சுரேஷின் கதை என்று சொல்வதை விட ஒரு வாழ்க்கை அனுபவம் என்று சொல்லெலாம்.
அவன் பாளையம்கோட்டையில் பிறந்து வளர்ந்தவன். இன்று ஒருஅமேரிக்கா கம்பனிய ப்ரேசிடன்ட். டாக்டர்கள் யூஸ் பண்ணும்சாப்ட்வேர் செய்து விற்கும் பொழப்பு. கோடிகளில் பிரள்கிறான். ஒரு நாள் என்னை அவன் பழைய வீட்டிற்கு அழைத்து சென்றான். "கலக்டர்...என் பாட்டி உன் ஜாதி தெரிஞ்சா... வீட்டுகுள்ளே விடமாட்டள்". எனக்கு பெரியதாக படவில்லை.
சுரேஷ் கஷ்டப்பட்டு படித்த காலம் மறக்க முடியவில்லை.
அவன் பிறந்த போது அவனுக்கு வைத்த பெயர் சுரேஷ்வர சாஸ்த்ரி. தாத்தா பெயராம். அப்பவே பெயரை சுருக்கி விட்டார். ஸ்கூல் அட்மிசன் சமயம் சுரேஷ் என்று சுருக்கிவிட்டார். அன்று அவள் அம்மோவோடு ஒரு பெரிய களேபரம் நடந்தது.
சுரேஷின் அப்பா கோவில் பூசாரி. ராமநாதன்.
ஒரே மகன். அம்மாவுக்கு ஏதோ பிரச்னை. மேலும் குழந்தைகள் இல்லை. அவன் பக்கத்து வீட்டுக்காரன் சொல்லி கேள்வி பட்டது, பிறந்த ஒரு தங்கையை மைசூர் குடும்பம் ஒன்றிற்கு தத்து கொடுத்து விட்டார்களாம். இதுவரை அம்மா உண்மை சொல்லவில்லை. "எனக்கு நீ மட்டும் தான். ஆண்டவன் ப்ராப்தம். ஈஸ்வரா..".
ராமநாதனின் அப்பா பெரிய ப்ரோகிதர். இங்கிலிஷ்காரன் எல்லாம் வந்த அழைத்து சென்று பூஜைகள் நடத்திகொடுத்த பெருமை வாய்ந்தவர்.
ராமநாதன் முட நம்பிக்கை இல்லாதவர். குடுமி வைக்க மாட்டார். கம்முணிச பிடிப்பு. இருந்தாலும் தட்டுல காசு போடுங்க என்று ஈனஸ்வரத்தில் சொல்லி ஆக வேண்டிய கட்டாயம். படித்த வேதங்கள் ஓதி, வரும் சொற்ப வருமானத்தில்....அப்போது கோவில்கள், அரசாங்கம் நடத்தவில்லை. தர்மகர்த்தா கொடுக்கும் சம்பளம் நூறு ருபாய், வீட்டு மாளிகைக்கு கூட பத்தாது. தட்டில் விழும் காசு தான் வாழ்க்கை ஊட்டும். கொடுமை.
ஒரு வேலை சோறு மட்டும் கிடைக்கும், அதுவும் ஸ்கூலில். காமராஜ் திட்டம்.கோதுமை ரவை, எண்ணெய் இல்லாமல் வறுத்து. ஒரு எண்ணெய் கடைக்காரன் தான் கொஞ்சம் எண்ணெய் கொண்டு வந்து கொடுப்பான். அதனால் சாப்பிடுற மாதிரி இருக்கும், என்றான் சுரேஷ். காலையில் ஒன்றும் இல்லை. முடிந்தால் பொறி, உப்பு தூவி கொடுபாளாம் அம்மா சுந்தரி. கொஞ்சம் அவன் பொக்கெட்டில் போட்டு விடுவாள். அதை மென்று கொண்டே மாட வீதியில் இருந்த பள்ளிக்கு சென்றான். சில சமயம் ஐந்து பைசாவிற்கு ஒரு ஊறுகாய் பொட்டலம் வாங்குவான்.
