Thursday, October 16, 2008

ஒரு ருபாய் கதை

இந்த கதையின் நாயகன் பிச்சைக்காரன் அல்ல, சிவாஜி படம் ஹீரோவும் அல்ல.

நாயகன் விஜய் தினமும் பஸ்சில் செல்லாமல் நடந்து தான் பள்ளி செல்வான். பஸ்சுக்கு காசு தினம் ஒரு ருபாய். அந்த காலம்.

அவன் அப்பா சந்தை வியாபாரி. வாரம் சில நாட்கள் சந்தை. அப்புறம் ஊரில் கூலி வேலை. அம்மாவிற்கு தோட்டத்தில் வேலை.

அரை மணி நேரம் நடை. என்ன வெயிலுக்கு ஒரு கப். மலைக்கு குடை. நேர்வழி. சந்தோசமான நடை பயணம். வழியில் செல்லும் மாடுவன்டிகளும், சில சமயம் கட்டாயமாக அழைத்து செல்லும் முருகு மாமாவும்.. அவன் நினைவில்.

தினமும் அந்த ஒரு ருபாய் சேர்த்து வைப்பான் உண்டியலில். ஊரில் சனி காலை சந்தை செல்வான். சனி ஞாயிறுகளில், விளையாட செல்லும் இடங்களில் ஒரு கூடை நிறைய கொய்யா, மாங்காய் போன்ற பழங்கள், மிட்டாய்கள் விற்பான். நண்பர்கள் இவன்டியாம் தான் வாங்குவார்கள். சந்தோசம்.

லாபம் வந்தது. மிகுதி ஆகும் பணத்தை அம்மாவிடம் கொடுப்பான். அவர்களுக்கு சந்தோசம். தங்கை ஒருத்தி. அன்பானவள். இந்த வியாபாரத்திற்கு சிறு உதவி செய்வாள். பேபர் கட் செய்து கொடுப்பாள்.

நாட்கள் சென்றன. அவனும் நன்றாக படித்தான். சம்பாரிக்கவும் செய்தான்.

பத்தாம் வகுப்பில் தேறியவுடன், அதே பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு. காசு இருந்தது என்றாலும் தினமும் நடை தான். உடல் பயிற்சி. மன வலிமை கொடுத்து என்றான்.

சேர்த்த பணத்தை, ஊரில் இருந்த ஒரு சிறு வங்கியில் போட்டான். போஸ்ட் ஆபீஸில் பணம் போட்டான். பணம் வளர்ந்தது.

நன்றாக படித்தான். ஸ்காலர்ஷிப் வந்தது.

அப்போதும் அந்த சிறு வியாபாரம் தொடர்ந்தது.

சுமார் பத்தாயிரம் ருபாய் அளவு நான்கு வருடங்களில் சேமித்து விட்டான்.

படிப்பு நன்றாக வந்தேதால், வாத்தியார்கள் ஊக்குவித்து, எஞ்சினீரிங் செல் என்று சொன்னார்கள். அவனுக்கு அவன் ஊர் அருகிலேயே இடம் கிடைத்தால் தேவலாம் என்று இருந்தது. சென்னையில் தான் கிடைத்தது. நல்லது தான், படித்து முடித்தவுடன் வேலை கிடைக்கும்.

பெற்றோருக்கு சிரமம் கொடுக்காமல், அவன் சேர்த்து வைத்த பணம் மற்றும்
ஸ்காலர்ஷிப் மூலம் படிப்பை முடித்தான். வேலையும் பிடித்தான்.

படி படியாக முநீரி, இன்று சென்னையில், பதினைந்து வருடங்கள் கழித்து, ஒரு பெரிய நிலையில், தொழில் செய்து வாழ்கிறான். அப்ப அம்மாவை, நன்றாக வைத்து பார்த்துக்கொள்கிறான். அவனோடு படித்த ஒரு பெண்ணை காதல் மனம் புரிந்தான்.

அவன் தங்கைக்கு நல்ல முறையில், படிக்க வைத்து திருமணம் செய்து வைத்தார்கள்.

அவன் ஊரில் இருக்கும் நன்றாக படிக்கும் குழந்தைகளுக்கு உதவி செய்கிறான்.

இதற்க்கு அவனுக்கு தினம் கிடைத்த ஒரு ருபாய் தான் காரணம்!

*****
ஒரு ரூபாயால் ஒரு சாம்ராஜ்யம் உருவாக்க முடியும் என்று சொல்லாமல் சொல்லும் கதை இது. என் நண்பர் ஒருவர் சொன்ன உண்மை சம்பவம் இது. 1980 களில் நடந்தது. நானும் இந்த கதையை, 1987 சமயம் ஐ.ஐ.டியில் படிக்கும் போது கல்லூரி ஹிந்தி மாத இதழில் எழுதியுள்ளேன்.

2 comments:

ஜாஃபர் said...

:-))

இவ்வளவு பிரசினை கொடுத்த இந்த கதையில இன்னமும் ஒரு கமெண்டு கூட வரலையா... என்னக்கொடும சார் இது...

கதை ஓக்கே ரகம்.. நிறைய்ய எழுதுங்க.. :-)

venkatx5 said...

நல்ல கதைதான் சார்.. 1990-ல எழுதி இருந்தா நீங்க எங்கியோ போய் இருப்பீங்க..