இரண்டாம் பாகம் இங்கே படியுங்கள்... நன்றாக இருந்ததா?
**********
திவ்யா சாந்திக்கு பெங்களூரில் நல்ல வேலை. ஜூலை 1986.
கம்ப்யுட்டர் அவ்வளவு பிரபலம் ஆகாத சமயம். சின்ன கம்பனி. ரெண்டு மினி கம்பூடர். வேலை ஒன்றும் பிரமாதமாய் இல்லை.
பாதி சர்விஸ். பாதி கோட் எழுதும் வேலை. திவ்யா சாந்திக்கு ஆச்சிரியம். இரண்டு மூன்று முறை சிங்கபூர் சென்று வந்தாள். நல்ல சம்பளம்.
அப்போது தான் மகிரிஷி பற்றி தெரிந்தது. அவரிடம் ஒரு சிஷ்யர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் என்று அழைக்கப்படுபவர் இன்று. தியானம் வாழ்க்கை என்று அவளுக்கு ஓடியது. அந்த கூட்டங்களை தொழிலை தியானம் பயிற்சி கொடுத்தாலும், இப்போது ஜக்கி வாசுதேவ் குரூப்.
மூன்று வருடம் இது ஓடியது. எந்த பிரச்னையும் இல்லை. வீட்டில் வேறு கல்யாணம் என்று பேச்சு எடுத்தார்கள். வேண்டாம் வேண்டாம் என்று விட்டு விட்டாள். பிரச்சனை.
வாழ்கையில் முன்னேற ஒரு ஆசை வந்தது. அப்பா யாரோ ஒரு பளீர் சிரிப்பு சினிமா நடிகையிடம் தஞ்சமாகிவிடார்னு...அம்மாவும் ஒரே வருத்தம். சொத்தெல்லாம் கரைந்துகொண்டு இருந்தது...தங்கை வேறு பார்மசி காலேஜு போய்க்கொண்டு இருந்தாள். அவளுக்கு நல்ல வரன் கிடைத்தால் பரவாயில்லை. ஒரு வக்கீல் மாபிள்ளை வந்தது. கோவை அருகில், நிச்சயம் செய்து விட்டார்கள். கல்யாணம் சில மாதங்கள் கழித்து.
இவள் கல்யாணம் வேண்டாம் என்று இருந்தது... எல்லோரும் கேட்டார்கள்... கொஞ்ச நாள் போகட்டும் என்று விட்டு விட்டாள்...
பெரிய கம்பனிகள். அமேரிக்கா வாழ்க்கை என்று கணக்கு போட்டாள். சிங்கப்பூர் மட்டும் - சென்னை மாதிரி தான் இருந்தது.
1991. அமேரிக்கா செல்ல வாய்ப்பு வந்தது. ஐந்து வருடம் எக்ஸ்பெரியான்ஸ் ஆனதால் அவர் ஒப் ப்ராஜெக்ட் லீடர் ஆனாள்.
முதல் முறை அமேரிக்கா செல்ல வாய்ப்பு. அதே கம்பனி தான். ஒரு ஆறு மாதம் அங்கு இருக்க வேண்டும் என்றார்கள். பிசினஸ் விசா. நியூ யார்க் தான்.
*****
திவ்யா சாந்தி தங்கியிருந்த இடம் எய்டி போர்த் அவனு. அவள் தங்கியிருந்த இடம்... இந்திய சாப்ட்வேர் பசங்கள் இருந்த ஏரியா.
நன்றாக பழகினார்கள். அழகு. தேனீயில் மொய்த வண்டுகள்.
ஒரு பார்டியில்... பக்கத்து ரூம் நண்பர்கள் ... எதோ கலக்கி கொடுத்து விட்டார்கள். மயங்கினாள். எவ்வளவு மிருங்கங்கள் வேட்டை ஆடின என்பது தெரியவில்லை. காலையில் மயக்கம் தெளிந்து பார்க்கும் போது, இரு ஆண்கள் பொட்டு துணியில்லாமல் அவள் அருகில் படுத்து இருந்தனர்.
அழுதுகொண்டே வெளியே ஓடினாள்....
உடம்பெல்லாம் வலி, மனமெல்லாம் வடு.
அப்போது தான் ராகவ் என்று ஒருவன் பழகினான்.