ஒரு நாள்.. ராமநாதனுக்கு அந்த பூசாரி வேலையும் போயிற்று. தர்மகர்த்தா ஆட்கள் கோவில் வசூலை, அவர் வீட்டிற்கு எடுத்து போக சொன்னது, ராமநாதனுக்கு பிடிக்கவில்லை. கேள்வி கேட்டான். கெட் அவுட்.
திதி செய்யும் வேலை... திணையில் எங்கோ உட்கார்ந்து கொள்ள வேண்டியது. வெள்ளி, சனி நாட்களில் எதாவது வருமானம் வரும். மாற்ற நேரத்தில் யாரவது சுருட்டு கொடுத்தால் கடைசி வரை ஊதிவிட்டு, சுருண்டு படுத்து விடுவாராம். நல்ல காரியங்கள் செய்ய கோவில் பூசாரிகள் தான் செல்வார்கள்.
சில பணக்காரர்கள் நிறைய காசு கொடுப்பார்கள். அதனால் கொஞ்சம் காலம் பரவாயில்லை ஆக இருக்கும். புது சொக்காய் கிடைக்கும். அம்பாள் தேயட்டரில் சினிமா படம்... பதினைந்து பைசா டிக்கெட். அஞ்சு பைசா கைமுறுக்கு...
ஒரே பையன் சுரேஷ். விளையாடடு இல்லை. டிவி இல்லை. ஸ்லோகங்கள் சொல்வான். சில சமயம் ராமநாதனுக்கு ஒற்றை பலம் குறைந்தால், ஸ்கூலுக்கு சுரேஷ் லீவு. ஒற்றை படை ப்ரோகிதர்கள் தான் செல்ல வேண்டுமாம் தொழிலுக்கு. சுரேஷும் சென்று ஸ்வாஹா சொல்லி வருவான். இரண்டு பை நிறைய அரிசி கிடைக்கும். நல்ல பச்சை அரிசி. அம்மா தினம் புட்டு செய்து கொடுப்பாள். இப்போதும் அதை சொல்லும் போது சுரேஷின் கண்ணில் ஒரு வித ஆனந்தம்.
அவன் ஜாதி அப்படி. உள்குத்து வேறு. தினமும் குளிக்க வேண்டும். சோப்பு இருக்காது. மண்ணை தேய்த்து குளித்து விடுவான். அம்மா அவன் முகத்தில் விபுதி பூசி விடுவாள். "என் ராஜா" என்று அவள் கொஞ்சுவது அவனுக்கு சாயந்திரம் வீடு வரும் வரை போதும்.
மிகவும் நன்றாக படித்தான். பணக்கார நண்பர்களுக்கு பாடம் எடுத்தான். சிலர் சுரேஷுக்கு துணி, பணம் கொடுத்தார்கள். அன்பு வளர்த்தது.
*****
எட்டாவது வரை பாளையம்கோட்டையில் தான் படிப்பு. எதோ ஒரு ஸ்காலர்ஸிப் டெஸ்டில் முதல் ரேங்க் எடுத்தான். அந்த காலத்தில் இருநூறு ருபாய் வந்தது.
பிறகு நன்றாக படிக்கிறான் என்று சொல்லி, அவன் ஸ்கூல் வாத்தியார் சொல்ல.. ராமநாதன் வெட்கத்தை விட்டு அவருடைய தங்கை வீட்டில் (அத்தான் ஒரு பாங்கில் காஷியர்) கெஞ்சி கூத்தாடி மைலாபூரில் ஒரு ஸ்கூலில் சேர்த்து விட்டார்.
மாமாவுக்கு ஒரே மகள் சுமங்கலி. தங்கையாக நினைத்து தான் பழகினான். பிறகு...
மாமா மிகவும் சாந்தமான கொடுமைகாரர். அவனோடு பேசவே மாட்டார். அவர் சாப்பிடும் போது இவன் முன்னாள் உட்காரக்கூடாது. சில சமயம் சட்னி கூட இல்லாமல் தோசை சாப்பிட்டு உள்ளான். வீட்டு வேலை எல்லாம் இழுத்து போட்டு செய்ய வேண்டும். மாமிக்கு உதவி செய்ய வேண்டும். சுமங்கலி எதிர் வீட்டில் தாயம் ஆடிக்கொண்டு இருப்பாள்.
