பிருந்தாவனம் உலகில் தான்
கோட்டைகள் பலவுண்டு
கொடிய நாகம மாமன் உண்டு
வீட்டிலேயே பகையுண்டு
கம்சா நீ தீர்ந்தாய் என்றாய்
ஒரு தினத்தில் கொன்றாய்
வான வேடிக்கைகள்
வாழ்க்கை சாஸ்திரங்கள்
பாகவதம் அருளினாய்
பிறப்பதால் ஒரு நன்மை என்றாய்
வாழ்ந்து பார்த்திவிடு, வளங்கள் பெற்றுவிடு
இது நீ சொன்ன கீதை
நல்லவை நன்மையாக
நடக்கும் என்றாய்
கலியுகத்தின் பாரம்
பாவங்களை ஏற்றாய்
ஆயர்பாடி கோபிகைகளுடன்
ஆட்டம் போட்டாய்
ராதை என்று ஒருவள்
வந்தவுடன் அடங்கி நின்றாய்
கவலை என்றால் கண்ணா தான்
அன்பு என்றால் கண்ணா தான்
ஆசை என்றால் கண்ணா தான்
உதவி என்றால் கண்ணா தான்
இனி நீங்கள் கண்ணா இல்லை
வாழ்க்கையில் கீதை சொல்லும்
பாகவதன் என்றாகி
இனி நந்தகுமாரனும் தான்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment