திவ்யா ஒரு கனவுப்பென், தேவதை. இப்போதும். எப்போதும்.
இப்போது நாற்பது வயது ஆகி, ஒரு ஆண்டியாக வலம் வந்தாலும்... பெருத்த உடலோடு அழகாக தான் இருக்கிறார். ஜோ என்று ஒரு அமெரிக்கனை (வெள்ளைக்காரர்) காதல் மனம் புரிந்து இருக்கிறார். காதல் வேறு. உடல் சம்ப்ந்தம்ப்பட்ட விஷயம் வேறு, என்ற சமுதாயத்தை விரும்புபவள். இனனும் குழந்தை இலலை. தத்து எடுத்துகொள்வார்கள் என நினைக்கிறேன். (வயசு இன்னும் இருக்கப்பா!). தி ஜாய் ஒப் செக்ஸ் புத்தகத்தை எனக்கு அறிமுகம் செய்தவள்!
திவ்யாவின் முதல் காதல் கோவையில் ஸ்டேன்ஸ் ஸ்கூலில் படித்த ஒருவன். இவள் மணிசில் படித்தாள். சினிமா நடிகை லதா மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்கள். அவன் அப்பா ஒரு சீட்டு கம்பனி நடத்தியவர். திவால். விட்டுவிட்டாள். சுருட்டிய சொத்துக்களில் பசங்கள் இப்போது அமெரிக்காவில் சாப்ட்வேர் விற்பதாக கேள்வி. (டிபன் மட்டும் சாப்பிட்டு இருக்கேன்!)
அப்புறம் கஷ்டப்பட்டு படித்து, கோவையில் ஒரு மதம் ஸ்தாபனம் நடத்தும் ஒரு காலேஜில் எஞ்சினீரிங். அங்கே ஒருவன். வேறு ஒரு தேபர்த்மன்ட். இருந்தாலும் காலேஜ் போட்டிகளில் பழக்கம். அவன் ட்வின்சில் ஒருவன். அண்ணன் ஒருவளை பிடித்து ஓடினான் (ஜாதி வெறியனின் மகள்). ஒரு காமடி நடிகருக்கு சொந்தம். ஜூனியர் விகடனில் எல்லாம் கதை வந்தது. இவளுக்கு அதெல்லாம் பிடிக்கவில்லை. (ஒண்ணுமே ட்ரை பண்ணலே. கேஜிலே வேஸ்ட் பண்ணிட்டான்.)
அப்புறம் அந்த மத போதகர் மகன் மீது (அம்சமான ஆள் ... இப்போதும். ஈமைலில் பேசிக்கிறோம் ) மூன்று குழந்தைகளின் அப்பா, இவளுக்கு ஒரு இது இருந்திருக்கிறது. ஒரு விளக்கவுரைக்காக அமேரிக்கா சென்றாள், கட்டுரை சமர்ப்பணம் செய்தாள். பரிசு கிடைத்தது. இந்தியா வந்த பிறகு, கூப்பிட்டு அனுப்பினான். அப்போது அவனை சந்தித்தாள். (சாப்பிட்டிருப்பான், தப்பிச்சுட்டேன்!)
இடையிலே டைம்னு ஒரு கோச்சிங் இன்ஸ்டிடுட். காட் எழுத பயிற்சி. பயிற்சியாளர் கோவை சேர்ந்த கேரளா நாட்டவர். தினமும் காலை ஆறு முதல் எட்டு மணி வரை, ஒரு வருடம் பழக்கம். வீகெண்டில் காப்பி சாப்பிட்டு இருக்கிறோம் என்றாள். (காப்பி மட்டும் தான். டிபன் கூட ?)
திவ்யாவின் காதல் எல்லாம் இந்த சினிமா காதல் மாதிரி இருக்காது!
