மக்காசோளம் பற்றி பேசிக்கொண்டு இருந்த போது, என் மனைவி அவள் அலுவலகத்தில் நடந்த கதை ஒன்றை சொன்னார்.
அது இந்தியாவின் பிரபல சாப்ட்வேர் கம்பனி. வருடம் முழுவதும் வேலை. வெளிநாட்டில் ஒரு ஆள் மூன்று மாதம் செய்யும் வேலையை, மூன்றில் ஒரு பங்கு காசில் மூன்று ஆள் வைத்து அதே ஒரு மாதத்தில்... எப்படியோ, பாரின் காசு வந்தால் சரி...
கண்ணாடி கூண்டுக்குள் வைத்த கூலிகள் என்கிறார். ஆங்கிலத்தில் சாப்ட்வேர் கூலிஸ்.
நிதர்ஷன ரெட்டி என்பது அவள் பெயர். சென்ற வருடம் கல்கத்தா மேனேஜ்மன்ட் காலேஜ் ஒன்றிலிருந்து ஆள் பிடித்து வந்தார்கள்... அது தாங்க கேம்பஸ் ப்லேச்மன்ட்.
அவளுக்கு பிடித்த உணவு மக்காசோளம்.
வேலை வேலை என்பதால் அவளை வாட்டி எடுத்தார்கள்...
ஒரு நாள் ரிசைன் செய்து விட்டாள், நான் ஊருக்கே போய் விடுகிறேன்.... இங்கே பிடிக்கவில்லை...
ஜூனியர் எச்.ஆர். எல்லாம் பேசியும் மசியாதவள், என் மனைவியிடம் அழைத்து வந்தார்கள். கொஞ்ச நேரம் பேசியவள், சொல்ல ஆரம்பித்தாள்... சிடி விட்டு இவ்வளவு தூரம் தள்ளி ஆபிஸ், பக்கத்திலேயே ஜெயில் மாதிரி வீடு...டிவி மட்டும் இருந்தா போதுமா, அடிக்கடி ஊருக்கு போகணும், சொந்தங்களை பார்க்கணும்... அப்புறம் எங்க தோட்டத்தில் விளையும் மக்காசோளம் ரொம்ப பிடிக்கும்..
அன்று பார்த்து, என் மனைவி டிபனில் வேக வைத்த மக்காசோளம் எடுத்து சென்றுள்ளார். ஒன்று எடுத்து கொடுத்துள்ளார்...
மிகவும் சந்தோசம் ஆகிவிட்டது. அந்த வேளையில், வேலையில் தொடர்கிறேன் என்று சொல்லிவிட்டாள் நிதர்சன ரெட்டி.
இப்போது அந்த கம்பனி வாசலில் மக்காசோளம் விற்பவர் நின்று நல்லா வியாபாரம் செய்கிறாராம். எச்.ஆர். தந்திரம்!
********
மனைவி சொன்னார், ஒரு பர்சன்ட் அட்ரிசன் (வேலை விட்டு ஆட்கள் நிற்பது) ஒரு மாதத்தில் அதிகம் இருந்தால்... கோ சேர்மன் (குடிகாரன், இந்தியாவை வளமாக்குவது என்று அருமையாக இப்போ புது புஸ்தகம் வேறு எழுதி இருக்கிறான்...) திட்டி தீர்த்து விடுவானாம்... அவனுடைய அல்லக்கை, கணக்கு வழுக்கு பார்த்தவன், இப்போது டைரக்டர் ஆக இருக்கிறான்.. கூட சேர்ந்து திட்டுவானாம்.. அவர்கள் வேலை விட்டு போவது யாரினால், யாருக்காக? யோடனைகெட்ட ஜென்மங்கள்..
Friday, November 21, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Congrats on 21000 visitors to your blog. You are writing good and keeping up the interests.
Post a Comment