Friday, October 10, 2008

சினிமா - மலரும் நினைவுகள்!


இந்த பதிவு, இந்த இரண்டு பதிவுகளுக்குசம்பந்தம் கிடையாது... மன்னிக்கவும்....

அடுத்த ஓராண்டு தமிழ்ச்சினிமா இல்லை?

சினிமா - மலரும் நினைவுகள்!

ஏதோ என்னால் முடிந்தவரை நான் எழுதியுள்ளேன்.

சரி இதோ கேள்வி பதில்.

*********

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

முதலில் பார்த்தது என் அப்பா அம்மா அழைத்து சென்ற 'அமர் அக்பர் அந்தோணி' அமிதாப் நடித்தது. சிறு வயது ஒரு ஆறு இருக்கும். இன்னும் நினைவில் உள்ளது. இருட்டு . சிகரெட் புகை வாசம்... போப்கார்ன். பேல் சாட். பாண்டா. ஜாலியாக இருந்தது. அப்புறம் அக்காவின் ஜடை இழுத்து திட்டு வாங்கியது, மறக்கவில்லை. படம் கடைசியில் தூங்கி விட்டேன். காலையில் வீட்டில் எழுந்தேன். படம் முடிந்து விட்டதா என்று கேட்டேன். ஒரே அழுகை.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

சரோஜா. பெங்களூர். ஒரு தப்ப தேயடர்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

கிழக்கே போகும் ரயில். என் மனைவி ரசித்த படம். டிவிடி வாங்கினோம். முதல் சீனில் இருந்து எனக்கு பிடித்தது. சினிமா என்றால் ஒரு நல்ல திரைக்கதை வேண்டும். பாரதி ராஜா அருமையாக செய்துள்ளார். தமிழ்நாடு மண் வாசம்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

பல. இருந்தாலும் காமடியில் சதி லீலாவதி. காதலில் ஒரு தலை ராகம். அருவெறுப்பு நியூ. அப்புறம் அழகி, வெற்றி கோடி கட்டு, இப்படி பல. என்ன இருந்தாலும் வீடு என்று ஒரு படம், பாலு மகேந்திராவின் படைப்பு. ஒரு கிழவரின் நடிப்பு (சதி லீலாவதி தாத்தா?) ... சரியான அடி.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

இதயக்கனி என்று ஒரு எம்.ஜி.ஆர். படம், சமீபத்தில்
டிவிடி பார்த்தேன். மலை தோட்ட தொழிலாளி சப்ஜெக்ட். அருமை. அதில் அவர் இரட்டை இல்லை சின்னத்தை அழகாக அறிமுகம் செய்து ஆட்சி பிடித்தார். 1977.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

வெய்யில். அந்த மஞ்சள் நிறம் காமிரா பில்டர். அருமை. கொஞ்சம் வருத்தம்.


6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

நிறையா டைம் இருக்கு. ஜே.கே.ரித்தீஷ். பற்றி தெரிந்து கொள்ள குமுதம், விகடன் மற்றும் பல ப்லோகர்ஸ்.

7.தமிழ்ச்சினிமா இசை?

டப்பாங்குத்து, ஒரு முறை 'நாக்க மூக்க' கேட்டு பார்க்கவும். அப்புறம் அந்த அராபிய ராய் இசை சுடல். இரைச்சல். பெங்காலி திரைப்படம் அந்த வகையில் பெட்டர். ஹரிப்ரசாத் சொவ்ராச்யா போன்றவர்கள் இசை அமைப்பார்கள். ரவிஷங்கரும் செய்தார். (காந்தியில் அவர் தான் இசை.)

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

பெங்காலி, மராட்டிய மற்றும் ஹிந்தி படங்கள். ஓம் சாந்தி ஓம். மிகவும் பிடித்தது. ஆங்கிலத்தில் நேற்று இரவு பார்த்த ராண்டம் ஹார்ட்ஸ். ஹாரிசன் போர்த் நடித்த படம். உணர்ச்சிபூர்வமான நடிப்பு. அதை தான் நண்பர் ரமேஷ் அரவிந்த் ஆக்சிடன்ட் என்று கன்னடத்தில் எடுத்தார். படம் ஹிட். அப்புறம் மீண்டும் மீண்டும் பார்ப்பது, மகேன்னாஸ் கோல்ட். என்ன அருமையான திரைக்கதை. இதே லெவெலில் தி கூட். தி பேட். தி அக்லி.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

ஆம். மற்றும் இல்லை. யாரும் என் கதை கேட்க மாட்டேன்கிறார்கள். ராம் கோபால் வர்மாவோடு ஒரு முறை பேசினேன். என் பெங்காலி நண்பரோடு ஒரு படத்திற்கு திரைக்கதை அமைத்தேன். அந்த கதை ஹிந்தியிலும் எடுத்தார்கள். தமிழில் வராது. குத்து பாட்டுக்கு சான்ஸ் இல்லை. அந்த படம் வேண்டுமானால் நான் டைரெக்ட் செய்கிறேன். என்னிடம் பல கதைகள் உள்ளன, குழந்தைகள் முதல் பெரியவர் வரை திருப்தி படுத்த.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பாதி செத்து விட்டது. பாக்யராஜ் போன்றவர்கள் படம் எடுக்க வேண்டும். இப்போது சிம்பு ஒரு வித்தியாச கோணத்தில் எடுக்கிறார். அப்புறம் இந்த சென்னை இருபத்தி எட்டு, சரோஜா, கோவா டீம். நான் தமிழ் சினிமாவிற்கு வந்தால், நல்லாட்சி அமையும். காவிரி பிரச்சனை தீர்த்து வைப்பேன். இது உறுதி!

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

ரொம்ப சந்தோசம். ஆயிரம் படங்கள், அல்லது குறைந்த பட்சம் முன்னூற்றி அறுபத்தி ஐந்து உலக படங்கள் பார்ப்பேன். நன்றி.

தமிழர்கள் டிவி பார்பார்கள். பழைய படங்களையே இந்திய தொலைகாட்சியில் முதன் முறையாக என்று சொல்லி பதினெட்டாம் முறை போடுவார்கள், அப்போது பார்பார்கள். அப்புறம் அழுகை டிவி சீரியல்கள் உள்ளன. கோலங்கள். சொந்தம். ... வீடா... போன்றவை. ஜவ்வு இழுப்பார்கள்.


5 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

interesting!

தமிழ்மணப் பதிவுக் கருவிப் பட்டையை இணைத்தால் பின்னூட்டங்கள் திரட்டப்படும். தகவலுக்காக.

ஆர். முத்துக்குமார் said...

நறுக் பதில்கள். படித்தேன். ரசித்தேன். சிம்பு கோணலாக எடுக்கிறார் என்று எழுதவந்து டைபோகிராபிகல் எர்ரரில் வேறு ஏதும் வந்துவிட்டதோ? :-)

Ramesh said...

Thanks.

சிம்பு கோணலாக illai கோணம் thaan!

லக்கிலுக் said...

பதிவுக்கு சம்பந்தமில்லாமல் ஒரு போட்டோ ஏன்? :-)

பதில்கள் சூப்பர்!

Ramesh said...

நன்றிகள்.

எனக்கு சிறு வயதில் இருந்தே சிகரட் கண்டால் ஆகாது.

கல்கத்தா புகைக்கு பிரபலம். அதிகம் சினிமா தியேட்டர் உள்ளே பிடிப்பார்கள். வாசம் தாங்காது.

அதனால் ஒரு பதிவு... போட்டோ