Tuesday, October 28, 2008

மனிதனில் காதல் தீ

எங்கோ செல்லும் நினைவுகள் இது. பேசி பார்த்து புரியாத வயது. கால் போன போக்கிலே நடந்தேன். பசிக்கு டீ அருந்தினேன். சாமியார் வாழ்க்கை. சொத்து இருந்து என்ன பயன், அப்பா அம்மா அண்ணன் தங்கை யாரும் என்னை சீண்டுவதிலேயே குறியாக இருந்தனர். இருப்பதை பிடுங்கிக்கொண்டு துரத்திவிட்டார்கள். வாழ்க்கை வெறுக்கும் நேரம் இது. வாழ்ந்தே தீருவேன் என்ற வைராக்கியம் வேறு எனக்கு இருந்தது. இந்தியா தேசத்தில் அலைந்து திரிந்த நாட்கள் அவை.

காசியிலே கஞ்ச விற்ற அனுபவம், ஜைசல்மீரில் பாங்கு குடித்து, வாகக்வில் கொட இருக்கும் காட்சி. எவனோ ஒருவன் பாஸ்போர்டில் வெத்தலை கடத்தியது... நினைவுகள்... சிரிப்பு தான் வருகின்றது.

கார்கில் யுத்தம் சூடாக நடந்த சமயம், அவள் - காஸ்மீர்த்து பண்டிட் பைங்கிளி, என் கண்ணம்மாவாய் வந்தாள் ரேஷ்மா. மேஜர் ராம் என்ற மராட்டியர் ஒருவருக்கு எடுபிடி வேலை ஆளாக வேலை செய்தேன். கீழ் வீட்டில் தங்கல். அவளும் வாழ்ந்தால் பக்கத்து வீட்டில். மேஜரின் மனைவி ஒரு மலையாள நர்சு. அரசாங்க அரவணைப்பு அவர்களுக்கு உதவியது. எனக்கும் சிறிது மலயாளம் கலப்பட தமிழ் பேச்சு துணை கிடைத்தது. கொஞ்ச நாட்கள் இருந்து விட்டு வேறு ஊர் சென்று விடலாம் என்று இருந்த நேரம் அது.

காதல் வசத்தால் கண் இமை மழுங்க, நான் ரேஷ்மாகாக காத்திருந்த நாட்கள் அவை. உயிரின் சுடர் தீ, ஆனது. மூண்டது.
ஹோமகுண்டம் ஆனது. காதல் இருக்கும் ஒவ்வொரு மனசுக்குள்ளும் ஒரு ஹோமகுண்டம் இருக்கிறது. அங்கே ஒவ்வொருவரும் தான் காதலியை பொருத்து ஒரு வகைத் தீயை வளர்க்கிறார்கள். காதல் குட்சிகளை பொறுத்து.... தீ எதுவாகவும் இருக்கலாம். அதை வளர்க்க வேண்டியது மட்டுமே முக்கியம். தீயை அணையாமல் காக்க வேண்டியது அதைவிட முக்கியம். எனக்கு ரேஷ்மா ஒரு தீ. தீயின் தன்மை அது தானே? அதை வளர்த்து வருவது அவசியம். தீ இல்லையென்றல் இதயத்தில் ஹோமகுண்டம் இருந்து பயனில்லை. தீ அணைந்து போனால், உயிர் அணைந்தது என்றே அர்த்தம். காதலுக்கு அவ்வளவு சக்தி. ரேஷ்மா என் உயிர் தீ.

அந்த காதல் தீக்காக, நான் காஸ்மீரில் இருக்க முடிவு செய்தேன். அவளும் என்னை தீவிரமாய் விரும்பினாள்.

காஷ்மீர் தான் எனக்கு வீடு என்று ஆயிற்று. யார் என்னை வெளியேற்றுவார்கள். உருது பேசினேன். அவர்களோடு ஒன்றாய் கலந்துவிட்டேன். தமிழ்நாடு மறந்துவிட்டேன். தமிழை மறக்கவில்லை.

