சாந்தியின் அப்பா ஒரு துணிக்கடை வைத்திருந்தார். சாந்தி டெக்ஸ்டைல்ஸ், அன்னூர். சிறிய ஊர் ஆனாலும், நல்லா பச்சைபசேல் என்று இருக்கும். மேல்படிப்பு படிக்க மார்க் எடுக்க கோவை தான் செல்ல வேண்டும். பத்தாம் வகுப்பு முடிந்தவுடன் கோவையில் பிஎஸ்ஜி கிருஷ்ணம்மாள் அல்லது மணிஸ் தான். இடம் கிடைப்பது இருபது வருடம் முன்னாள் ஈசி தான்.
திவ்யாவும் சாந்தியும் கோவை ஸ்கூலில் நட்பு, பதினொன்றாம் வகுப்பு முதல்ஆரம்பம் ஆனது. தினமும் பஸ்சில் வருவாள். காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்அருகே இறங்கி பத்து நிமிடம் நடை. வுமேன்ஸ் பாலிடெக்னிக் தாண்டி வரவேண்டும். இன்றும் மன்மத ராஜாக்கள் அங்கு வட்டமிடுவதை பார்க்கலாம்.
சாந்திக்கு தனியார் பேருந்தில் தான் இடம் கிடைக்கும். அப்போதெல்லாம் பஸ்பாஸ் கிடையாது. இரண்டு கண்டக்டர்கள் இருப்பார்கள். பெண்கள் பகுதிமுன்னால். அவர்கள் இருவரில் யார் முன்னாடி ஏறுவது என்று மிகுந்த போட்டி இருக்கும். விசில் மன்னர்கள். ரோட்டில் பஸ் நிறுத்தப்பட்டு, எட்டு மணிக்கு தினமும் வரும் பாசஞ்சர்கள் வந்த பிறகு தான் புறப்படும். சாந்தியின் அப்பா குமார் மொபெட்டில் இறக்கி விட்டு பின் கடைக்கு செல்வார். அவரை துணிக்கடை கவுண்டர் என்றும் சொல்வார்கள். முக்கால் மணி நேரம் பயணம். ஒன்பது மணிக்கு முதல் பீரியட்.
ஒரே மகள். கல்யாணம் ஆகி பத்து வருடங்கள் கழித்து தவமிருந்து பிறந்தவள். அவளுடைய அம்மா ராஜம்மாள் ஒரு செல்வ சீமாட்டி. அவருக்கு ஒரு தம்பி குணசேகரன், இந்த கதையின் வில்லன். சாந்திக்கு ஒன்பது வயது மூத்தவன். காளப்பட்டியில் நாற்பது ஏக்கர் தோட்டம் வைத்திருபவன். அங்கு சினிமா ஷூட்டிங் வரும் நடிக நடிகையருக்கு, இவன்தான் ஆஸ்தான உதவியாளன். அதை வைத்து அவன் நடிகைகளிடம் நடித்திய கூத்து பற்றி வீண் ஜம்பம் அடிப்பான். அவனுக்கு தான் சாந்தி என்று எழுதப்படாத விதி. பத்தாம் வகுப்பு பெயில் ஆனவுடன் ஒரு ஐடியை சென்று எதோ ஒரு மெக்கானிக்கல் டிப்ளோமா வாங்கினான். இருந்தாலும் அவன் அப்பா இறந்துவிடபடியால், அவன் தான் வீட்டை பார்க்கும் நிலைமை. அவனுடைய அம்மா ராணி சீதாலட்சுமி அந்தியூர் ஜமின் வம்சம். இளவரசி பட்டம் கட்டப்பட்டவள். அதனால் ஒரு நூறு ஏக்கர் தவிர, மற்றவை அனைத்தும் இளவரசர் குருசாமிக்கு போயிற்று. சாந்தியின் அப்பா குமார் நூறு ஏக்கர் நிலம் கிடைக்கும் என்று தான் கல்யாணம் செய்தார். ஐம்பத்து பவுன் நகை தான் போட்டார்களாம். குணா அறுபது ஏக்கர் இதுவரை விற்று தீர்த்துவிட்டான்.
சாந்தி பதினோன்றம் வகுப்பில் தான் பெரிய மனுசி ஆனாள். காளபட்டியில் இருந்து மேல தாளத்துடன், அன்னூர் வந்து சீர் கொடுத்தான் மாமன் குணா. ஒரு வெள்ளிகுடமும் பத்து பவுன் நெக்லசும் இன்னும் வைத்திருக்கிறாள் சாந்தி. திவ்யா சொன்னாள்.
"படிப்பெல்லாம் எதுக்கு மாமா, சீக்கிரம் கட்டி வையுங்க" என்று கெஞ்சினான்.
