'உலகில் எந்த சினிமாவிலும் யாரும் பத்து வேடமெல்லாம் போட்டு நடித்ததில்லை' என்பது தவறு. தமிழில் 1941ம் ஆண்டு வெளியான 'ஆர்ய மாலா' படத்தில் பி.யு.சின்னப்பா பத்து வேடங்களில் நடித்துள்ளார். 1950ம் ஆண்டு வெளியான 'திகம்பர சாமியார்' படத்தின் கதாநாயகன் எம்.என். நம்பியார் 12 வேடங்களில் நடித்துள்ளார். ஹாலிவுட்டில் 1913ல் வெளியான 'குயின் விக்டோரியா' படத்தில் 'ரோல்ஃப் லெஸ்லீ' என்பவர் 27 வேடங்களில் நடித்துள்ளார். 1915ல் வெளியான 'பர்த் ஆஃப் எ நேஷன்' படத்தில் 'ஜோஸப் ஹான பெர்ரி' 14 வேடங்களில் நடித்துள்ளார். 1929-ல் 'ஒன்லி மீ' படத்தில் 'லூபினோ லேன்' 24 வேடங்களில் நடித்துள்ளார். 1964ல் 'நோ கொஸ்டியன்ஸ் ஆன்சாட்டர்டே' படத்தில் ராபர்ட் ஹிர்ஷ் 12 வேடங்களில் நடித்துள்ளார்.
தலைப்பு தசாவதாரம் என்பது அந்தே படத்தை மார்க்கெட் செய்த நிறுவனம் பொய் சொன்னதிற்காக!
திருக்குறள்
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும். ( குறள் எண் : 293 )
மு.வ : ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.
கருணாநிதி :மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்.
சாலமன் பாப்பையா :பொய் என்று உள்ளம் உணர்த்துவதைச் சொல்ல வேண்டா. சொன்னால், அதைப் பொய் என்று உலகு அறிய நேரும்போது தன் மனமே தன்னைச் சுடும்.
ஐந்து முகங்கள் – கடிதம்
15 hours ago
No comments:
Post a Comment