லேஹ்மான் பிரதர்ஸ் திவால்!
ஹென்றி லேஹ்மான் 1844 ஆம் வருடம் ஜெர்மனியிலிருந்து தம்பிகளோடு அமேரிக்கா வந்து மோன்ட்கோமேரி, அலபாமாவில் செட்டில் ஆனார். வட்டி வியாபாரம். ஜு இனத்தவர். (ஷ்ய்லோக் பற்றி நினைத்தால் நான் பொறுப்பல்ல) அலபாமாவில் கறுப்பின மக்கள் அதிகம் வாழ்ந்தார்கள் அடிமைகளாக.. அப்போது. இப்போதும், சுதந்திரத்தோடு.
எவ்வளவு கொடுமை! நூற்றி ஐம்பத்தி எட்டு வருட சகாப்தம் முடிவா? தெரியவில்லை. 1930 மற்றும் 2001 மார்க்கெட் கிராஷ் தப்பித்த கம்பெனி. ஆயில் கம்பெனி முதலாளிகள் வாங்கிய கடன் (பேரல் 150 டாலர் இருந்த போது, இப்போது 92 மட்டும், பெரிய லாஸ்...). தலையில் முக்காடு! புஷ் பாலிசி ப்ரிச்சனை? ஒபாமாவிற்கு வந்த பிறகு மிகவும் கொடிய கஜானா உண்டு. விலைவாசி இப்போது அங்கு தலை விரித்து ஆடுது.
நான் ஐ.ஐ.எம்.இல் படிக்கும் போது (1989 முதல் 1991 வரை) ஐந்து லட்சத்திற்கு மேலே வருட சம்பளம் இந்தியாவில் கொடுத்த புண்ணியவான்கள். இப்போதெல்லாம் இருபது லட்சங்கள் குறையாது. என மனைவிக்கு (காதலி அப்போது) வேலை கொடுத்தார்கள். நான் ஐ.டி. அமேரிக்கா என்று வாழ்க்கை நினைப்பு காலம் டாட்டா க்ருபில் சேர்ந்தேன், அக்கா பிரியா வேறு அங்கு அமெரிக்காவில் இருந்தாள்.
சில வருடங்கள் மனைவி பம்பாயில் வேலை செய்தாள். பிறகு பிலேதேல்பியா ஆபீஸ் வேலை கொஞ்ச காலம்... (போனஸ் எல்லாம் ஒருவருட சம்பளம் அளவு கொட்டி கொடுத்தார்கள் மேர்ஜர்ஸ் தேபார்டுமேன்டில் ) கல்யாணம் ஆன பிறகு பெங்களூர் நிறுவனம் ஒன்றிற்கு பெரிய பொறுப்பில் வந்தாள், கால் சம்பளத்தில். நான் சென்னையில் அரசாங்க வேலை. மாதம் பத்து நாட்கள் தான் பெங்களூரில். வாரக்கடைசி. சில சமயம் லீவு சமயத்தில் அவர் சென்னையில் இருப்பார். சில சமயம் சேலம் வெள்ளி இரவு வருவார். நானும் இரவு ஒன்பதுக்குள் இருப்பேன். நண்பர் ஒருவர், சொந்தம் ஒருவர் என்று இடம் கொடுத்தார்கள். திங்கள் தான் காலை ஆறு மணிக்கு கிளம்புவோம். அவர் நோர்த், நான் ஈஸ்ட். வாழ்க்கை நன்றாக இருந்தது இரண்டு வருடம். குழந்தைக்காக ஒரு வருடம் சென்னையில். பிறகு வேறு கம்பெனி மாற்றல்...மனசு நிம்மதி தான் வேண்டும் என்று முடிவு... சென்ற வருடம் மீண்டும் பெங்களூர்... இப்போது மனித வள மேன்பாடு தலைமை பொறுப்பு. வாழ்க்கை ஓடுகிறது. என்ன அமேரிக்கா போன போது, பிசினஸ் லா படிப்பும் முடிதிருகிறாள், போனசுக்கு நன்றி. சென்னையில் ஒரு கொட்டிவாக்கத்தில் வீடு கட்டி ஐந்து வருடத்தில் செட்டில் ஆக வேண்டும். என்ன வேலை செய்வது?
லேஹ்மான் பிரதர்ஸ் தலைமை நிர்வாக ஆபிஸ் நியூ யார்க்கில், டைம்ஸ் சதுரம்அருகே. அது ஒரு சுற்றுலா தளம், மேலாண்மை படிப்பு படித்தவர்களுக்கு.... (கோவில் குளம் போகின்ற மாதிரி...) தி.மு.க. தலைவர் / அமைச்சர் (மறைந்த) பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் மகனும் அங்கு தான் சீனியர் பார்ட்னர் ஆக இருந்தார். தனியாக ஒரு விமானம் வைத்திருக்கிறார்.
எப்படி இருந்த நான்... (1940)
எப்படி ஆகிட்டேன்? (௨000)
நானும் ப்ராஜக்ட் விசயமாக சில காலம் அங்கு உள்ளே டாட்டா நிறுவனத்திற்காக வேலை செய்தேன். ஆப்பிரிக்க இனத்தவர்கள் அதிகம் வேலை செய்த நிறுவனம் (நாமும் ஜனனம் அங்கிருந்து தான் அல்லவா?)
இப்போ? (2008)
வருத்தமாக நிர்வாக ஊழியர்கள், கம்பெனி முன்னால்...
இந்தியாவிற்கு லேஹ்மான் பவுன்டசொன் மூலமாக கண் பார்வை கிடைக்க பணம் கொடுத்தார்கள். அதை பற்றி....
எல்லாம் நல்லது நடந்தால் சரி...
ஐந்து முகங்கள் – கடிதம்
13 hours ago
No comments:
Post a Comment