ஐந்து நாட்கள் ட்ரிப்பாக சென்னை பொங்கல் கொண்டாட வந்திருக்கும் நான்... குடும்பம்... எனக்கு தனியாக சில அரசாங்க நண்பர்களை சந்திக்கும் வேலை இருந்தது.
நேற்று சாயந்திரம் சென்னையில் துக்ளக் சோவின் 39வது ஆண்டுவிழா நடந்தது.
மாமனாருக்கு சோ நன்றாக தெரியும், மேலும் இந்தியன் எக்ஸ்பிரஸ் க்ரூப்பின் நண்பர்களின் மூலம் அழைப்பு. வி.ஐ.பி. வரிசையில் உட்காரும் வாய்ப்பு. பெரிய சினிமா நடிகர்கள் எல்லாம் வந்திருந்தனர். யாரும் அருகில் நெருங்கவில்லை!
எனது ஐ.ஏ.எஸ். நண்பர்களும் வந்திருந்தார்கள்... ஒரு சிறிய சந்திப்பு அங்கு....
அரசியல் கூட்டம் மாதிரி இல்லாமல், சரியான நேரத்தில் தொடங்கியது. என்ன கூட்டம் ஆரம்பித்த பின்னும் மக்கள் அலை வந்தது. ஜெமினி பளை ஓவர் முதல் கூட்டம் அலை மோதுகின்றது... என்றார்கள்.
பொங்கல் வயிற்றில் செய்த கடா முடாவுடன் அமர்திருந்தேன்....
நக்கலான ஒரு கூட்டம்.
சத்யம் நிறுவனத்தில் இருந்து அரசியல் ஆதிக்கம் எப்படி பைசா அமுக்கியது போன்ற நகைச்சுவை ... உலக நடப்புகள் போன்றவை... வித்தியாசமான நிகழ்ச்சி.
என்னால், கல்கத்தாவில் நடக்கும் கூட்டங்களை (ஒழுங்கு, அமைதி) நினைவு படுத்து பர்ர்க்க முடியாமல் இருக்க முடியவில்லை. அங்கிருந்து சிறிது இண்டேர்ணளைஸ் செய்திருந்தால், நன்றாக இருந்திருக்கும்.!
**************
இன்று காலை நண்பர் ஒருவர் ஏற்பாட்டின் பேரில் கல்கி ஆசிரியர் குழுவை சந்தித்து சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தேன். நேற்று சோ பேசிய ஆண்கள் பெண்கள் பெயரில் வளைய வருவது, அல்லது எழுதுவது குறித்து விரிவாக பேசினோம். அது ஒரு மாயக்கவர்ச்சி என்றார்...
இப்போது புத்தக சந்தை திருவிழாவிற்கு பயணம். மாமனாருடன் தானா... இரண்டாயிரம் ரூபாய் புத்தகங்கள் வாங்க பட்டியல் ரெடி. குழந்தைகளுக்கு ஆங்கில காமிக்ஸ் வாங்க வேண்டும்.
நாளை பாண்டிச்சேரி சென்று வருகிறோம்.
புத்தாண்டு
9 hours ago
No comments:
Post a Comment