ஏப்ரல் எட்டு முதல் இரண்டு மாதங்கள் அமெரிக்காவில் இருந்தோம்.
நேற்று அதிகாலை வந்தோம்.
மேரிலாண்டில் சில்வர் ஸ்ப்ரிங்க்ஸ் ஏரியா தான். அக்கா வீடு.
குழந்தைகள் பள்ளி விடுமுறை நன்றாக கழித்தார்கள்.
ஜூன் முதல் வாரத்தில், பத்து நாட்கள் ஐந்தாயிரம் மையில்கள் அமெரிக்கா முழுதும் சுற்றியது தான் விசேஷம்.
இன்று பள்ளி சென்றார்கள்.
அடுத்த வருடம் அங்கு செல்வோமா? தெரியலையேப்பா!
இந்தியா இந்தியா தான்!
***
ப்ளாகர் உலகில் தகராறு என்று படித்தேன்.
என்னையும் திவ்யாவையும் வைத்து கிண்டல் செய்த ஒருவன், இப்போது செய்வதை பார்த்தால் சிரிப்பு வருது.
ஒரு வருடமாக ஒருவரை ஒரு பெண், கிண்டல் கேலி பகடிகளால் துன்புறுத்தியதாக தெரிகிறது. அதற்கு அவர் ஒரு பதில் புனைவு போட்டு எடுத்தாராம். இவ்வளவு நாள் தான் ஒருவர் பொறுத்துக்கொள்வார்?
சமரசம், நல்லது நடந்தால் சரி.
ஐந்து முகங்கள் – கடிதம்
15 hours ago
No comments:
Post a Comment