அஹமதாபாத்தில் சீட் கிடைச்சாச்சு. இடையிலே பாரீன் காலேஜ் ஒன்றிர்க்கும் அட்மிசன் கிடைத்தது. இரண்டு வயது குறைவான தங்கச்சி மீது பாசம். விட்டு போக மனசில்லே. அவளும் கூட வரட்டும் என்று இருந்துவிட்டாள். ட்ரைனில் தான் போய் வருவாள். முப்பது மணி நேரம். இதுக்கு அமெரிக்காவே பெட்டர்னு சலிச்சுக்குவாள். என்னோட முதல் வாரத்தில் இருந்து நல்ல பழக்கம். நான் ஒரு முடிவு பண்றதுக்குள்ள நீயாக (என் மனைவி பற்றி) பிடிசுட்டே என்றாள். என் மனைவியை வைத்துக்கொண்டே "... இன்னும் எனக்கு உன் மேல ஒரு இன்பாஸுயெசன் இருக்கு" என்றாள். அப்போது அவள் ஒரு பையனை வெகுவாக காதலித்தாள். பாம்பே எல்லாம் போய் வந்தாள் அவனோடு. (யூஸ் பண்ணிட்டாண்ட அவன். கல்யாணம்னு பேச்சை எடுதவுடேன் ஆளு எஸ்கேப்.) எங்கள் பாட்ச்சில் ஒரு நாற்பது ஜோடி. இருபது தான் கல்யாணத்தில் முடிந்தது. ரெகார்ட் பிரேக். மொத்தமே அறுபது பெண்கள் தான் அப்போது. நூற்றி என்பது ஆண்கள். சரி அவனோடு இனனும் நட்பு? இப்போ எனக்கு கிழே தான் வேல பாக்குறான்! (விதியின் கொடுமை. டிஸ்க்லொஸர் படம் மாதிரி பண்ணிடாதேடி!)
எல்லோரும் வேலைக்கு போனார்கள். திவ்யாவும் என் மனைவியோடு லேமனில். பம்பைவாசி. ஒரு வருடத்தில் அமேரிக்கா போய்விட்டாள். "ஒரு தடவை கஸ்டமர் கூட டிபன் சாப்பிட்டேன். அவ்வளவு தான். வெள்ளைக்காரன் ரோமன்ஸ் பண்ற ஸ்டைல் தனி. இருந்தாலும் அம்மா சொன்னதாலே, இந்தியாவிலே ஒரு பயனை பிடிக்கலாம்னு திட்டத்திலே இருந்தேன்" என்றாள். "மாச்சோ சடிஸ்டிக் வெறியன்கள். எல்லாம் வசதி வேலை காசு பணம்'னு அலையுற ஜென்மங்கள். ஒருத்தனையும் பிடிக்கலே. தங்கச்சி ஆஸ்திரேலியா போய்ட்டாள். சொந்தத்தில் ஒருவனோடு செட்டில் ஆயிட்டாள். அவள் கொஞ்சம் கருப்பு. அக்செப்டிங் எக்ஸ்ட்டேன்சியலிசம்." என்றாள். நல்ல வருத்தம் போல!
அதன் பிறகு கிரீன் கார்டு வந்து செட்டில் ஆனாள். தனி மரம். அமேரிக்கா பாஸ்போர்ட்டும் வந்தது. பல வித ப்ரோமொச்ன்கள். நான் ஒவ்வொரு தடவை அமெரிக்காவில் பார்க்கும் போதும் வேறு வேறு ஆட்கள். டேடிங் கல்சர். பத்தாவது ஆள் தான் இந்த ஜோசப் என்கிற ஜோ. பணக்காரன். இந்திய கலாச்சாரம் ரொம்ப பிடிக்கும். ஐந்து வருடம் பழக்கம். லிவிங் டுகேதர். இந்தியாவிலே யாருக்கும் தெரியாது. "ஒரு தடவை வலேண்டைன்ஸ் டே அன்னிக்கு கல்யாணம் பற்றி கேட்டான். ஒகேய்னு சொல்லிட்டேன்". குதுகலமாக சொன்னாள். நானும் அப்போஅங்கே போயிருந்தேன். அவளோட அப்பா அம்மா தங்கச்சி புருஷன் குழந்தைகள் எல்லாம் வந்தார்கள். தினமும் பகவத் கீதை படிக்கிறான் ஜோ. ஆனா குழந்தைகள் மேல மட்டும் ஆசை வர மாட்டேன் என்கிறது, என்றாள். இன்றும் அதே கல்யாண கலை. "ரொம்பத்தான் கடமையை செய்றான் போல" என்று மனதிற்குள் நினைத்தேன் "பலனே எதிர் பார்க்காமல்".
குழந்தைக்காகவாவது இன்னொருத்தன் கூட புல் மீல்ஸ் சாப்பிடனும் என்றாள்.
ததாஸ்து. (எல்லாம் நன்மைக்கே!)
*******
அவள் அகராதியில், டிபன், லிமிடெட், புல் மீல்ஸ் பற்றி நான் கேட்டு தெரிந்து கொள்ளவில்லை!
மேற்கூறிய விஷயங்கள் ஒரு கற்பனையே.
Astrology மகர லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்
15 hours ago
1 comment:
1. எழுத்துப் பிழைகளைச் சரி செய்ய இயலுமா?
2. word verificationஐ எடுத்தால் நலம்!
Post a Comment