா அம்மா ஒரு முறை மருதமலைக்கு சென்று விட்டார்கள். அன்று அவர்களை அழைத்தாள். வானதி, சாந்தி மற்றும் கௌரி. அமுதவனும், பிரகாஷும். வீட்டில் வேலைக்காரி கூட இல்லை. பாங்களா வாசலில் கூர்கா மட்டும். ரேஸ் கோர்ஸ் அமைதியான நிலையில் இருந்தது.
பேசி கொண்டு இருந்தார்கள். மாடி ரூமில் பிரகாஷும் கௌரியும் பேசிக்கொண்டு இறந்தார்கள். கொஞ்ச நேரம் கழித்து கதவு மூடும் சத்தம் கேட்டது.
திவ்யாவும், வானதியும், அமுதவனும், சீரியசாக கணக்கு பார்த்தார்கள்.
எங்கேயும் தவளை சத்தம் கேட்கவில்லை. மழை வரவில்லை.
அறை மணி நேரம் பிறகு கௌரியும், பிரகாஷும் திரும்பி வந்து பேச்சில் கலந்து கொண்டனர்.
கௌரி தான் ஏதோ மாதிரி இருந்தால்.
டீ போடுவதற்கு திவ்யா எழுந்தாள். "கௌரி கொஞ்சம் ஹெல்ப் பன்னுடீ" அழைத்து சென்றாள்.
"என்னடி பண்ணினே. பேசிட்டு இருந்தீங்கள. இல்லே பெட்டே கெடுத்திட்டீங்களா?"...திவ்யா குஸ் குசுவென்று பேசினால். "இல்ல திவ்யா பேசிட்டு தான் இருந்தோம். அப்புறம் ஒரு கிஸ்." சிரித்தால்.
"நீ சொன்னது கரக்ட். ஊறுகாய் டேஸ்ட் தான்...." வெட்கம் பிடுங்கி தின்றது அவளுக்கு. பதினேழு வயது பட்டாம் பூச்சிகள் பறந்தன. அனுபவம் புதுமை.
டீ குடித்தார்கள். திவ்யா மேலே சென்று பெட்ரூம் சுத்தமாக இருக்கிறதா என்று பார்த்து வந்தாள். பரவாயில்லை.
இந்த சந்திப்புகள், ஒரு வழியாக தினமும் நடந்தது. பல இடங்களில் சந்திப்பு. பல வகை.
சாந்தியும் அமுதவனும், கௌரியும் பிரகாஷும், இரண்டு இளஞ்ஜோடிகளாய் சுற்றி திரிந்தனர். கேஜியில் சினிமா. ரிச்சி ரிச்சில் ஐஸ்கிரீம். கிடைத்த பணமெல்லாம் செலவு.
பெரியவர்கள் யாரவது பார்த்து கேட்டால். "குரூப் ஸ்டடி அங்கிள்". "ம்..ம்.. நல்லா படியுங்க " என்று சொல்லி செல்வார்கள். இவர்கள் சிரித்து கொள்வார்கள்.
அந்த குரூப்யில் கௌரி மட்டும் சின்னவள். ஆனால் ஜோக்ஸ் சொல்வதில் பெரிய கில்லாடி. இன்றும் கூட.
பிரகாஷும் பியெஸ்ஜியில் எலக்ட்ரானிக்ஸ் சேர்ந்தான் சாந்தியோடு. கௌரிக்கு வசதியாயிற்று. ஒரு வருடம் பீளமேட்டில், நேரு பார்க்கில் என சந்தித்தார்கள்.
அடுத்த வருடம் கௌரியும் பியெஸ்ஜியில் எலக்ட்ரானிக்ஸ்.
சந்திப்புகள் தொடர்ந்தன. காதல் தீப்பற்றி எரிந்தது. ஒரு செப்டம்பர் மாத வேளையில் பிரகாஷும் கௌரியும் தங்களை இழந்தனர். வீட்டில் யாரும் இருக்க வில்லை. குரூப் ஸ்டடி... இது பல முறை தொடர்ந்தது. ஜாக்கிரதையாக இருந்தார்கள். நிரோத். மூட்ஸ். கொஹிநோர். காம ஸுத்ரா...
சாந்தி, அமுதவன், வானதி மற்றும் செந்தில் எல்லோரும் செட்டில் ஆகிவிட்டனர். (அந்த கதையெல்லாம் ஏற்கனவே நீங்கள் படிதிருப்பீர்கள்...)
பிரகாஷ் மட்டும் ஒரு வழியாக சுமாராக படித்து முடித்து, சென்னையில் ஒரு கம்பனியில் வேலைக்கு சேர்த்தான். சாப்ட்வேர் தான்.
பிற்பாடு கலிபோர்னியா சென்றான். எல்லோரையும் போல. காசு பணம் என்று இருந்துவிட்டான்.
*****
கௌரி அடுத்த வருடம் படிப்பை முடித்து வேலைக்கு முயற்சி செய்தாள். ஒரு வருடம் ஓடியது. பிரகாஷும் சந்தித்து கொண்டனர். ஒரு சிறு கம்பனியில் வேலைக்கு சேர்ந்தாள்.
