எனக்கு எப்படி ஜெயமோகன் மூலம் தமிழ் காவியங்கள் படிக்கிறேனோ அதேமாதிரி நிர்மல் வர்மா ஹிந்தியில் ஓர் விற்பன்னர். சிறு கதைகளில் ஒரு புரட்சி செய்தவர். தமிழர் யாருக்கும் அவரை தெரியாது, சுஜாதா உட்பட.
பெண்களை வர்ணிப்பதில் ஒரு வல்லவர். செக்ஸ் ஒரு முக்கிய அம்சமாக வைத்துக்கொண்டு எழுவது எனக்கு பிடிக்காது. அது மஞ்சள் பத்திரிக்கை சமாச்சாரம். மட்டமான இலக்கியம்.
என்னை போலவே கம்முனிச சிந்தந்ததில் ஊறி வளர்ந்தவர். ப்ராகில் பத்துவருடம் வாழ்ந்து, இலக்கியத்தில் ஊறியவர். அவருடைய 'வோ தின்' நாவல் பிராகை (செக்ஸ்லோவாக்கியா) கண முன்னால் நிற்க வைக்கும். கம்முநிச்டுகள் பற்றி பயம் வருவிக்கும். ஒரு ஜீன்ஸ் விளம்பரம் (லீவிஸ்) ஒரு பழைய காருக்கு பண்ட மாற்றம் செய்யும்போது காட்டும் ஊர் தான் அது. ஒரு நாள் அங்கு செல்ல வேண்டும்.
அவருடைய 'தீன் யெகந்த்' ( மூன்று அழகான அம்சங்கள்) ஒரு அருமையான நாடகம். இங்கேயும் பெண்கள் தான் முக்கிய அம்சம். என்ன கொடுமை சார் இது. என் அப்பாவும் கல்கத்தாவில் நாடகம் போடுவார் அமெரிக்காவை சாடி. எனக்கே பிடிக்காது. அக்காவும் நானும் அங்கிருந்த காலம், சண் ப்ரன்சிச்கோவில் ஒரு நாடகம் போட்டார்.
அவருடைய ' தேஜ் ' கதையை படி பித்து பிடித்தவன் போலே இருந்திருக்கிறேன்.
இப்போது அவர் ஆத்மா சாந்தி அடைந்திருந்தாலும், வஞ்சனை இல்லாமல் புகழலாம். 1999 இல் ஞானபீடம் அவார்ட் அவருக்கு கொடுக்கப்பட்டது. அப்போதுஅவருக்கு எழுபது வயது. சிம்லாவில் அவரை சந்தித்தேன். அசோகமித்ரனும் எழுவதாவது வயதில்பெரிய அவார்ட்ஸ் வாங்குகிறார்.
கதை எழுத்தாளர்கள் எல்லாம் கவிதை எழுதுவது குறைவு. ஆனால் இவர் எழுதிய கவிதைகள் .... அருமை. பாதி மாசோ-சாடிசம் நிறைந்த உணர்வுகள். எப்படி என்றால், ஆண்கள் பெரியவர்கள், பெண்களை ரசிக்க படைத்தவர்கள் என்று இருக்க கூடாது. என் எண்ணம்.
குறைவாக எழுதினாலும்... நிறைவாக செய்தார் என்று சொல்ல வேண்டும். இன்னும் ரஷ்யாவில் அவர் எழுத்து பிரபலம்.
எனக்கு தினமணி நிறைய பிடிக்கும், படி படியாக தமிழ் கற்றேன் அதை வைத்து. தமிழ் படிக்க ஆரம்பித்த போது, 1991 சென்னை சாலிக்ரமத்தில் வீடு. டாடா கம்பெனியில் வேலை. காலை ஹிந்து நியூஸ் பேப்பர் படித்தவுடன், தின மணியில் சில சமயம் தலையங்கம் மற்றும் ஒரு அரை பக்கம் (நடுவில்) கட்டுரை (ஏ.என்.சிவராமன் எழுதுகிறார் என்று சொன்னார்கள் - கஸ்துரி ரங்கன் - தின மணி கதிர் ஆசிரியர் - கணையாழியில் சில காலம் இருந்தவர் - சொன்ன ஞாபகம்) படிப்பேன். சினிமாக்களில் நடிக்கவும் செய்தார் என்றார்கள். தெரியவில்லை. கூத்துப்பட்டறை முத்துசாமி, கற்பகம், வாத்தியார் ராமன் போன்றவர்களை நான்அறிவேன். அவர்கள் ஞாபகம் வைத்திருபார்களா என்று தெரியவில்லை. ரவி விசுவநாதன் என்பவர் அமேரிக்கா வாழ் இந்தியர் கூத்துப்பட்டறை ஆட்களை அங்கு அழைத்து சென்று விழா எடுத்துள்ளார்.
இப்போதும் இணையத்தில் தின மணி படிக்கிறேன்.
Astrology: மேஷலக்கினத்திகு உரிய முக்கிய பலன்கள்
2 hours ago
No comments:
Post a Comment