"இன்னும் பதினெட்டு ஆகலே. பன்னேண்டாம் வகுப்பு முடிச்ச கையோட கட்டி வைக்கிறேன்" குமாருக்கு இஷ்டம் இல்லை. இருந்தாலும் நாற்பது எக்கராவது வரும் என்ற நப்பாசை. "எப்படியோ ஒரு ஷோவ்ரூம் வைக்கணும்". நண்பர்களிடம் தினமும் சொல்வார்.
சாந்திக்கு இளமை ஊஞ்சல் ஆடியது வருட கடைசி பரீட்சை முடிந்த சமயத்தில். முதல் குரூப் ஆனதால், லீவில் தினமும் ஸ்பெசல் க்ளாஸ் தான். சாந்தி தான் முதல் மார்க். முதல் ஐந்து ரேங்க் பெண்கள் தான். ஆறாம் ரேங்க் எடுப்பவன் அமுதவன். அவன் அப்பா கோவையில் ராஜா வீதியில் உள்ள பூசாரி. அவன் அக்கா ஒரு நர்ஸ். முதல் ராங்கிர்க்கும் ஆறாம் ராங்கிர்க்கும் முடிச்சு விழுந்தது. பளீரென்ற சிரிப்பில் மயங்கினான். காதல் நட்பாய் ஆரம்பம்...
கண்கள் இரண்டால் தினமும் பாடினார்கள். சில சமயம் மதியம் சீக்கிரம் படிப்பு முடிந்துவிடும். திவ்யா வீட்டிற்கு சென்று பேசிக்கொண்டு இருப்பார்கள். திவ்யாவின் காரில் தான் பஸ் ஸ்டாண்டிற்கு கொண்டு விடுவார்கள் சாந்தியையும், அமுதவனையும்.
வானதியும் அவள் தங்கை கௌரியும் நடந்து போய் விடுவார்கள். அவர்கள் அடுத்த தெரு.
இப்படியாக சாந்தியும் அமுதவனும் ஒன்றானார்கள். காதலால் படிப்பு வீணாகவில்லை. போட்டி தான் அதிகம் ஆயிற்று. நல்ல பசங்கள்.
இருவரும் போட்டி போட்டு படித்தார்கள். ஆச்சிரியம், வருட துவக்கத்தில் முதல் பரிட்சையில் சாந்தி முதல், அமுதவன் இரண்டாம் இடம், திவ்யாவிற்கு மூன்று. கால் பரிட்சையில் இதே தொடர்ந்தது.
தீபாவளி சமயத்தில் குணா நச்சரித்தான். நிச்சயம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்டான். குமார் சரி பார்க்கலாம் என்று விட்டு விட்டார். சீதாலட்சுமி அம்மையார் தம்பி மையினர் குணாவின் மீது அன்பு கொண்டவர். அவருடைய சம்மதம் தான் வீட்டில் எல்லாம்.
சாந்தியே ஒருமுறை அவனிடம், டிகிரீ முடிக்காம நான் கல்யாணம் செய்யமாட்டேன் என்று சொல்லிவிட்டால். இதில் அவனுக்கு வருத்தம். சாந்தி குணாவை வெட்டி ஆபிசர் என்று தான் திட்டுவாள். படிப்பில் அவள் சுட்டி ஆனதால், பேசாமல் போய் விடுவான்.
இந்த சமயம் பார்த்து ஒரு பவுண்டரி அன்னூரில் விலைக்கு வந்தது. குணா அதை வான்கினான் விவசாயத்தில் வந்த பணத்தை வைத்து. மோட்டார் ரீபேர் போன்ற சின்ன வேலைகள் செய்வான்.
தினமும் எதாவது சாக்கு சொல்லி சாந்தியை பார்க்க வந்து விடுவான் அவன்.
ஒரு நாள் குமாரும் மனைவியும் காரமடை சென்றிருந்த போது, இவன் வீட்டிற்கு வந்தான். சனிக்கிழமை மதியம். தூக்க கலகத்தில் சாந்தி இருந்தாள். சாந்தி தாவணி சரியாக போடவில்லை. கிளர்ச்சி. மிருகம் வேட்டையாடியது. சாந்தி அழுதாள். "சாந்தி செல்லம், நான் கட்டிக்க போறவன் தானே? யார் கிட்டேயும் சொல்லாத...". சாந்திக்கு உடம்பெல்லாம் வலி. நல்ல வேலை, எதுவும் ஆகவில்லை. அம்மாவும் பெண்கள் மாதம் படும் பிரச்னை என்று விட்டு விட்டார்.
