skip to main |
skip to sidebar
படித்ததில் பிடித்தது
கவிதை தலைப்பை க்ளிக்கினால், எழுதியவரின் இடத்திற்கு செல்லும்.புத்தரும் நானும்
ஈரத்தெருக்களை ரசித்தவாறே
மெதுவாய் நடந்து கொண்டிருந்தேன்..
உற்றுப் பார்த்த விழிகளுக்குள் புத்தர்
புத்தரா என வினவியதற்கு
ஆமென்று தலையசைத்தார்
இலங்கையிலிருந்து திரும்பியிருந்த புத்தர்
முடிவில்லா வன்முறைகளைப் பற்றிய
என் கேள்விகளுக்கெல்லாம்
புன்னகை பிரியாமல் சொல்லிக்கொண்டிருந்தார்
புத்தர்கள் தோன்றுவது இங்கு வீண் என்று.
மக்கள் திடீரென்று திரண்டனர்;
சிலர் அவரைக் கிள்ளிப் பார்த்தனர்
சிலர் இழுத்துப் பார்த்தனர்
கைப்பேசியில் அவசரமாய் புகைப்படம் எடுத்தனர்
அரசியல்வாதிகள் சிலர் கட்சியில் சேரும்படி
மிரட்டியும் கெஞ்சியும் கேட்டுக்கொண்டனர்
எல்லாத் தொலைக்காட்சியிலும்
அலை அலையாய் புத்தர் நிரம்பினார்!
முடிவில்லா கேள்விகளின் கூர்முனைகளில்
ஓய்ந்த புத்தர்
தப்பித்துப்போக எத்தனித்தார்
அவருக்கு முன் வந்து விழுந்த
ஒரு கைத்துப்பாக்கியையும்
ஒரு கூரான கத்தியையும்
தன் மென் கரங்கள் நடுங்க
எடுத்துப் பார்த்தபடி.
*******************
படித்ததில் பிடித்தது..
நரசிம் எழுதிய மனசுக்கு ரீசார்ஜ்.!. குளிச்சா..
வினிதா சுட்டிகாட்டிய இதுவும் ஒரு வகை டேரரிசம் தான்
திவ்யாவின் வீட்டுக்கடன் அமெரிக்கா வங்கிகள் திவால்
****
அடுத்த பதிவு நான்கு மாதத்தில் நானூறு...
ஏதாவது என்னை எழுதவேண்டும் என்றால், சொல்லுங்கள்.
நன்றி.
1 comment:
சூப்பர்..!
மிகச்சிறப்பா இருக்கு!
Post a Comment