Wednesday, September 17, 2008

உண்மை சம்பவம்

நிச்சயம் ஒரு கேடு கெட்ட ஆசாமி தான் இது செய்தது. ஒரு வாரம் முன்னால்.

பெங்களூரில் பெண்களுக்கு பதுகாப்பு என்பது குறைவு என்று தான்தோன்றுகிறது.

என் மனைவி ஒரு முறை கம்பெனி காரில் அலைபேசி தொலைத்து விட்டார். தினம் காலை எட்டு வந்து அழைத்து செல்லும், பிற்பாடு மாலை ஆறு மணிக்கு வீடு திரும்புவார் அதில். குழந்தைகள் நான்கு மணி அளவில் வீடு திரும்புவார்கள். நான் இருப்பேன். இல்லாவிட்டால், பக்கத்து வீட்டில் சாவி. (வீட்டில் விலை உயர்ந்த பொருள் எதுவும் கிடையாது!).

கம்மி விலை போன் தான். அவர்கள் கம்பெனியில் கேமரா உள்ளது உள்ளேஅனுப்ப மாட்டார்கள்.

அதில் கிடைத்த நம்பர்கள் வைத்து (நிச்சயமாக, அந்த டிரைவர் இல்லை, போன் தொலைந்தது தெரியாது என்று சொல்லி, போனை விற்றிருக்கலாம்... பிரிபைட் கார்டு தான்.) எதாவது தில்லு முல்லு செய்யலாம்...

அதில் வீட்டு நம்பர் கிடைத்திருக்கும் போல தெரிகிறது. ஒரு நாள் மதியம் இரண்டு மணி இருக்கும் "நான் செகுரிட்டி பேசறேன், உங்க வீட்டம்மா புருஷன் வெளியே நிக்கிறார் என்று..." ஒரு திடுக்கிடும் கால். என்னடா நான் குத்து கல்லாடம் உட்கார்த்திருகிறேன் என்று நினைத்தேன்.
வேறு யாரவது இருக்கும் என்று சொல்லிவிட்டேன் முதல் முறை.

எங்கள் அபார்த்மேன்ட் சிறியது, பதினாறு வீடுகள் தான். அதனால் ஒரு புல் தடுக்கி பயில்வான் செகுரிட்டி தான் இருப்பார். சாயந்திரம் வேறு ஒருவர். பலசாலி. பதினோரு மணியில் இருந்து காலை ஐந்து வரை விசில் அடிப்பார், ஒரு மணிக்கு ஒரு தடவை. ரோந்து வருவார். பன்னிரண்டு மணி நேரம் டுட்டி.

மதியம் இரண்டு மணிக்கு தினமும் ஒரு போன் வருது... இது தொடர்ந்தது இரண்டு முறை. நான் முக்கால் வாசி நேரம் வீட்டில் இருந்து தான் வேலை / தொழில் செய்கிறேன். ஒரு நாள், ஒரு பொம்பை துப்பாக்கி எடுத்து கொண்டு, கீழே ஓடினேன் "அம்மா வருகிறார்" என்று செகுரிட்டி இடம் சொல்லி விட்டு. கூரியர் வந்தால் வீட்டிற்கே அனுப்பி வைப்பார்கள். விவகாரம் தான். சிலர் வீட்டு ஆட்கள், மனைவி கிழே வந்து சாமான் எடுத்து செல்ல சொல்வார்கள். அப்படி என்று நினைத்து இருக்கலாம்.

வெளியே ஹெல்மெட் போட்டு கொண்டு ஒருவன் நின்றிருந்தான். நல்ல வேலை ஒரு பெண்மணியும் என் பின்னால் வந்ததால், செகுரிடியை பார்த்தேன், கை காட்டினார் அவன் தான் என்று. அவன் ஓடவில்லை. "என்ன வேண்டும்" என்று கேட்டேன். அவன் ஹெல்மெட் கழட்ட வில்லை. "நீ யார் என்றான்..." துப்பாக்கி எடுத்து காட்டினேன்.. ஓடி விட்டான் பைக் விட்டு விட்டு, ஒரு மொபைல் போன் கிலே விழுந்தது. அது என் மனைவி தொலைத்த அலைபேசிதான். டோடல் சார்ஜ் டோவ்ன். கால் லோக் அழிக்கபட்டிருந்தன. (இன்னும் அந்த பைக் பி.டி.எம். லே அவுட் போலீஸ் நிலையத்தில் நிற்கிறது, தலைமை காவலர் யாரவது வந்து கேட்டால், தகவல் கொடுப்பார்! அது திருட்டு வண்டி.)

எதற்கு அப்படி தையரியமாக வர பார்த்தான் என்று விளங்கவில்லை எனக்கு அப்போது கொஞ்ச நேரம் ! கெட்ட எண்ணம் தான், இப்படியும் இந்த காலத்தில் இருப்பார்களா? ஆனால் எப்படி வீட்டு அட்ரஸ் கிடைத்தது என்று தெரியவில்லை. எஸ்.எம்.எஸில் ஒன்றும் இல்லை என்றார் மனைவி. அனேகமாக அந்த போன் கம்பெனி மூலம் விவரம் கிடைத்திருக்கும் அல்லது டிரைவர்?

இன்று அந்த கார் கம்பெனியில் இருந்து டிரைவர் வரவில்லை.

1 comment:

Thangavel Manickam said...

அடப்பாவிகளா ?? இப்படியுமா மனிதர்கள் இருக்கிறார்கள் ??