ஆஸ்பத்திரி அழைத்து சென்றான். போலிசுக்கு போகவில்லை. அவனும் இருந்த வீடு அருகில் தான். அவன் மீது ஒரு ஈர்ப்பு வந்தது. அவனும் இன்னும் ஒரு மாதத்தில் இந்தியா திரும்புவானம். இருந்தது பெங்களூரு. ஒரு வயசு. பார்க்கலாம் என்று விட்டு விட்டாள்.
ஊருக்கு போக ஒரு மாதம் தான் இருந்தது. பழகினாள். அவர்கள் வீட்டிற்கு இதுவரை போகவில்லை...அதனால்... ஒரு சின்ன பார்டி என்று அழைத்து சென்றான்.
ராகவ்வின் ரூம் மேட் மட்டும் இருந்தான். டின்னர் சாப்பிட்டுவிட்டு, ஏதோ பழைய தமிழ் படம் ஓடிக்கொண்டு இருந்தது, அப்படியே சோபாவில் படுத்துவிட்டாள்.
திடீரென்று சத்தம் கேட்டு எழுந்தாள். நடு இரவு. ஆண்கள் சிரிக்கும் சத்தம். ஒரு பெட்ரூம் வீடு தான். கதவு மூடியிருக்கவில்லை...
எட்டி பார்த்தாள். துணியில்லாமல் இருவர். மூர்கத்தனமாக ராகவ் அவன் நண்பன் பின்புறத்தில் சம்போகம் செய்து கொண்டு இருந்தான்...
வெளி கதவு மூடியிருக்கவில்லை. சத்தமில்லாமல் வெளியேறினாள்.
வெளியே வந்த அவள்.. யாரிடமும் சொல்லவில்லை. பின்னாளில் ராகவ் வந்து பார்க்கவில்லை.
*****
என்ன செய்வது? வேறு நல்ல நண்பன் கிடைப்பானா? கல்யாணம் செய்துகொண்டால்?
திவ்யா சாந்தி ஊர் திரும்பினாள்.
பட்டுகோட்டையில் ஒரு டிம்பர் மெர்ச்சன்ட். மைசூர் பெங்களூர் அடிக்கடி வரும் ஒருவன் இருதான். பெயர் அறிவழகன். அப்பா அம்மா சொன்னதால்... ஓகே என்று சொல்லிவிட்டாள். ஒரே வயது. இருபத்தி எழு.
அவன் பெங்களூரில் ஒரு கடை வைப்பான் என்றார்கள். வசதி என்று சொன்னார்கள். முன்பு எங்கோ அவளை பார்த்திருந்தாள்... ஊரில்... சே அவனாக இருக்காது.
அக்கா தங்கை கல்யாணங்கள் ஒரே மேடையில். ஒன்று அடிபடும் என்று பேசிக்கொண்டார்கள். இவள் வாழ்க்கையாக இருக்க கூடாது என்று வேண்டினாள்.
ஆனந்தமாய் பெங்களூரில் கல்யாண வாழ்க்கை அமைத்தாள். பெங்களூரு டபுள் ரோடில் ஒரு ஷோ ரூம் வைத்தார்கள். இவள் வேலையை தொடர்ந்தாள். குழந்தை ஆகவில்லை.
அவர் அப்பாத்தான் கோடிக்கணக்கில் கொடுத்திருந்தார். ஒரு வருடம் பிசினஸ் நன்றாக இருந்தது.
கொஞ்ச காலம் நன்றாக தான் இருந்தான் அறிவு. பின் அவனுக்கு என்ன ஆயிற்று தெரியவில்லை.
மழையில் ந்னைந்த்தால் பர்னிச்சர் எல்லாம் விலை குறைவு. லாஸ். அப்புறம் சந்தன கடத்தல்....
வீட்டிற்கு குடித்து விட்டு வந்தான். அடித்தான். வீட்டை விட்டு மழையில் வெளியில் அனுப்பினான். தொடர்ச்சியாக.... துன்புறுத்தல்... சாடிஸ்ட்... மிருக புணாச்சி!
அப்பாவை அழைத்து சொன்னாள். அவர் அம்மாவோடு வந்து புத்திமதி சொல்லிவிட்டு சென்றார். "என்ன செய்வது மகளே... பொறுத்து போ!".. அம்மா ஒன்றும் சொல்லவில்லை "வேற வாழ்க்கை கிடைக்காது... பத்திரமா இருந்துக்கோ.." பட்டால் தான் தெரியும் இந்த வாழ்க்கை...
