Wednesday, October 15, 2008

பரிசல்காரனின் சிந்தனை சின்னசாமி


சிந்தனை சின்னசாமி

இப்போதெல்லாம் சில கார்களில் வண்டிபின்னோக்கி வரும்போது போடப்படும் மியூசிக்காகசாரே ஜஹான் ஸே அச்சா'வையோ, 'வந்தேமாதர'த்தையோ பயன்படுத்துகிறார்கள். போயும்போயும் பின்னோக்கிச் செல்லத்தானா இந்தப்பாடல்களைப் பயன்படுத்துவது? அதுவும் தவிர, இதுபோன்ற தேசபக்திப் பாடல்களைக் கேட்டால்இருந்த இடத் திலேயே அட்டென்ஷனில்நிற்கவேண்டுமென்று காருக்குப் பின்னால்இருப்பவர் நின்றுவிட்டால் என்னாவது? மாத்தியோசிங்கப்பா!

ஒரு நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தேன். ஒரு பெரிய தலை வரைப் பற்றிப்புகழ்ந்து சொல்லிக்கொண்டிருந்தான்.

''உனக்கு ஏண்டா அவரைப் பிடிக்கும்?'' என்று கேட்டேன்.

''அவர் ஒரு தடவை சொன்னாரு... அடிமைத் தளைகளைஉடைத்தெறிவோம்னு. அதிலிருந்து அவரோட கொள்கைக்கு நான்அடிமையாய்ட்டேன்!''

''அதுசரி!''

துணிக்கடையில் பேன்ட் கேட்டால் இப்பொதெல்லாம் குறைந்தது ஆறுபாக்கெட்டுக்குக் கம்மியாக இருக்கும் பேன்ட்களே இல்லை போல! Ôகார்கோ... பூர்கோÕ என்று மிரட்டியெடுக்கிறார்கள்.

''ஏம்பா... எல்லா பேன்ட்லயும் இவ்வளவு பாக்கெட் இருக்கே... பாக்கெட்கம்மியா...''

முடிக்கும் முன் கடைப் பையன் கேட்டான்... ''பாக்கெட் கம்மியா இருக்கறதுவேணுமா, பாக்கெட்டே இல்லாதது வேணுமா?''

''பாக்கெட்டே இல்லாததா..?''

''ஆமா. வேஷ்டி. அதான் பாக்கெட் இல்லாம இருக்கும்.''

எங்கப்பா, முப்பது வருஷத்துக்கு முன்னாடி சொன்னதுதான் ஞாபகத் துக்குவந்தது. 'வர வர இந்தக் காலத்துப் பசங்க பெரியவங்களை மதிக்கறதேகிடையாதுப்பா!'

பீர் மட்டுமே குடிக்கும் பழக்கமுடையவர்கள் 'ஹாட் அடிக்க மாட் டேன்'

என்று சொல்வதுண்டு. அது ஹாட் (HOT) ட்ரிங்க்ஸ் அல்ல. ஹா(ர்)டு (HARD) ட்ரிங்க்ஸ்.

பெப்சி, கோக் சாஃப்ட் ட்ரிங்க்ஸ்.

காபி, டீ ஹாட் (HOT) ட்ரிங்க்ஸ்.

மது வகைகள் ஹா(ர்)ட் ட்ரிங்க்ஸ்.

இனி சியர்ஸ§க்குப் போகும்போது கரெக்டா சொல்லுங்கப்பூ!

கேரளாவில் புதிய கல்வித்திட்டத்தின்படி, இந்த ஆண்டு முதல், காலாண்டுத்தேர்வு இல்லையாம்! அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுகள்தானாம்! இதைச்சொல்லி, ''நீ கேரளாவுல படிச்சிருக்கலாம்னு தோணுதா?'' என்று ஒருசிறுவனிடம் கேட்டபோது.. ''இல்லை...'' என்றான். புரியாமல், 'ஏன்டா அப்படிசொல்றே?'னு கேட்டேன். ''எக்ஸாம் இல்லைன்னா, லீவும் இருக்காதுல்ல?'' என்றான் அவன்!

'சாப்பிடும்போது பேசக்கூடாதுடா. உடம்புல ஒட்டாது'-ன்னு எங்க அம்மாசொல்லுவாங்க. ஆனா, சாப்பிட ஹோட்டலுக்குப் போனப்ப ஒருத்தர்பாக்கியில்லாம ஆளாளுக்குப் பேசிக்கிட்டே சாப்பிட்டுட்டு இருந்தாங்க. 'என்னகொடுமையான இரைச்சல்டா இது'ன்னு வெளில வந்துதான் செல்போன் பேசவேண்டியதா போச்சு!

*****

மேலே உள்ளவை இரண்டு இடத்தில் சுட்ட வடை.

( நல்ல முயற்சி பரிசல்காரரே... காபிரைட் உங்களுது தான்!)

பரிசல்காரனுக்கு வாழ்த்துக்கள்...!!

2 comments:

Vinitha said...

Nice. Thanks.

நவநீதன் said...

நல்லா இருக்கு ....