ஆண்களின் மார்பு பார்வை பற்றி என் மனைவியுடன் ஒரு சூடான விவாதம்.
ஆண்கள் எல்லோரும் பெண்கள் என்றால் (அம்மா, அக்கா, தங்கை, வயதானஉறவினர்கள் மற்றும் பொருந்தாத உறவை விட்டு விடுவார்கள்) பார்க்கும் பார்வை விவகாரம் தான். கண்ணாடி போட்டவர்கள் சமாளித்து விடுவார்கள்.
சீனியர் என்பதால், அவருக்கு, கண்ணோடு கண் பார்வை. கண் நோக்கி பேசுதல்.
வக்கிரம் சில சமயம் உண்மை என்று தோன்றுகிறது.
மார்பு (முலை, கொங்கு) ஒரு உடல் பாகம் என்று இருந்து விட்டு போகட்டுமே. ஒரு மன நிலை வகை வக்கிரம் அது.
நான் அமெரிக்காவில் கொஞ்சம் காலம் வாழ்ந்த போது ஒரு வீட்டில் இரண்டு நண்பிகளோடு இருதேன், இரண்டு பெட்ரூம், பாத்ரூம் வீடு. ஆண்கள் ஒரு ரூம், பெண்கள் தனி - அட்டசெட் பாத்ரூம். வாடகை ஆளுக்கு ஐந்நூறு டாலர்கள். சாப்பாட்டிற்கு நூறு ஆகும். கரண்ட், ஸ்டீம், காஸ் போன்றவை இன்னும் ஒரு இருபது. தவறான் பார்வை பார்த்த மாதிரி ஞாபகம் இல்லை. நான்கு பேர், இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள். ஒரே கம்பெனி. ஒரே வயது. மாதம் ஆயிரம் டாலர் மிச்சம் செய்வது குறிக்கோள். ஒவ்வொருவரும் பணம் மிச்சம் செய்யும் கவலை. அக்கா கல்யாணம் செய்த பின்னால் பால்டிமோர் மாதம் இருமுறை செல்வேன்.
சமையல் ஒவ்வொருவரும் உதவி செய்து சமைத்து, பரிமாறிகொள்வோம். காலை எப்போதும் ஸிரிய்ல்ஸ் தான். இரவு அதிகம் வைத்த குழம்பு மற்றும் சாதம் வைத்து அல்லது சப்பாத்தி, ஆபிஸ் கொண்டு போவோம். இரவு உணவு சமைத்து எட்டு மணிக்கு எல்லோரும் பேசிக்கொண்டு. (பிரண்ட்ஸ் டிவி சீரியல் வந்த சமயம்). சில சமயம் பக்கத்து வீட்டு (நம் சமூக நண்பர்கள் வரலாம்). ஆபிஸ் நண்பர்கள் வார இறுதியில், கட்டாயம் வருவார்கள். நாங்களும் போவோம். பாதி நாள் ஹோட்டல் சாப்பாடு. புப்பெ.
ஒரே ஒரு சமயம் உணவு உண்ணும் போது, சாப்பாடு மேஜையில் குழம்பு ஊற்றும்போது , என்னை அறியாமல் க்ளீவேஜ் பார்த்து (போட்டிருந்த டிரஸ் அபப்டி) வாங்கி கட்டிகொண்டேன் - "எங்கப்பா உன் பார்வை போகுது" என்றாள் அருணா. என் நண்பன் சுதாரித்து கொண்டு என்னை காப்பாற்ற "டிரஸ் அபப்டி போட்டால், என்ன செய்யறது" என்று. அன்று அவள் பரா போடவில்லை போல இருந்தது. திரும்பி கேட்டாள் " நீங்க ஷார்ட்ஸ் போடும் போது, தொடையை நாங்க பார்கிறோமா?"
பெருமாளே!
ஆனால் அந்த வாக்கியம் என்னை மிகவும் பாதித்தது. அன்றிலிருந்து பார்வையில் மிக கவனமாக இருந்தேன். (குளிக்கும் போது, டோவெல் எடுக்காமல் சென்று, உள்ளிருந்து கேட்டு வாங்கியது, மேல் சட்டை போடாமல் ஜூலை மாதத்தில் வெற்றுடம்போடு இருந்தது....)
நாங்கள் இன்னும் நண்பர்கள், குழந்தை குட்டி என்று ஆகிவிட்டது. அருணா தெலுகுக்காரி. பணக்காரி. சொந்த முயற்சியில் உழைத்து சம்பாரிக்க ஆசை.சென்னையில் வளர்ந்தவள். தமிழ் தெரியும். என் பதிவுகளை படிக்கிறாள்.இப்போது ஒரு பெரிய கம்பெனியில் டைரக்டர்.
சில மாதம் முன்பு, சுடிதாரில் பரா பட்டை தெரிய என் முன் அமர்ந்து பேசினார் ஒரு பெரிய இடது அழகு பெண், இடம் விசயமாக பேசிகொண்டிருந்தேன். நான் கவனமாக இருந்து விட்டேன். எதற்கு வம்பு. பட்டது ஒரு காலில்... பழைய ஞாபகம்.
விவாதத்தின் முடிவு - பார்வை பத்திரம். பார்த்துக்கோ என்று டிரஸ் பண்ணினால், நன்றாக பார்த்துக்கொள். இரு பாலாரும் அவரவர் உடைகளில் கவனம் செலுத்த வேண்டும்!
ஐந்து முகங்கள் – கடிதம்
13 hours ago
1 comment:
Read this dude... http://sowmyatheatres.blogspot.com/2008/09/blog-post_19.html
Post a Comment