Thursday, October 16, 2008

நான் கண்ட குறுந்தொகை

குறுந்தொகை என்றாலே தலைவனும் தலைவியும் தான் வருகிறார்கள்..

ஒரு த்ரீ டைமேன்சனால் அவுட்லூக் இருக்கும்...

பிரிந்த த்யரம்.. குழந்தைகளின் ஏக்கம்.. பணம் திரைகடலோடி தேடி வருவான் என்ற ஆதங்கம், சொல்லி தீராது அந்த வலியின் உணர்ச்சிகள்.

காதலின் நினைவுகள், அவர்கள் வாழ்ந்த இடங்கள் சுற்றியே அமைந்துள்ளன.

அந்த காலத்தில் டி காப்பி ஷாப்கள் இல்லை காதலின் பாடம் படிக்க...

டிஜிட்டல் டைரி எழுதி நினைவுகள் தக்க வைத்துக்கொள்ள...

ஒரு சிறு உதாரணம் இங்கே...

காமம் காமம் என்ப; காமம்

அணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின்

முதைசுவல் கலித்த முற்றா இளம்புனம்

மூதா தைவந்தாங்கு

விருந்தே காமம் பெரும் தோளோயே.


வேண்டியவள் அருகில் இல்லாவிட்டாலோ, கிடைக்காவிட்டாலோ அன்பு நோயாகி ... தனிமை தேடும் மனது.. தீர்வு மருந்தல்ல, அரவணைப்பு தான்.

இந்த குறுந்தொகை பாடலில் காமத்தை அன்பு என்று பொருள் படும்படி வாசித்தேன்!

No comments: