(1) நிச்சயமாக மாஸ் அப்பீல் உள்ளவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
அவர் பாடல்கள் என்னை கவர்ந்தன. அனேகமாக அனைத்து படங்களும் வைத்துள்ளேன். நன்றி. மோசெர் பயர்.
திருடாதே படத்தில் என்ற படத்தில்.. திருடாதே பாப்பா பாடலில்
'கொடுக்கற காலம் நெருங்குவதால் எடுக்கற அவசியம் இருக்காது
இருக்கிற தெல்லாம் பொதுவாய்ப் போன பதுக்கற வேலையும் இருக்காது
உழைக்கற நோக்கம் உறுதியாயிட்டா
எடுக்கற நோக்கம் வளாராது'
என்று அருமையான வரிகள் இடம்பெற்று உள்ளன.
மேலும் எனது பதிவு... தூங்காதே தம்பி தூங்காதே பார்க்கவும்.
(௨) அடுத்தவர் தென்னகத்தின் மர்லன் பிராண்டோ நடிகர் திலகம் சிவாஜி. அவருடைய டயலாக் டெலிவரி சூப்பர். எமொசன்ஸ் அட்டகாசம். பெங்காலில் அமைதி நடிப்பு பார்த்த நான், சிவாஜி நடிப்பு பார்த்து வியந்துள்ளேன்.
(3) பிரபல குணச்சித்திர நடிகர், நாடக இயக்குநர் பூர்ணம் விஸ்வநாதன். அருமையானமனிதர். இன்று நம்மோடு அவர் இல்லை. இன்று மாலை காலமாகி விட்டார். அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். (அவரை மிமிக்ரி செய்யாத தமிழ் கூட்டமே கிடையாது!)
மேலும் எனக்கு பிடித்த தமிழ் நடிகர்கள்... தொடரும்...
ஐந்து முகங்கள் – கடிதம்
14 hours ago
No comments:
Post a Comment