ஒரு நாள்... கொஞ்சம் நல்ல மூடில் இருந்த சமயம்.. அறிவு காரணம் சொன்னான்.. "உன் கூட படித்த பிரேம் சுந்தர் என்கிட்டே சில விஷயம் சொன்னான்". அப்போது தான் புரிந்தது... ஒரே ஊர்... "உன்னை பத்தி எனக்கு தெரியும் சொத்துக்காக தான் கட்டிகிட்டேன்..." சிரித்தான். "நீ வேணும்னா யார் கூட வேணா இருந்துக்கோ. எனக்கு ஏற்கனவே ஒருத்தி இருக்கா. கல்யாணம் பண்ணின மாதிரி தான். மைசூர்லே. அவளும் பெங்களூர் கூட்டி வந்து வைக்கபோறேன்."
மயக்கமானாள்... "ஆண்டவா.. எனக்கா இந்த சோதனை...". அவள் கருவுற்றிருந்தாள். டென்சனால் அது கலைந்துவிட்டது. ஒரு மாதம் ஆஸ்பத்திரி வாசம். பாவம் அவள். உதவிக்கு அம்மா இருந்தாள்.
அறிவு வரவேயில்லை.
வீடு திரும்பி வந்த போது, இரண்டு ரூம் ரெடி!
அப்பா அம்மா வந்து ஆறுதல் சொல்லிவிட்டு சென்றார்கள்.
*****
மைசூரிலிருந்து அவள் வந்தாள். ஸோபா. அவர்கள் குடும்பம் ஒரு மாதிரி என்று தெரிந்தது... தமிழ் கன்னடம் தெலுங்கு ஹிந்தி என்று எல்லா பாசை பேசினாள்.
திவ்யா சாந்தி தனி ஆளாக இருந்தாள். கிட்டதட்ட வேலைக்காரி. அம்மாவிடம் சொல்லவில்லை. என்ன பயன்?
காலையில் அவள் ரூமை திவ்யா சாந்தி தான் சுத்தம் செய்ய வேண்டும். அம்மணமாய் படுத்துக்கொண்டு இருப்பாள். சில சமயம் இவளை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க பார்ப்பாள். பேருக்கும் சீமாரால் அடித்து விட்டு வந்து விடுவாள்.
அதை சாக்காக வைத்து அறிவு அடித்தான். கொடுமை செய்தான். சாப்பாடு கூட கொடுக்கவில்லை இரண்டு நாட்கள். வேலைக்கு போக விடவில்லை.... சில சமயம் டாய்லட்டில் வைத்து பூட்டி விடுவான்.
எப்போதாவது நண்பர்கள் வந்து பார்த்தனர். திவ்யா சாந்தி உடம்பு சரியில்லை என்று சொல்லி விட்டாள். அப்பா அம்மா லெட்டர் போட்டார்கள். போன் செய்தார்கள். சொல்ல முடியவில்லை. அவர்கள் முன் அறிவு நன்றாக நடித்தான். ஸோபா, திவ்யா சாந்தி பார்த்துக்கொள்ள வந்த வீட்டு வேலைக்காரி என்றான்.
அவர்களுக்கு தெரியாத என்ன...
*****
நண்பி தாரிணியும் அவள் போலிசு மாமாவும் (சரவணன்) அவளை பார்க்க வந்திருந்தனர். அவர் போலிசு நண்பர் பக்கத்து தெருவில். ஒரு முறை அழுதுகொண்டே விவரம் சொல்லிவிட்டாள்.
சரவணனின் போலிசு நண்பர் ராம். கேட்டதும் உடனே ஆள் அனுப்பினார். உடனே போலிசு வந்து அழைத்து சென்று விட்டார்கள் அறிவையும் ஸோபாவையும். அரஸ்ட். பல வித செக்சன்ஸ் கேஸ்.
எதோ பன்னர்கட்டா பகுதியில் அடைத்து வைத்திருந்தார்கள். திர்ட் டிகிரி டார்சர். சந்தன கடத்தல் விஷயம் உதவியாயிற்று. கேஸ் இவன் மீது. நடக்க முடியாத படி அவனை அடித்து துவைத்தனர். கேள்வி கேட்க யாரும் இல்லை. வெளியில் விட முடியாத செச்சன்ஸ்.