ரேஷ்மாவின் அப்பா ஒரு பழ வியாபாரி. அம்மா இறந்துவிட்டாராம். வீட்டில் வேறு யாரும் இல்லை. ஹிந்துவாய் பண்டிட்டாய் அங்கு வாழ்வது கொடுமை. தாடி வைத்து முஸ்லீம் மாதிரி இருப்பார். "பிறந்த இடம். விட்டு போக மனசில்லை" என்பார். ராஜா ஹரி சிங்கதிற்கு வேண்டியவர் என்று சொன்னார். ராஜா கலை இருந்தது அவருக்கு. சில சமயம் குங்கும பூவும் விற்பார். பார்டர் கடந்து விற்று வருவார். காசு டாலரில். உயிர் பணயம். நிறைய பேர், விதிவசத்தால், டேரறிச்டு என்று மடிந்தார்கள். வாழ்க்கை வாழ பணம் வேண்டும் அல்லவா?

காஸ்மீர் பார்டர் இரு பிரிவுகள் என வாழ்பவர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து உள்ளனர். இந்தியாவும் பாகிஸ்தானும் அவர்களை இணைக்க வேண்டும். ஒரு நாள் ரேஷ்மாவின் அப்பா திரும்பவில்லை. ஊடுருவ முயற்சி என்று கொல்லப்பட்டார். மேஜர் ராம் தான் தகவல் சொன்னார். ரேஷ்மாவிற்கு துயரம் தாங்கமுடியவில்லை. சோகம் என்பது சொல்லி அடஙாதது. ரேஷ்மா தனி மரம் ஆனாள்.

மேஜர் ராமுக்கு எங்கள் காதல் கதை தெரியும். கல்யாணம் செய்து வைத்தார் அமர்நாத் போகும் வழியில். மேஜரின் மனைவியும் எங்களுக்கு நன்றாக உதவி செய்தார்கள்.

ரேஷ்மாவும் நானும் குடும்பத்தை ஆரம்பித்தோம். அந்த முதல் ராத்திரி....அனுபவம் உணர்ச்சிகளால் கரைந்தது. காதல் தீக்கு சூடு பற்றியது. ஒருவரோடு ஒன்றானோம்.

மே மாதம். அங்கு நிலைமை மோசம் ஆனது. மீண்டும் மீண்டும் தாக்குதல். எப்போது குண்டு வந்து விழும் என்பது தான் கவலை. ஸ்ரீநகரில் பரவாயில்லை, பார்டர் தான் மிகவும் கொடுமை.

எங்க்ளுக்கு ஒரு சிறிய வாக்கி டாக்கி கிடைத்தது. மாட்டிகொண்டால் பேசிக்கொள்ள. பழம், கும்கும பூ வியாபாரம் தொடர்ந்தோம். இருட்டும் போது, பார்டர் கடந்து சென்றோம்... காலையில் விற்று விட்டு மாலையில் இருட்டும் போது திரும்பினோம்.

மேஜர் ராமுக்கும் இது தெரியும். நிஜ டேரரிசடுகள் பற்றி உண்மை கிடைத்தால் நல்லது என்று விட்டு வைத்தார்கள். இது ஐம்பத்து வருடங்கள் நடப்பது தான். இரண்டு பக்கமும் பிடித்தால் வசூல் மழை தான், கையில் இருக்கும் டாலர் பணம் பிடித்து கொண்டு துரத்தி விடுவார்கள். ஜெயில் என்பது கிடைத்தாலும் கிடைக்கலாம். உயிர் நிச்சயம் இல்லை.

அமர்நாத் சீசன் வந்தாலே, குண்டு வெடிப்பு அதிகம் ஆகும். வியாபாரம் உள்ளூரில் தான். இந்த முறை ஹிந்து வெறியர்களின் கோட்டம் தாங்க முடியவில்லை. யத்ரிகர்களுக்கு எப்போதும் போல ஸ்கூல் கிரவுண்டில் தாங்காமல், சத்திரம் கட்ட ஒரு மிக பெரிய போராட்டம். அரசாங்கம் வேறு கவிழ்த்துவிட்டது.

