தனம் திரைப்படம் ஒரு வங்காள எழுத்தாளர் சிறுகதை ஒன்றை காப்பி அடித்து திரைக்கதை படைக்கப்பட்டது. தேவை இல்லாமல் வரும் கொண்றவரசிகள் என்பதால், இதோடு விட்டு விடுகிறேன்.
அந்த கதையின் சுருக்கம், ஒரு வேசி, எப்போதும் ஐந்து ரூபாய் தான் வாங்குவாள், சுத்தமாக இருக்க வேண்டும், அப்படிப்பட்டவர்களை தான் கலவி செய்வாள், தன்னிடம் வரும் ஒரு வியாபார கனவானை மனம் செய்கிறாள். இரண்டாம்தாரமாக, முதல் தாரம் குழந்தை இல்லாமல் இறந்து விடுகிறாள். ஒரு பெண் பிள்ளைக்குதாய் ஆகிறாள். அதனால் அவர்கள் வீட்டில் கொன்று விடும்படிசொல்கிறார்கள். அதை அவளுக்கு பிடித்த ஒரு ஜோசியகார மாமாவின் மூலம் செய்கிறார்கள். இதை தெரிந்த அவள், எல்லோரையும் சாப்பாட்டில் விஷம் வைத்து கொல்கிறாள். அவளுக்கு மரண தண்டனை கிடைக்கிறது. தூக்கு ஏறும் முன், ஜெயிலில் தற்கொலை செய்து கொள்கிறாள். (சேலை)
சென்னைக்கு ஒரு வேலை விஷயம் செப்டம்பர் 15 (நேற்று) சென்றேன். எல்லாம் அரசாங்க அலுவல்கள் முடியவில்லை. கையுட்டு வாங்குபவர்கள் மட்டும் சந்திக்கபட்டனர். ரொம்ப சின்செயர். அவர்கள் லீவு எல்லாம் காசு கிடைத்தால் எடுக்க மாட்டார்கள்.
நண்பரின் அலுவலகம் டைடல் பார்க்கில். லீவு தினம் ஆனதால், யாரும் இல்லை. பார்கிங் சுலபம். நண்பரின் அறையில் சரவணா பவன் எடுப்பு சாப்பாடு. அநியாயம். என்பது ரூபாய்க்கு, அறை வயிறு. ஆனால் அந்த பாகிங்கிற்கு கொடுக்க வேண்டும்!
எனது லாப்டோபில் ஒரு 'வேலைக்காரி' பதிவு போட்டேன். இன்டர்நெட் கார்டு ரொம்ப ஸ்லோ. பத்து நிமிடம் ட்ய்பிங். அப்லோடு பத்து நிமிடம். என்ன கொடுமை அனில் இது?
கதேட்றல் ரோடு சென்றோம். கிரேசி மோகன் எச்சை துப்பிக்கொண்டு இருந்தார், வெத்தலை சீவல். கை அசைத்தேன். பார்த்த மாதிரி இல்லை?
அப்போது ஒரு நல்ல திரை அரங்கில், நண்பர் முருகனுடன் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கூட்டம் இல்லை. எட்டுமணிக்கு விமானம் என்பதால் மூன்று மணி ஷோ பார்த்தேன். ஆறு மணிக்கு சிற்றுண்டி முடித்துவிட்டு, அண்ணா சாலையில் காரில் திரும்பியது ( கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வேறு சென்றேன் - மைசூர் பா - குழந்தைகளுக்கு, அல்வா மனைவிக்கு!) ஒரு பரபரப்பு. கிண்டியில் இருந்து அறை மணி நேரம் தான் ஆயிற்று. எப்போதும், கத்திபராவில் கொடுமையாக இருக்கும். எழு மணிக்கு வந்து, லவுஞ்சில் சென்று அமர்தேன். ஒரு நாள் டாக்ஸி வாடகை ஆயிரம். ஆட்டோவில் இரண்டாயிரம் ஆகியிருக்கும். மீண்டும் ஒரு ஜூஸ் மற்றும் காளிபிளவர் வறுவல், நன்றி ஜெட்.
எட்டு மணிக்கு விமானம். படம் பற்றி டைப் செய்தேன். (சூடு ஏற்றவேண்டும் பிறகு!)
படம் பற்றி....
ஜீவாவின் காமிரா அருமை. கண்களில் ஒற்றி கொல்லேலாம் போல இருந்தது.
படிக்க (வேலை செய்வது போல ஆபிஸ் காட்டுகிறார்கள்) செல்லும் ஆனந்த் (பிரேம்), தனத்தை (சங்கீதா) பார்க்கிறன். ஆவல் வருது. கூடல் கொள்கிறான் ஐந்நூறு கொடுத்து. எதற்கு தனம் வேசி ஆகிறாள்? (அவள் தாயும் ஒரு வேசி - ஜமிந்தாருக்கு, தாசி என்கிறார்கள்). புரியலே. சினிமாடிக். லாஜிக் இல்லாமல். ஊருக்கு உதவி செய்கிறாளாம்! கும்பகோனதிர்க்கும் ஹைதேரபாதிர்கும் ஒரு முடிச்சு. காதல் கொள்கிறான். கல்யானம் செய்ய விருப்பம் கொள்கிறான்.ஒரு மாமாவிற்கு தெரியும் தனத்தைபற்றி. சிக்கல். ஒரு ஜோசியர் அவள் மீது கண் வைக்கிறான். அவன் தான் ஹீரோகுடும்ப குரு. அவன் சொல்லி கல்யானம் நடக்கிறது. இடையில் கொஞ்சம் ஜோக்மசாலா. பாட்டு. சினிமா.
பிரேம் மற்றும் கிரீஸ் கர்நாட் நடிப்பு மிகை. நயமான நடிப்பு சங்கீதா. நான் அவர் சொதப்பி விடுவார் என்று இருந்தேன் - ஜோடி நம்பர் ஒன்னு மாதிரி.
போஎடிக் ஜஸ்டிஸ் என்று கடைசியில் முடிக்கிறார்கள் (போலிஸ் கேசு க்ளோஸ்), அவள் மீண்டும் தெருவில், வேசியாக. (தாமினி கதை ஞாபகம் வருதா? அதில் விற்றவர்களை கொல்லுவாள் தாமினி...)
ஆமாம் கதை - அது தான் ஒரு முறை மேலே சொல்லிவிட்டேனே? (கிளைமாக்ஸ் மட்டும் மாற்றம்)
தெலுங்கு வாடை ஜாஸ்தி. தமிழ் ரசிகர்கள் கையை விரித்தால், இன்னும் ஒருகுத்து பாட்டு போட்டு தெலுங்கில் வெளியிட்டால் வெற்றி. (ரங்காச்சாரி ஒ.கே.வா?)
ஐந்து முகங்கள் – கடிதம்
13 hours ago
No comments:
Post a Comment