Wednesday, November 19, 2008

இந்தியாவில் ரியல் எஸ்டேட்

இந்தியாவில் ரியல் எஸ்டேட் சரிவு நிலைமையில் இருந்தாலும் அது ஒரு வரப்பிரசாதம், பாடம் முதல் போடுபவர்களுக்கு...

எப்படி?

அமேரிக்கா ஒரு சேமிப்பு இல்லாத நாடு... அதை தயவு செய்து கம்பேர் செய்ய வேண்டாம். சப் ப்ரைம் கரைசிஸ் எல்லாம் தண்டம்... இந்தியா வேற.

இந்தியாவில் 25% கட்டாயம் மிடில் க்ளாஸ் வர்க்கம் சேமிக்கும். வீடு ஒன்று எப்போதும் கனவு தான்... சென்னையில் நான் சந்தித்த, பிளாட்பாரம் வாசி, சோளிங்கநல்லூரில் ஒரு ஏக்கர் நிலம் வைத்திருந்தார்...

அதுவும் சென்னை சுற்றி வளர்ச்சி அதிகம். நான் ஒரு 14 ஏக்கர் 1996 சமயத்தில் வாங்கினேன், மடிப்பாக்கம் அருகே. பல்லாவரம், வண்டலூர், தாம்பரம் செல்லும் வழி. புழுதிவாக்கம் தாண்டி... ரோடு சரி இல்லை, இன்னும்... ஒரு ஏக்கர், ஒரு லட்சம். நான் 2006 விற்கும் போது, மொத்தம் பல கோடிகள்.... இன்றும் அதை வாங்கியவர் வருடம் பல லட்சங்கள் வரும் தென்னை, மற்றும் செட் / குடோன் வைத்துள்ளார்... அனேகமாக ஒரு இண்டஸ்ட்ரி வரும். என்ன தண்ணீர் தன் கொஞ்சம் குறைகிறது!

புது தொழில்கள் தொடங்க இது நல்ல சமயம். பைசா குறைவாக செலவு செய்தால் போதும். நானும் என் நண்பரும் பெங்களூரில் ஒரு சாப்ட்வேர் நிறுவனம் ஆரம்பிக்க உள்ளோம்... அதற்கு சில மாதங்கள் இலவசமாக வாடகை இல்லாமல் இடம் ஒன்று கிடைத்தது, இன்னொரு நண்பர் மூலம். நண்பா முடியுமா? மாற்றம் வரும் போது தன்னால் வருமானம் வரும்.

பெங்களூரில் இது தான் வீடு வாங்க நல்ல சமயம். என்னிடம் 45 லட்சம் சொல்லிய ஒரு வீடு, மங்களம் என்ற ஒரு ப்ராபர்டி, இன்று 36 கொடுங்கள், போதும், இரண்டு கார் பார்க் தருகிறேன் என்கிறார். அசல் பணம், முதலீடு வந்தால் போதும் என்று முடிந்த நிலையில் இருக்கும் ப்ரபர்டிகள் விற்கிறார்கள். நஷ்டத்திற்கு யாரும் விற்கமாட்டார்கள். எனக்கு தெரிந்த ஒரு பாங் மேனேஜர் சொல்கிறார், இப்போதெல்லாம் என்ன 20% டவுன் பேமண்ட் கேட்கிறோம். அதையும் பெர்சனல் லோனாக கொடுத்துவிடுவோம்....

ஆனால் வீடு கட்டி விற்கும் நிறுவங்களில் முதலீடு (சேர், டெபாசிட் போன்றவை) தவறு. ஆரஞ், சூர்யா ஷைன், வைட் பீல்ட் போன்ற நிறுவனங்கள் ஓடி விடும் சாத்தியம் அதிகம்.

நிச்சயம் பணம் இருந்தால், வாங்க வேண்டிய முதலீடு, இந்தியாவில் ரியல் எஸ்டேட் !

No comments: