குலந்தருஞ் செல்வந் தந்திடுமடியார்
படுதுயராயின வெல்லாம்,
நிலந்தரஞ் செய்யும் நீள்விசும் பருளும்
அருளொடு பெருநிலமளிக்கும்,
வலந்தரும் மற்றுந் தந்திடும் பெற்ற
தாயினுமாயின செய்யும்,
நலந்தருஞ் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா வென்னும் நாமம்.
- பெரியதிருமொழி
எவ்வளவு அருமையான வார்த்தைகள். கடவுள் திருநாமம் சொல்பவர்கள் (எம்மதம் ஆனாலும் என்று கொள்ளுங்கள் இங்கே), காசு பணம் செல்வம் பற்றி கவலை படாமல், தங்கள் மனசெல்வத்தை நிலையாக்கி கொள்வது தான் சிறந்தது என்கிறார் பாடல் ஆசிரியர்.
அவ்வளவு உண்மை. ஜாதி மதம் ஒழிந்தால் எவ்வளவு நன்மை. ஒவ்வொருவரும் ஜாதி ஒழிக்க பாடுபடுவோம். காதல் புரிவோம் ஜாதி ஒழிக்க (கல்யாணம்ஆகாதவர்கள் மட்டும் - என் தமிழ் ஐயர் மனைவி சிரிப்பது கேட்கிறது, மராத்தி மஹர் தலித்தை மணந்தவள் ஆயிற்றே).
ரெட்டிகள் கோவில் கட்டியதால் (ஸ்ரீசைலம்), அவர்கள் ஜாதி பாராட்டட்டும் என்கிறார் ஜெயமோகன் . முட்டாள்தனமான எழுத்துக்கள்.
ஐந்து முகங்கள் – கடிதம்
13 hours ago
No comments:
Post a Comment