அதன் பிறகு சாந்தியிடம் மிகுந்த மாற்றம். யாரோடும் சரியாக பேசுவதில்லை. திவ்யாவும் பல முறை கேட்டுவிட்டாள். அமுதவனோடு பேசுவது அறவே நின்றது. அவன் பயித்தியம் பிடிக்கும் நிலையில் இருந்தான். முழு ஆண்டு பரீட்சை முன்னால் வரும் டெஸ்டுகளில் அவன் ஒன்றும் சரியாக செய்யவில்லை. பிசிக்ஸ் லாபில் முதல் முறையாக திட்டு வாங்கினான். திவ்யா தான் பேச முயற்சி செய்தாள். லேபின் ஒரு ஓரம். "என்னடா ஆச்சு? என்கிட்டே சொல்லுடா. ப்ளீஸ். முடிச்சவரை உதவி செய்யறேன்." திவ்யாவிற்கு பாவமாக இருந்தது. அமுதவனோடு வரும் நண்பன் பிரகாஷ மீது அவளுக்கு ஒரு இஷ்டம். பிரகாஷ் விளையாட்டு வீரன். பிடீ ரூம் சாவி அவனிடம் தான் இருந்தது. அதை வைத்து தான் திவ்யாவை ஒரு நாள்...
அமுதவன் ஒரு நாள் ஒரு மரத்தடியில் உட்கார்ந்துக்கொண்டு இருந்தான். சாந்தியும், அந்த இடத்திற்கு வந்தாள். அமுதவன் சாந்தியிடம் "ஏன் என்னை கண்டுக்க மாட்டேங்கிறே?" என்று கேட்டான். சாந்தி முனுமுனுத்தாள். "எனக்கு எங்க குணா மாமாவோட கல்யாணம் நிச்சயம் ஆகபோகுது!". அமுதவன் முகத்தில் பயங்கர சலனம். க்ளாசில் சென்று அமர்ந்து விட்டான். திவ்யா தான் சென்று சொன்னாள் "எல்லாம் பரீட்சை முடிஞ்சப்புறம் பேசிக்கலாம் எல்லோரும் எக்ஸாம் நல்லா பண்ணுவோம் என்ன?".
அமுதவன் மட்டும் கொஞ்ச நாள் சோகமாக இருந்தான். பிற்பாடு நன்றாக பேச ஆரம்பித்தான். சாந்தியும் நல்ல நிலைமைக்கு திரும்பி வந்தாள், சிரித்து பேச ஆரம்பித்தாள். காண காணும் காலங்கள் திரும்பியது. சாந்தி அவள் பட்ட துன்பத்தை யாருக்கும் சொல்லவில்லை.
எல்லோரும் வெறித்தனமாக படித்தனர். ஐஐடி எக்ஸாம் எழுத அமுதவன் சென்னைக்கு சென்றான். திவ்யா எழுதவில்லை. குமார் சாந்திக்கு பங்குனியில் நிச்சயம் என்று சொல்லிவிட்டார். வைகாசியில் கல்யாணம். சித்திரை ஒன்றாம் தேதிக்கு முன்னால் என்று பேசி வைத்தனர். அதனால் ஐஐடி வேண்டாம், படிப்பதானால் குணா சொன்னால் கோவையிலேயே படிச்சிக்கோ என்று சொல்லிவிட்டார்.
வருடம் முடிவுக்கு வந்தது. எல்லோரும் பரீட்சை நன்றாக எழுதினார்கள். அமுதவன் தான் முதல் மதிப்பெண் எடுத்தான். சாந்திக்கு இரண்டாமிடம். திவ்யா மூன்றாமிடம்.
ஐஐடி சென்னையில் அமுத்வனுக்கு இடம் கிடைத்தது. சாந்திக்கு பிஎச்ஜியில் எலக்ட்ரானிக்ஸ். திவ்யா மத போதகர் காலேஜில்.
சாந்திக்கு அமுதவன் மீது ஒரு இது இருந்துக்கொண்டே இருந்தது. ஒரு நாள் நேரு பார்க்கில் வைத்து தன்னிடம் குணா நடந்த கொண்ட விதம் பற்றி அழுதுகொண்டே சொல்லிவிட்டாள்.
*****
மார்ச் மாதம் திடீரென்று ஒரு நாள் குணா இறந்து விட்டான். காச நோய் என்று சொன்னார்கள். அன்னூரிலிருந்து வேதநாயகம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். பிழைப்பான் என்று நினைத்துக்கொண்டு இருந்தார்கள். காலையில் அவன் கண விழிக்கவில்லை.
நிச்சயம் கூட இன்னும் நடக்கவில்லை. ஒரு வாரம் இருந்தது. ஊரெல்லாம் அந்தரங்க நோய் என்று பேசிகொண்டார்கள். சாந்திக்கு பக்கென்று இருந்தது. "எனக்கு எதாவது?".
