Thursday, October 16, 2008

தீபாவளி நன்கொடை

தீபாவளி நன்கொடை என்று இப்பொழுதே ஆரம்பித்து விட்டார்கள்.

எங்கள் அபார்த்மன்ட் தொத்தல் வத்தல் வாட்ச்மன், சிரித்து சல்யுட் அடிப்பது தமாஸ். நைட் டுடி இன்னொருவர். அப்புறம் கரண்ட் ஆள், கூட்டுபவர், போஸ்ட்மன்...

பதினாறு வீடுகளில், அசொசியாசன் மூலம் ஒரு மாதம் சம்பளமும் (மூன்றாயிரம் ) நாங்கள் எல்லோரும் சேர்ந்து சுமார் மூன்றாயிரம்+ ஒருவருக்கு கொடுப்போம்.

இன்று காலை, வட்ச்மன் வந்து சொன்னார். இந்த வருடம் விலைவாசி ஜாஸ்தி, மொத்தம் போனஸ் பத்தாயிரம் வேண்டும் என்றார். கொடுக்கலாமா? இருவர் இருக்கிறார்கள். சம்பளம் முன்னூறு ருபாய் ஜாஸ்தி செய்ய வேண்டும்.

அபர்த்மன்ட் மைண்டனன்ஸ் ஒரு மாதம் ஆயிரத்து ஐந்நூறு போல வருது. அதை அடுத்த மாதம் முதல் நூறு அதிகம் செய்ய வேண்டும்.

இரண்டு வேலைக்காரிகள், சென்றது ஒரு ஐந்நூறு (சேலை+ பணம்), வாட்ச்மன்களுக்கு ஐந்நூறு+. தனியாக பட்ஜெட்டில் ஆயிரம் கூடுகிறது.

எனக்கு இந்த வருடம் தீபாவளி டிரஸ் ஒரு ஷர்ட் போதும். பல முறை அது இதுஎன்று துணி எடுத்தேன்.

வீட்டில் மனைவிக்கு ஒரு இரண்டாயிரம் லெவெலில் சுடிதார். குழந்தைகளுக்கு மூன்றாயிரம் ஆகும்.

ஆக மொத்தம் இந்த வருடம் பத்தாயிரம் செலவு. சென்ற வருடம் போல. பரவாயில்லை?

கடைசியில் பார்த்தால் என் டவுசர் காலி! (வாங்கலே!)

No comments: