உயரிய நோக்கம். திருமாவளவனின் உண்ணா நோன்பு! வாழ்க அவர் பண்பு.
இந்தியாவில், ஒரு குறிப்பிட்ட இனத்தவரின் பாசம் (தமிழர்கள் இங்கே) மானம், வெளிநாட்டில் இருந்தாலும் எவ்வளவு அழகாக வெளிப்படுகிறது. சொந்த ரத்தம். அது தான். நான் இதை எழுதுவதில் தவறில்லையே?
அவர் மலேசியாவில் தமிழர்கள் அடிபட்டது கேட்டு எப்படி துடிதுடித்து இருப்பார் என தெரியும்!
நிச்சயம் ஒரு வீர சாகசம் மனம் கொண்டவர் அவர்! (நானும் ஒரு தலித் என்பதால் இது சொல்லவில்லை!)
என் பதிவுகள், என் வாழ்க்கையை அப்பட்டமாக, உண்மையை சொன்னாலும், சில சமயம் (என் ஆங்கில பதிவுகள் தவிர்த்து) நல்ல விஷயங்கள் எழுத பயன் படுத்துவேன். பணத்தால் அன்பை விலைக்கு வாங்க முடியாது என்று எனக்கு நன்றாக தெரியும். ஒரு ஜான் வயிறும், ஆறடி மண்ணும் தான் நமக்கு சொந்தம்!
திருமாவின் நெஞ்சத்தின் கால்களில் விழுந்து தொழுகிறேன்.
அவரின் எண்ணம் (இந்த விரதம் - எடுத்த நிலை ) ஈடேற வாழ்த்துக்கள்.
உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் திருமா! ப்ளீஸ்!
டைனோஸர்கள் மாமதங்கள்!
7 hours ago



No comments:
Post a Comment