திவ்யா சாந்தியை அழைத்து சென்று, அவள் முன் அறிவை பயங்கர கொடுமை செய்தார்கள். இவள் மனதில் திருப்தி. இவள் முன் கொடுமை செய்ததை பார்த்த போது அறிவுக்கு மனம் பிசகியது. நிம்ஹன்ஸில் அட்மிட் செய்தார்கள். இதுவரை அவன் நினைவு திரும்பவில்லை.
ஸோபா பெயில் வாங்கி தப்பித்து விட்டாள். அவளை பற்றி யாருக்கும் இன்னும் தெரியவில்லை. அவள் எங்கு இருக்கிறாள் என்று தெரியும் வெளியே சொல்லமாட்டேன் என்றார் திவ்யா சாந்தி!
திவ்யா சாந்தி டிவோர்ஸ் அப்பளை செய்து வாங்கினாள். மெண்டல். கேஸ் ஸால்வுட். செபறேடட்.
இப்போது அறிவு சென்னையில் மன நலம் குன்றியவர்கள் விடுதியில். பாத்ரூமும் படுக்கையும் சேர்ந்த ஒரு ரூம். டாய்லட்டில் வாழ்க்கை!
*****
திவ்யா சாந்தி தொடர்ச்சியாக வேலைக்கு சென்றார். வேறு ஒரு பெரிய கம்பனி. ஜெனரல் மேனேஜர் லெவல்.
வருடங்கள் பல உருண்டோடியது... கையில் நிறைவான காசு... அரசியல் பலம்....
தியான மார்கத்தில் தன்னை அற்பனித்தார் திவ்யா சாந்தி.
பர்னிசர் கடைவிற்று விட்டு அந்த பணத்தை ஒரு ஆசிரமத்திற்கு கொடுத்தாள்.
அவர் கடையில் டிம்பர் எடுத்து போட்ட ஆள். அம்மா அம்மா என்று சுற்றி சுற்றி வந்தவன்.. இன்று... தியானம் சொல்லி கொடுக்கிறார் அந்த இளம் சாமியார். திவ்யா சாந்தி அங்கு சென்றால் பார்ப்பது கூட கிடையாது. பெரிய சாமியார் ஆகிவிட்டார். அவருடைய குடும்பம், இவளிடம் இருக்கும் சொத்தை பறிக்க பார்த்தது. அது ஒரு பெரிய தனி கதை.
மீண்டும் ராம். உரிய சோதனை. சாமியார் அடங்கிவிட்டார். இப்போதும் தியான வகுப்புகள் நடைபெறுகின்றன. அரசியல்வாதிகளுக்கு அது மடம் ஆயிற்று.
*****
அப்பா அம்மா இன்னும் பட்டுக்கோட்டையில் இருக்கிறார்கள். தங்கை கணவன் கோவையில் ஒரு கம்பனி வைத்திருக்கிறான்.
கோவை சென்று சிறிது காலம் ஜக்கி வாசுதேவ் தியானம் பழகினார். மகிழ்ச்சி.
அவருடைய தொன்றில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு...
தியானம் உலக மாயம்.
(முற்றும்)
******
பின் குறிப்பு: கதை எழுதியவுடன் சாந்தி ஜெய்குமார் அவர்களிடம் காண்பித்து விட்டு தான் பதிவேற்றம் செய்கிறேன். சிலவற்றை அவர் வெட்டி விட்டார். புத்தக வடிவில் வரும் போது மேற்கொண்டு நான் அதை விரிவாக எழுதலாம்.
ஐந்து முகங்கள் – கடிதம்
14 hours ago
5 comments:
Very well written! I hope people understand to take care of women better.
Cheers!
Shanthi Jaikumar
Thanks and I appreciate your sharing!
Regards
Ramesh
Ramesh
Very Nice! Good way to write with restraint. There was a thin line between a classic and a porn... as I told in the blog.
hats off!
Luv
Divya
;-)
Thanks Divy.
ரமேஷ், மனதினைச் சுட்ட பதிவினை எழுதியதற்கு வாழ்த்துக்கள். அந்தக் கேரக்டர் திவ்யா சாந்தியின் போராட்டத்துக்கு எனது உள்ளம் கனிந்த பாராட்டுக்கள். அவர் இனிமேலும் சந்தோஷமாக இருக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். புத்தகமாக வெளியிடும்போது மறக்காமல் மெயிலனுப்புங்கள்.
Post a Comment