பூவாய் நீ வந்தாய்
பூஜைகளை செய்தாய்
வேண்டினாய் மனமுருகி
வேண்டியதை எனக்கு தருவாய்
ஆகாயத்தின் வண்ண பறவைகளை
ஆசையாய் பார்த்தாய்
அழகானை சுனரியில்
அற்புதமாய் கோலங்களிட்டாய்
அழகு கைகளால்
அபிநயங்கள் பல பிடித்தாய்
பதினாறு வயதில் ஆடிய ஆட்டங்களா
பதில் சொல்ல முடியாது அதை பற்றி
சொல்லிய வார்த்தைகள்
சோகமென முடிந்தாலும்
கட்டியவளை மனமுருகி
காப்பாற்றுகிறேன் கலங்காமல்
இன்று இதயங்கள் மாற்றுகிறார்கள்
இதயத்தில் நீ மட்டும் மாறவில்லை!
(நிச்சயம், இப்போ தாங்க தேநீர் குடிச்சுட்டு எழுதறேன், உண்மை சம்பவம் இல்லீங்க)
ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு சாகித்ய அக்காதமி
3 hours ago
No comments:
Post a Comment