காலையில் டிபன் சாப்பிட்டேனா என்று கூட தெரியாமல், இன்று வேலை. தொடர்ச்சியாக கால்கள்.
ஐந்து நிமிடம் முன்பு என்னடா பசியை கில்லுதுன்னு போய் பார்த்தால்..
உப்புமா டைனிங் டேபிள் மீது ஆற்றி கிடக்கிறது. ஈ ஆடவில்லை.
குழந்தைகள் டிவி பார்கிறார்கள். மனைவி ஆபிஸ். யாரும் சொல்லவே இல்லை! குழந்தைகளை கேட்டால் "நீங்க போங்க டாடி. கதவை மூடிட்டு.... அப்படி என்ன தான் பேசுவீங்களோ!" என்றனர்.
மைக்ரோவேவில் போட்டு சூடு பண்ணி உப்புமா, சப்புமா ஆகிவிட்டது. தொட்டுக்கொள்ள சக்கரை.
கண்களில் நீர் வராத குறை...
ப்ரேக்பாஸ்ட் ... பிரன்ச் ஆகிவிட்டது...
(எதோ ஒரு வெப் சைட்லே உப்புமா படம்...)
இதை தான் எல்லோரும் உப்புமா கிண்டரியானு கிண்டல் பண்றாங்களா? புரியலே.
லஞ்ச் டைம்? லெமன் சாதம் இருக்கிறது. குழந்தைகளுக்கு அப்பளம் பொரிக்கவேண்டும்... அவங்குளுக்கு லீவு.
கொஞ்சம் வெங்காயம் வெட்டி தயிரில் போட்டு... ரெண்டு கிள்ளு கொத்தமல்லி போட்டால் தயிர் பச்சிடி ரெடி.
அப்புறம் வெளியே ஒரு கடைக்கு ஓடிட்டு போய் ஐஸ் கிரீம்.
அப்புறம் எப்படியாவது சாயந்திரம் அஞ்சு மணிக்குள்ளார திவ்யா சாந்தி கதைகள் (பாகம் 3) ரெடி பண்ணனும். டைப் ஆகிட்டு இருக்கு..
ஐந்து முகங்கள் – கடிதம்
14 hours ago
4 comments:
me the first?
//காலையில் டிபன் சாப்பிட்டேனா என்று கூட தெரியாமல்//
அதுக்குத்தான் நல்ல சாப்பாடு செஞ்சு போடக்கூடாதுங்கறது. கேவலமா செஞ்சு போட்டா இப்படி மறக்குமா?:):):)
//கண்களில் நீர் வராத குறை//
இப்போ கரெக்டா நியாபகம் வெச்சிருக்கீங்க பாத்தீங்களா, நான் சொன்னது சரிதானே:):):)
Ok!
;-)
Post a Comment