இவன் கிண்டி எஞ்சினீரிங் காலேஜில் கம்ப்யூட்டர் சயன்ஸ் அட்மிசன் வாங்கி வந்த போது, மட்டும் "நன்னா படிச்சேடா... குழந்தே.. இனி உங்க குடும்பத்துக்கு விடிவு காலம் டா" என்றார்.
பாங்க் லோன் வாங்கி கொடுத்தார். ஹாஸ்டலுக்கு சென்று விட்டான் சுரேஷ். அப்போது தான் ஸ்காலர்ஸிப் இரு மடங்கு கிடைக்கும். மெஸ் பில்லுக்கு சரி ஆயிற்று. மாமா தொல்லையிலிருந்து விடுதலை.
மாதம் ஒரு முறை, அப்பா அம்மா வந்து பார்த்து செல்வார்கள். காலையில் வந்து மாமா வீட்டில் குளித்து விட்டு கோவில் சென்று விட்டு, கிண்டி போய் சுரேஷை பார்த்துவிட்டு... அம்மா தான் பொறி தளிகை செய்து கொடுப்பாள். ஒரு வாரம் வைத்து சாபிடுவான். கை முறுக்கு வாங்கி கொடுப்பாள்.
சுரேஷ் கையில் வைத்திருக்கும் காசு, மிச்சம் ஆகும் என்று தெரிந்தால், அம்மா கையில் கொடுத்து விடுவான். "நன்னா படிடா குழந்தே.." அப்பா சொல்லும் வாக்கியம்.
சுரேஷ் நிறைய நண்பர்கள் சம்பாரித்தான். அழகாக இளம் வாலிபன் ஆனான். வாரம் ஒரு முறை ஞாயிறு மாமா வீட்டிற்கு போவன். கோவில் எல்லாம் சுற்றி விட்டு... மதியம் உணவு சாப்பிட்டு விட்டு, சுமங்கலிக்கு சொல்லி கொடுப்பான், ஏதாவது டவுட்ஸ் இருந்தால். இவன் முதல் வருடம் காலேஜ் போன போது, அந்த வருடம் சுமங்கலி பத்தாம் வகுப்பு.
சுமங்கலி கறுப்பாக, குட்டையாக, குண்டாக இருந்தாள். அவளுக்கு சுரேஷ் மீது ஒரு பயங்கர ஈர்ப்பு வந்தது. சுரேஷுக்கு அவளை கண்டால் ஆகவில்லை. அவன் மனதில் எல்லாம் நடிகை சுமித்ரா மாதிரி பெண் தன் வந்தார்கள்.
அவள் பிளஸ் டூ முடித்தாள். சுமாரான மார்க். எத்திராஜில் இளங்கலை காமர்ஸ் சேர்த்துவிட்டார் மாமா. சுரேஷ் அப்போது கடைசி வருடம்.
எப்படியாவது கம்பஸில் ஒரு வேலை வாங்க வேண்டும் என்ற வெறி. அப்படியே ஒரு கம்பனியில் டெல்லியில் வேலை கிடைத்தது. சாப்ட்வேர் எஞ்சினீர். மாதம் மூன்றாயிரம் சம்பளம்.
அந்த வருடம் முடிந்தது. மே மாதம் ட்ரைனிங் செல்ல வேண்டும். ஊருக்கு சென்றான்.
அப்போது மாமாவின் குடும்பத்தில் அனைவரும் கூட வந்தனர்.
அந்த சமயம், அவனுடைய அப்பா "சுரேஷ் உன் மாமா பொண்ணுக்கு பதினெட்டு ஆகிறது. அவளை கட்டிக்கோடா.. கூட மாட டெல்லிலே ஒத்தாசைக்கு ஒரு ஆள் கிடைக்கும்... சமைக்கலாம்... ஹோட்டல் சாப்பாடு ஆகாது இல்லையோ?" அம்மாவும் அருகில் நின்றிருந்தாள். "சம்மதம் சொல்றா ராஜா" என்றால். அவன் மறு பேச்சு தட்டவில்லை.
