Saturday, September 20, 2008

படி பயணம் எழுத்து

ஆண்கள் பார்வை பெண்கள் மீது... பெண்கள் ஆண்களின் சாகசம் பார்க்கும் நேரம்..

பேருந்து பயணம். நான் அவ்வளவாக சென்றதில்லை. மயிலாப்பூர் டு ஜெமினி
மட்டும் ஒரு முறை, ஒரு எழுத்தாள நண்பர் பயணம் செய்து பார் என்று சொன்னதிற்காக, மதியம் நான்கு மணிக்கு... சத்யம் போய் ஒரு பாடாவதி படம் ஆங்கிலத்தில் பார்த்தோம், விசுவல் எபக்ட்ஸ் - குரங்கு காவியம். அநியாய டிக்கெட் விலை.

கோவையில் எல்லாம் நான் வாழ்ந்த போது, பேருந்து பயணம் தான். அரசாங்க அலுவல்களுக்கு, உதவியாளரோடு (டவாலி) கார் அல்லது ஜீப். சொந்த பயணம் எல்லாம் அட்டோ அல்லது
, பஸ் தான். கல்யாணம் ஆகியிருக்க வில்லை அப்போது. பீளமேடு செல்ல எஸ் 19 எடுத்து, சில சமயம் சிங்கநல்லூர் சென்று எழுந்து திட்டு வாங்கிய அனுபவம் உண்டு. கண்டக்டர் புது சீட்டு வேறு வாங்க வைப்பார்! ஒரு முறை அப்படி ஆன சமயம், சிங்கநல்லூர் அரவான் சாமி திருவிழா (எங்கள் ஊர் காளி கோவிலில் நடப்பதை போல) பார்த்தேன். மெய் சிலிர்த்தேன். கரகாட்டம் என்ற பெயரில் நடக்கும் தெரு கூத்து நன்றாக இருந்தது. கதையும் சொல்லி ஆடுகிறார்கள். திண்டிவனம் பக்கம் இருந்து வந்தவர்களாம். என்னை அடையாளம் கண்டு கொண்டவர்கள், வீட்டிற்கு அழைப்பதும் உண்டு. என்னுடைய பிரின்சிபல் காரணமாக போகமாட்டேன். பரதநாட்டியம் என்று சொல்லி பப்ளிக் காபரே நடந்தது, கன்றாவி, போலிசு சப்போர்ட் உண்டு. போலிசுக்கு என் அடையாளமும் தெரிந்தால், ஒரு சல்யுட் வைத்து விட்டு, ஓரம் போய் விடுவார்கள்.

பிற்பாடு பெங்களூரு வந்த பிறகு, சென்ற வருடம் வால்வோ சர்விசு அறிமுகம்
ஆன சமயம், எலேக்ட்ரோனிக்ஸ் சிட்டி சென்று வந்தேன், கல்கத்தா நண்பர்கள் கூட்டத்தோடு. இந்தியாவில் புகழ் பெற்ற கம்யூனிச தலைவரும் என்னோடு வந்திருந்தார். கல்கத்தாவில் வர இன்னும் காலம் ஆகும்.

இங்கே ஒரு அருமை பதிவு.... பொடி பொண்ணு என்பவர் எழுதுகிறார்... அதை
நினைவு கூர்ந்து எழுதுகிறார் கிருஷ்ணகுமார் (லக்கிலுக்)... வாழ்த்துக்கள்!

குறைகள் எல்லாம் நடப்பது அரசு போக்குவரத்து பேருந்துகளில் தான். அனந்த விகடனில் நாஞ்சில்
நாடன் எழுதிய பேருந்து பயணம் குறித்த கட்டுரை... நன்றாக இருந்தது. அவரை கிண்டல் அடிக்க ஒரு கூட்டம் இருக்குது... திருப்பூரை சேர்ந்த என் நண்பருக்கு அவரை நன்றாக தெரியும். எழுத்தாளர்கள் மத்தியில் இதெல்லாம் சகஜம்னு, ஒரு எழுத்தாள நண்பர், என்னோடு தமிழ்நாட்டில் அரசாங்கத்தில் பனி புரிந்தவர், சொல்லுகிறார். திட்ட திட்ட பெருமை விளையும்னு அறிஞ்சர்கள் சொன்னது, குட்ட குட்ட பனைமரம் வளையும் போல என்று சொல்லியது போலே. புதுவையில் ஒரு கூட்டம், தி.ஜ.ரா (ஜானகி ராமன்) பற்றி பேசினார் ஒரு எதார்த்த நாயகன் இயக்குனர். அதற்கு எதிர்த்து பேசியே ஒருவர், கரிசல் காடு மண்ணின் மைந்தர், சொன்ன விஷயங்கள் தமாசு. பெயர் சொல்லாமல் விட்டு விடுகிறேன். இல்லையென்றால் தமிழ் தெரியாத தலித் என்று திட்டுவார்கள்.

எனக்கு பிடிக்காத தமிழ் பேச்சாளர், அடாவடி செய்தவர்... நெல்லை கண்ணன். என் அருமை பாரதியை கேவலம் செய்துள்ளார். யாரும் மன்னிக்க முடியாது. விஜய் டிவியில் அவர் முற்போக்கு ஜாதிக்காரர் என்று சொல்லி பிற்போக்கு ஆனவர்.

பேராசிரியர் ராமசாமி உயிரோசையில், எழுதியது ஏற்கனவே நான் மேற்கோள்
காட்டியிருந்தேன், ஒரு பதிவில். மனுஸ்ய புத்திரன் நன்றாக தன் எடிட் செய்கிறார். நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் அவருக்கும்.

ஆமாம் இப்படி கூட செல்வார்கள என்ன? எப்படி ஏறுவார்கள்?


நன்றி படம் சப்ளை செய்தவர்களுக்கு.


No comments: