திருக்குறள் மிகவும் ஆழமானது. படிப்பது மிக கஷ்டம். சில குறள்கள் புரிந்த மாதிரி இருக்கும், பிறகு இல்லாமல் போகும். மனதில் நிற்காது. (நான் வேறு தாய் மொழி என்பதால் இன்னும் சிரமம்).
இந்த குறள் மிகவும் ரசித்த ஒன்று. என் நிலைமை தினமும் இது தான்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
என்ன சொல்கிறார் என்றால் - யார் என்ன வேண்டுமானாலும் சொல்லாம் ஆனால், தானே சரியாக புரிந்து கொண்டால் தான் சரி உன் அறிவுக்கு நல்லது .
ஒவொருவரும் புரிந்து நடக்க வேண்டிய குறள் இது.
ஐந்து முகங்கள் – கடிதம்
15 hours ago
2 comments:
அன்பு இராம் ஐயா...
தாங்கள் கூறியுள்ள அர்த்தம் ஓரளவிற்கே சரி. நான் படித்த வரையில்,
"யார் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி விடாமல், கூறியதின் உண்மையான பொருளை அறிந்து கொள்வதே அறிவுள்ளவர்களின் செயல்."
நான்கு குருடர்கள் யானையைப் பற்றி சொல்லும் கதை, உங்கள் வீட்டம்மாவிடம் கேட்டால் சொல்வார். கேட்டுப் பாருங்கள். அவர்களுக்கும் தெரியவில்லை என்றால், கமெண்ட்டவும்.
கூறுகிறேன்.
வாழ்த்துக்கள் தங்களது தமிழ்ப் பதிவுகளுக்கு...!
வரவேற்கிறோம்.
நன்றி.
பிலாகில் ஒரு வசதி, நம்முடைய அறிவுக்கு புலப்பட்டதை சொல்லலாம். அதை தான் குறளும் சொல்கிறது!
Post a Comment