Tuesday, August 12, 2008

கோபம் திருக்குறள் நினைவு

கோபம் திருக்குறள்

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.


மேலே உள்ள குறள், சிலருக்கு பொருந்தும்.

கோபம் தணிக்க, சிலர் ப்லோக் எழுதுறார்கள். பின்னூட்டம் எழுதுறார்கள்.

அந்தோணி ரோப்பின்ஸ் சொல்வது போல, நீங்கள் கோபம் கொண்டால், யாராவது பற்றி, ஒரு பேப்பரில் எழுது, உடனே கிழித்து போட்டு விடுங்கள். கோபம் தணியும்.

அதே தொழிலாகி விடக்கூடாது. தொழில் தவிர். நானும் இந்தியா ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்த, ப்லோக் போடுகிறேன்.

ஒரு நாளைக்கு பத்து முதல் பன்னிரண்டு மணி நேரம் கணினி முன்னால் செலவிடுகிறேன். அதனால் சில சமயம் டைம் பாஸ் ஆக தமிழ் எழுத்தாளர்கள் வலை பதிவுகளை தேடி படிப்பேன்.

ஒரு நினைவு. ௨005 இல், பொங்கல் சமயம், கல்கி கிருஷ்ணமுர்த்தியின் பொன்னியின் செல்வன் பதினான்கு மணி நேரத்தில் படித்து, சென்னை நண்பர்கள் வீட்டிற்கு செல்லாமல், கோபம் வரவழைத்து கொண்டேன். லீவ் கிடைக்க அவ்வளவு கொடுமையான நேரம் அது. லயித்து படித்தேன். மராட்டி தமிழ் காம்பினேசன் என்பதால், நண்பர்கள் வீடு தேடி செல்வது வழக்கம். மனைவி உறவினர்கள் காணும் பொங்கலுக்கு வருவார்கள்.

நண்பர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? இரவு ஒன்பது மணி சுமாருக்கு, ஒரு நாற்பது பேர் சாப்பிடும் அளவு பொங்கல் கொண்டு வந்தனர். நூறு கரும்பு இருந்திருக்கும். இரவு நடு நிசி வரை, பிச்சைகாரர்களை தேடி தேடி பொங்கல் கொடுக்க ஒரு வழி ஆகிவிட்டது.

எனக்கு தெரிந்த சிலர் இப்போது ப்லோகே போடுகிறார்கள் கோபம் தணிக்க. அல்லது பின்னூட்டம் போட்டால் அழிப்பு செய்கிறார்கள். சில நேரங்களில் சில மனிதர்கள்!

No comments: