நான் தலித். நாங்க பிறப்பால் வேஜெடரியன்ஸ். தொழில் விவசாயம். அந்த காலத்து இங்கிலீஷ் கலெக்டர் செஞ்ச வேலை. சமுதாயத்திற்கு உதவுகிறேன் என்று சொல்லி, ஸ்பெஷல் ஸ்டாடுஸ் எஸ்.சி. கீழ்மட்டம் தான். வறுமை.
எங்க தாத்தா பேரு ஆர்யா ராவ். டெண்டுல்கர்னு, எங்க தாத்தா வீம்புக்கு பேர் பின்னாடி வச்சிகிட்டார். பீமா ராவ், அம்பேத்கர் சேர்த்த மாதிரி. மேல் ஜாதி அடையாளம். பேரு பார்த்து மதிப்பு வருமான்னு. தலித்கள் ஆரியன்கள் இல்லைன்னு, ஔர்ங்காபாத் ராஜா கிட்டே வேலை பார்த்த ஆள் சொன்னதால்...கொள்ளு தாத்தாஆர்யா ராவ்னு பேர் வச்சார், ஒரே மகனுக்கு. அவரு ஜோசிய விற்பன்னர். மகனையும் அந்த மாதிரி ஜோதிஷ பாடசாலைக்கு அனுப்பி வளர்த்தார். அந்த காலத்து மெட்ரிகுலேசன்.
விவசாயம் மழை கம்மி ஆனதாலே 1930 சமயம் ...உலகமே வறட்சி பிடியில்.... ஆர்யா ராவ் அப்போ மாடு தோல் செருப்பு தைக்கும் தொழிலில் சேர்ந்தார். இப்போ கொல்ஹபுர் சப்பல் உலக பேமாஸ். சாயந்திரம் ஜோசியம் பார்த்தார். இரண்டு குழந்தைகள்... அந்த காலத்திலே அது கம்மி... ஒரு மகள் (டாக்டர் கோர்ஸ் புனேலே படிச்சாங்க.. இப்போ கல்கத்தாவிலெ oivu லைப்)அப்புறம் எங்க அப்பா. எழுபதாவது வயதில் தான் மகனோடு போய் இருந்தார். தாத்தா சாகும் போது எனக்கு இருபத்தி நாலு வயசு. நிச்சயம் கலெக்டர் ஆகுவேன்னு சொலிட்டு போனார். அப்புறம் மேல்ஜாதி மணமகள். இரு குழந்தைகள். தெரியாத மொழியில் புலமை (தமிழ் தாங்க இப்போ?) என்று நிறைய ஜோஷியம்...
ஐஐடி என்ட்ரன்ஸ் எக்ஜாமிலே பார்வட் லிச்டுலே தான் சீட்டு. ஆயிரத்துக்கு கிழே தான் ரேங்க். ஜாதி காலம்லே 'ராவ்'னு பில் பண்ணிட்டேன். ப்ருப் கேட்டாங்க. ஜாயின் பண்ணின டைம் தான் போர்ம்லே எஸ்.சி.னு பில் பண்ணினேன், பாதகமில்லைனு நினைச்சு.
அப்பா புனேல ஆர்மி காலேஜிலே மெக்கானிக்ல் எஞ்சினீரிங் படிச்சவர். கொல்ஹபுர் தாசில் ஒப்பமிட்ட சர்டிபை பண்ணின சர்டிபிகேட் (சான்றிதல்) எங்க அப்பாகிட்டே இருந்தது. மொட்டையா 'ராவ்'. எஸ்.சி. வேலை கிடைக்காத நாளே கல்கத்தா போய் வேலை பார்த்து முன்னுக்கு வந்தார். என்னுடைய பழைய பதிவுகள் படிச்சு பாருங்க.
அந்த சான்றிதல் வச்சுச்கொலர்ஷிப் கட்டாயமா கொடுத்தாங்க. நோட்டீஸ் போர்டுலே எல்லாம் பேர் போட்டு அசிங்கம் பண்ணினாங்க. கணக்கு காட்டனும் இல்லையா?
அதை பார்த்திட்டு... காலேஜுலே, நீ பண்ணி சாபிடுறே ஜாதின்னு திட்டுவாங்க. டாப் ரேங்க் வாங்கினேன். ஓரளவு தான் நண்பர்கள். இன்னும் ஜாதி வைத்து கிண்டல் பண்ணினவங்களை பார்க்கும் போது கோபமாக வரும்...
*****
தமிழ்நாட்டில் ஜாதி சான்றிதல் கொடுக்கலைனாலும், பாக்வர்டினு எழுதிடுவாங்க. பார்வட்னு சொல்லணும்னா பேருலே ஜாதி பெயர் கேட்பாங்க. பத்தாம் கிளாஸ் சமயம் தான் சரி பண்ணனும்.
அப்புறம், எனக்கு தெரிஞ்ச வரை, ரேபுசல் ஆப் காஸ்ட் சர்டிபிகேட் என்பது எழுதப்படாத விதி - ஆடோமடிக்கா பார்வட் காஸ்ட் ஆக எடுத்துகொள்வார்கள். நடைமுறை இல்லை.
நான் என் குழந்தைகளை அந்த ஸ்கூலிலே சேர்த்த போது, தாய் மொழி (என் மனைவி ) தமிழ்னு, அப்புறம் ஜாதி - அவங்க அம்மா ஜாதி (தமிழ் ஐயர்) அப்படின்னு எழுதிட்டேன். ஸ்கூல் டீச்சர்ச்கிட்டே எங்களுக்கு கிடைச்ச மரியாதையை பார்க்கனுங்க! யார் மனசையும் புண் படுத்தவில்லை இதை சொல்லி... குழந்தைகளும் பர்ஸ்ட் ரேங்க் எடுத்து படிக்கிறாங்க. தமிழரா தான் வாழுறாங்க.
நண்பர்கள் கிண்டல் பண்றாங்க பொழைக்க தெரியாத ஆள்னு. எஸ்.சி'னு போடுடா...
தென், காலேஜ் அட்மிச்சின் டைம்லே ப்ரோப்லேம் வரும், அது தான்... பரவாயில்லைங்க. குழந்தைகள் ஜாதி தெரியாம வளருறாங்க. நல்ல படிகிறாங்க. எங்க பிரச்னை எங்களோடு போகட்டும்.
சின்ன விஷயம் தான்...சில சில அற்ப சந்தோசங்கள். வாழ்கையிலே... இல்லீங்களா?
Astrology மகர லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்
16 hours ago
4 comments:
அரசாங்கத்தின் ஒரு புண்ணாக்கு சலுகையும் தேவையில்லை, எனது மகளை ஒரு மனித பிறவியாக பார்த்தாலே போதும். சாதியியம் பிற்காலத்தில் அடியோடு அழிந்து போக வாழ்த்துக்கள்.
எனது பிளாக்கில் உங்களது கமென்ட் பார்த்தேன் நன்றி
நன்றி!
I appreciate your open mindedness!
Cheers!
Shanthi Jaikumar
Forward and backward ethukku Ramesh? Manasu thaan mukkiyam. Inge Amerikkale vanthu kuppai kottaliaya? Avunga enna caste certificate kettu velai koduthaangala?
Post a Comment