ஒரு நாள் முடிவு செய்தோம், பெரிய வியாபாரம் ஒர்ன்று செய்து விட்டு, தமிழ்நாட்டுக்கு திரும்பி செல்லலாம் அவளோடு என்று. தாயகத்தோடு ஒத்து கொண்டால். இரண்டு கோவேறு கழுதைகள் லோடு. கும்குமபூ மட்டும். வழித்துணைக்கு யாரும் இல்லை. நாங்கள் இருவர் மட்டும் தான்.

ஓடையை கடந்து பார்டர் கடந்து, மலை ஏறி முசாபராபாத் செல்லும் வழியில் நின்றோம். வானம் கருத்து காலை ஆனது. எங்களது வியாபாரி வரவில்லை. பாகிஸ்தான் அறமி கூட்டம் தெரிந்தது.
எங்களை விசாரித்து விட்டு, உள்ளூர் என்று விட்டு விடுவார்கள் என்று நினைத்தோம். பிடித்துகொண்டார்கள். அவர்கள் குடிலுக்கு அழைத்து சென்றார்கள். ஒரு தூணில் கட்டி வைத்தார்கள். ஆயுத கிடங்குகள். மிக பெரிய தாக்குதல் ஒன்றுக்கு ஆயுத்தம் செய்து கொண்டு இருந்தார்கள். நிலைமை மிகவும் மோசம்.

மூன்று மணிக்கு தாக்குதல் என்று பேசிகொண்டார்கள். இது பெரிய அளவு என்றார்கள். கடைசி முயற்சியாம். பேரல் பேரலாக எதோ வந்து இறங்கியது. விஷ வாயூ? புரியவில்லை.

ஒவ்வொரு நிமிடமும் ரணங்களாக கழிந்தன. உயிரோடு விட மாட்டார்கள் என திரிந்தது.

இது நடக்க கூடாது என்று முடிவு செய்தோம். "ரேஷ்மா, எப்படி இருந்தாலும் கொல்ல தான் போகிறார்கள். ஒரு முடிவு கட்டி விடலாமா?" என்று கேட்டேன். சரி என்று தலை ஆட்டினாள். அவள் வாயால் எனது கட்டுகளை பறித்து விட்டாள். பைஜாமாவில் இருந்து இருப்பதை எடுத்தேன். கையிலிருந்த தீப்பெட்டியை பார்த்தேன். அந்த குடில்கள் தீபிடிக்கும் துணிகள். காய்ந்த குட்சிகள் அங்கு இருந்தன. சேர்த்து வைத்து. ஒவ்வொரு குட்சியாக பற்றி வைத்தேன்.

தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. பக்கத்தில் எல்லாம் பரவியது. குய்யோ முய்யோ என்று கத்திக்கொண்டு ஓடினார்கள் எதிரிகள். இன்னும் சிறிது நேரத்தில், இந்த கூட்டம் காலி. ஜெய் ஹிந்த்.

ரேஷ்மாவின் கண்களில் ஒரு நிறைவான சந்தோசம். "சாவு நம்மை எப்படி சேர்க்கிறது பார்த்தீர்களா?" என்றாள். அவள் என்னை நீண்ட நேரம் உற்றுப் பார்த்தவாறு இருந்தாள். பிறகு என் தோளில் தன் கையைச் சுற்றிக் கொண்டாள். இந்த அனுபவமும் அந்த முதல் அனுபவம் போலவே இருந்தது. காதலும் தீ மாதிரிதான். தீ அனைத்தும் ஒரு தன்மையையே கொண்டவை அல்லவா?

*****
இந்த கதை நான் ஐ.ஐ.டியில் படிக்கும் போது ஹிந்தியில் எழுதியது. பரிசும் வாங்கினேன். பிற்பாடு ரோஜா, மற்றும் உயிரே (தில் சே),
பானா, பார்டர் போன்ற படங்கள் வந்துள்ளன. இருந்தாலும் எனது கதை ஒரு வேறு முறையில் ஆக எடுத்து பண்ணலாம், ஒரு ஹிந்துவின் கண்ணோட்டத்தில்.

(c) காபிரைட் - ரமேஷ் ஆர்யா ரத்தன் டெண்டுல்கர்.

No comments: