சனிக்கிழமை, நானும் என் மனைவியும், இரண்டு படங்கள் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தோம். மாமியாரும், மாமனாரும், எங்கள் இரண்டு குழந்தைகளை பார்த்துக்கொள்ள ... கிளம்பினோம்.
முதலில் படிக்காதவன்... மதியம், மூன்று மணிக்கு.... தியேட்டர் விளம்பரம் எல்லாம் செய்யவில்லை... ஒரு நல்ல ஏசி அறை. சில பிரபலங்களை பார்த்தோம்.
என்ன சொல்ல, ஒரு கமர்சியல் படம்.
ரஜினி நடித்த, படமும் இதுவும், தலைப்பை தவிர வேறு ஒன்றும் இல்லை. காதல் தான் கரு. உலகத்தின் மசாலா... தெலுங்கு படத்தின் ரீமேக்!
வில்லத்தனம் கொடுமை. சுமன் (மேக்கப் கேவலம்) மற்றும் சாயாஜி ஷிண்டே! மீண்டும் தெலுங்கில் டப் செய்து வெளியிடுவார்கள்..... தமன்னா அழகு. அப்புறம் ஹீரோ? ஜிரோ!
*************************************
வில்லு பார்க்க சென்றது பத்து மணி இரவு ஷோ. அரை தூக்கம், மயக்கம், இரண்டு பாட்டில் தண்ணீர். இருந்தாலும், பாடல்கள் வித்தியாசமாக படம் பிடிக்கப்பட்டு இருந்தன, தூங்கவில்லை.
சரியான கரம் மசாலா. விஜய், நயன்தாரா காம்பினேசன். என்னவோ, வயதான் தோற்றம், பொலிவு நயனுக்கு. சரியா? கழுத்தில் சுருக்கங்கள்... முப்பதை தாண்டி விட்ட பருவம்? சில இடங்களில் விஜய்க்கு அக்கா மாதிரி இருக்கிறார்!
பிரபுதேவா கொஞ்சம் போக்கிரி லெவலில் ஏமாற்றி விட்டார். சொதப்பல் இல்லாமல், எடிட்டிங் செய்துள்ளார்கள்....
பிரகாஷ் ராய் என்ற வில்லன் நடிகர், போரடிக்க ஆரம்பித்து விட்டார்.
வேறு வில்லன் மூஞ்சி வேண்டும், தமிழ் சினிமாவிற்கு.
வடிவேலு காமெடி சுமார் தான், இருந்தாலும் சிரிப்பு தான்.
இந்த படத்தின் தொடக்கத்தில், அரசியல் வரும் ஆர்வம், கட்சிக்கொடி மாதிரி, ரசிகர் மன்றக்கொடி. எல்லோருக்கும் ஆசை தான்...
தேவி ஸ்ரீ பிரசாத் இசை. தெலுகு படம் மாதிரி இருந்தது. இதுவும் அங்கு டப் செய்யப்பட்டு சில ஊர்களில் ஓடும்.
என் நூல்கள் அமெரிக்கவெளியீடாக…
6 hours ago
2 comments:
எச்சரிக்கை:
பார்க்காதவர்கள்: புது வருடத்தின் அதிர்ஷ்டசாலிகள்..
மீறி ரிஸ்க் எடுப்பவர்கள் மிகுந்த தைரியசாலிகள்..
பார்த்தவர்கள்: துரதிருஷ்டசாலிகள்.
இதற்கு மேல் விமர்சனம் தேவையில்லை.
வில்லு பட விமர்சனம்.. http://venkatx5.blogspot.com/
Post a Comment