இந்த சமயத்தில் தான் வானதி பிரசனை முடிந்து நிம்மதி வரத்தொடங்கியது.
வானதி கணவன் செந்தில் சொன்னதின் பேரில் அமேரிக்கா கன்சல்டன்சி விசா வாங்கி சென்றாள்.
வானதிக்கு கௌரி தான் அவள் அறுவை சிகிச்சை சமயம் உதவி செய்தாள். அவர்கள் வீட்டிலேயே சென்று தங்கினாள். அந்த சமயம் செந்திலின் ட்வின் தம்பி மோகன் அங்கு லாயராக வேலை செய்துகொண்டு இருந்தான். பெங்களூரில் நேஷனல் ஸ்கூல் ஒப் லாவில் லா படித்து விட்டு, நியூ யார்க்கில் இன்டர்நேஷனல் லா படித்தான். இப்போது அங்கு தான் வாமனிடம் டெபுடி.
செந்திலின் தம்பி மோகன் கௌரி மீது ஆசை வைத்திருந்தான்.
இந்த ஆசையை அவன் செந்திலிடம் சொல்ல, அவன் வானதி மூலம் கேட்க சொன்னான்.
ஒரு நாள் வானதி கேட்டாள். யோசித்து பார்த்து, குடும்பம் நன்றாக இருக்கும் என்று நினைத்து சரி என்று கௌரி சொல்லி விட்டாள்.
பிரகாஷுக்கு இது தெரியாது. தொடர்பு இல்லை. ஈச்டுக்கும் , வெஸ்டுக்கும் தூரம் அதிகம் தான்.
நியூ ஜெர்சி வாடேர்கேட் கோவிலில் கல்யாணம் செய்து கொண்டனர் மோகன் தம்பதியினர்.
சில வருடம் முன்பு, இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். அத்வைதும், அபிலாஷும். இப்போது ஆறு வயது ஆகிறது.
ஜாதி வெறியன் குடும்பம் இப்போது கொஞ்சம் ஒட்டுகிறார்கள். வானதியும், கௌரியும் அடிக்கடி சந்தித்துக்கொள்ள வசதி. அபிலாஷ் வானதியோடு தான் வளர்கிறான். தத்து கொடுத்து விடுவார்கள் என்று திவ்யா சொல்கிறார்.
இப்போது அவர்கள் ப்ரின்செடனில் தங்கி இருகிறார்கள். மோகன் நியூ யார்க் சென்று வர, கௌரி தினமும் பக்கத்தில் மொர்கனில் ஒரு பெரிய போஸ்டில் இருக்கிறாள். ஜாதி வெறியன் இந்தியாவில் அரசியல் பார்க்க, இப்போது மோகனின் அம்மா அடிக்கடி அமேரிக்கா வந்து செல்கிறார். மகன்கள் அருகில் இருப்பதனால் அதுவும் வசதி ஆகிற்று.
பிரகாஷுடன் தொடர்பு சரியாக இல்லை. பல வருடங்கள் கழித்து ஒரே ஒரு முறை திவ்யாவின் கல்யாணத்தன்று சந்தித்தார்கள். சரியாக பேசிக்கொள்ளவில்லை. பிரகாஷ் குடிக்கு அடிமையாகி, மீண்டதாக சொன்னார்கள். வருத்தம் இருக்காதா? திவ்யாவிற்கு பிரகாஷ் ஒரு ஆறுதல் தரும் நண்பன்.
******
இப்போதும் திவ்யாவும் பிரகாஷும் அடிக்கடி சந்தித்துகொள்கிறார்கள். ஜோவிற்கு பிரகாஷை ரொம்ப பிடிக்கும். நல்ல வேளை தமிழ் தெரியாது.
இது வரை பிரகாஷ் ஒரு முறை கூட கௌரி பற்றி கேட்கவில்லையாம்.
நான் போட்டு குடுத்துட்டேன்... இப்போது தெரிந்து விடும். நண்பர்கள் சந்தித்தால் சரி. நலமோடு வாழுங்கள் வாழ்த்துக்கள்.
பிரகாஷின் அம்மா ஒரு பிரபல எழுத்தாளர். அப்பா இப்போது இல்லை. (அவரில்லை இது)
பிரகாஷ் ஒரு ஜப்பான் பெண்ணை கல்யாணம் செய்திருக்கிறார். ( அயுமி ஹமசாகி). அழகான குழந்தைகள் பிறந்துள்ளனர். பெண்ணின் அப்பா, மாடுகள் வெட்டும் கம்பனி வைத்துள்ளார்.
பிரகாஷின் அம்மா மருமகளிடம் ஆங்கிலம் தவிர ஜப்பானிய மொழியில் பேசுகிறார்கள்.
கண்ணு பட்டு விடும். சுற்றி போட சொல்லுங்கள்!
Astrology மகர லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்
16 hours ago
No comments:
Post a Comment