அமுதவனுக்கு மனதில் பாதித்து இருந்தாலும், இப்போது குணா இல்லாததால் விட்டு விட்டான். அவன் மனதில் ஒரு பதை பதைப்பு இருந்து கொண்டு தான் இருந்தது.
குணாவை அந்த சம்பவத்திற்கு அப்புறம் மறந்துவிட்டு, அமுதவன் ஒத்துகொண்டால் கல்யாணம் கட்டினால் என்ன என்று சாந்திக்கு தோன்றியது.
*****
நான்கு வருடங்கள் உருண்டோடின. திவ்யா காட் எழுதி ஐஐஎம் சேர்ந்தாள்.
அமுதவனும் ஐஐடியில் எல்லோரை போல அமேரிக்கா செல்ல முயற்சி செய்து, விஸ்கான்சின் பல்கலைகழகத்தில் இடம் பிடித்தான். மாடிசன். கம்ப்யூட்டர் சயன்சிற்கு அருமையான இடம்.
விதியின் விளையாடடு, சாந்தியின் படிப்பு முடிந்து மேல்படிப்பிர்க்காக அமேரிக்கா சென்றாள். டி-கல்ப் பல்கலைகழகத்தில், சிகாகோ அருகில்.
ரூட் நம்பர் தொன்னூரில் நேர்வழி. நூற்றி ஐம்பத்து மையில்கள். இரண்டரை மணி நேரம் பயணம்.
சாந்தியும் அமுதவனும் (அமு ஆகிவிட்டான் இப்போது)....
இருவரும் வேலை - ஒரே இடத்தில் சியாட்டில். உலகின் மிக பெரிய சாப்ட்வேர் கம்பனி.
இந்தியா வந்து கல்யாணம் செய்து திரும்பினார்கள்.
ஒரு நாள் ஒரு சிறிய ஆக்சிடன்ட். சாந்தி ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனாள். அப்போது அவளுக்கு எலிசா டெஸ்ட் கொடுக்கப்பட்டது. அவளுக்கு எச்.ஐ.வி பொசிடிவ். எப்படி?
சாந்தி யாரிடமும் சொல்லவில்லை, அமுதவன் மற்றும் திவ்யாவை தவிர. குணாவிடம் இருந்து?
எப்படி சாத்தியம்? ஒரு டாக்டர் சொன்னார், கிருமிகள் ஓவரியன் சிஸ்டில் தங்கி, மெதுவாக தாக்கியிருக்கலாம்... நோய் எதாவது வந்தால் தான், குறையாது என்று சொல்கிறார்கள். ஒரு காம்ப்ளிகேடெட் கேஸ்.
இப்போது அமுதவன் சாந்தியை நன்றாக வைத்து காப்பாற்றுகிறான். சாந்தி வீட்டில் தான் இருக்கிறாள், வேலை செய்கிறாள் முழு சம்பளத்தோடு. அது அவளுடைய மருந்து செலவிற்கு கை கொடுக்கிறது.
உடல் இளைத்து பண்ணிறேண்டாம் வகுப்பு சாந்தியை நினைவு படுத்துகிறாள். எச்.ஐ.வி வீரியம் குறைந்து வருகிறது. கட்டுபாட்டில் உள்ளது.
இன்னும் பத்து இருபது வருடங்கள் தாக்கு பிடிப்பாள் என்று டாக்டர்ஸ் சொல்லுகிறார்கள்.
அவர்களுக்கு இன்னும் குழந்தை இல்லை.
திவ்யாவும் சாந்தியும் தினம் ஒரு முறை பேசுகிறார்கள். சாந்தியை வருடத்தில் குறைந்த பட்சம் நான்கு முறை சந்திக்கிறாள்...
*****
பின்னால், ஒரு முன் குறிப்பு... இருபது வருடங்களுக்கு முன்னால்...
அமுதவனின் அக்கா பரமேஸ்வரி கோவை வேதநாயகம் ஆஸ்பத்திரியில் வேலை செய்தார். குணா அட்மிட் ஆன சமயம் அன்று அவருக்கு தான் டூட்டி.
பரமேஸ்வரி இப்போது உயிரோடு இல்லை.
****
மேலே சொன்ன கதை முற்றிலும் உண்மையா எனக்கு தெரியாது. திவ்யா சொன்ன மூலக்கதை வைத்து எழுதியிருக்கிறேன். ஆஸ்பத்திரி பெயர்கள் நிஜமாக அங்கு இருக்கலாம். ஒரு கதைக்காக தான் அவை சொல்லப்பட்டன. எந்த வித உள்நோக்கமும் இல்லை. மன்னித்து கொள்ளுங்கள்.
ஐந்து முகங்கள் – கடிதம்
14 hours ago
1 comment:
Thanks for clarifying. Good writings Sir.
-Shanthi Jaikumar
Post a Comment