எஞ்சினீரிங் ப்ரஸ்ட் ரங்கில் பாஸ் செய்தான் சுரேஷ். சித்திரையிலே, சுமங்கலிக்கும் அவனுக்கும் திருமணம். இருபத்தி ஒரு வயது, அவளுக்கு பதினெட்டு. நண்பர்கள் அமெரிக்கா படிக்க சென்றார்கள். ஸ்காலர்ஸிப் கிடைக்காததால் இவன் செல்லவில்லை.
அவளை அவன் ஏறெடுத்து பார்க்கவில்லை. சாந்தி முகூர்த்தம் நடந்ததாக பேர் செய்துவிட்டான். சுமங்கலியிடம் சொல்லிவிட்டான் "என்னோடு உனக்கு உடல் உறவு இருக்காது" என்று. பிரண்ட்ஸ். சிநேகிதர்கள். Friendship without love or intimacy?
But, James Joyce has told in his story, " A Painful Case ", "Love between man and man is impossible because there must not be sexual intercourse and friendship between man and woman is impossible because there must be sexual intercourse." Oxymoron.
டெல்லிக்கு சென்று, ட்ரைனிங் முடித்தான். மூன்று மாதம். அவளை அழைத்து போகவில்லை. வீடு இன்னும் பார்க்கவில்லை என்று லெட்டர் போட்டான்.
ஒரு நாள் திடீரென்று சுரேஷின் அப்பா, அம்மா, மாமா, மாமி மற்றும் சுமங்கலி, அவன் தங்கியிருந்த கரோல் பாகிற்கு வந்து நின்றனர். மாமாவின் நண்பர் டெல்லிக்கு மாற்றல் வாங்கி வந்தவர் வந்து உதவி செய்தார், தங்குவதற்கு.
"கட்டாயம் மாப்பிள்ளே வீடு எடுக்கிறீங்க." என்று அதட்டி ஒரு வீடு ராமகிருஷ்ணாபுரத்தில் வாடகைக்கு ஒண்டு குடித்தனம். "எவ்வளவு நான் சுமங்கலி தனியாக இருப்பாள்?".
பக்கத்தில் ஒரு லேடீஸ் காலேஜில் சுமங்கலி படிப்பை தொடர்ந்தாள். சுரேஷ் அவளை கிட்டே நெருங்க விடவில்லை. கல்யாணம் ஆன பிறகு அவளுக்கு முகத்தில் ஒரு கலை, தேஜஸ் வந்தது. சில சமயம் சைட் அடித்தான். ஆனால் கிட்டே நெருங்கவில்லை.
ஒரு வருடம் ஓடியது.
ராஜீவ் காந்தி இறந்த சமயம். டெல்லியில் பதட்டம்.
சுரேஷ் வேலைக்கு செல்லவில்லை ... அந்த சமயத்தில்... அது நடந்தது...
சுமங்கலிக்கு பயங்கர ப்ளீடிங். யெஐஐஎமெஸ்'இக்கு அழைத்து சென்றான். கர்பபை எடுக்கப்பட்டது.
மன நிலை பாதிக்கப்பட்டால். அப்பா அம்மா தான் வந்து பார்த்துக்கொண்டனர்.
எப்படியோ ஒரு டிகிரி முடித்தாள் சுமங்கலி. கல்யாணமாகி இரண்டு வருடம் இன்னும் அது நடக்கவில்லை.
ஒரு நாள் சுரேஷின் நண்பன் வந்து ஆபீஸில் சொன்னான். சுமங்கலி யாரோடு ஓடி போய் விட்டதாக.
போலீசில் சொன்னார்கள். அவள் கிடைக்கவில்லை. அவனுக்கு மானக்கேடு. செய்த தவறு வாட்டியது.
மாமாவிடம் கால் செய்து சொன்னான். மாமாவும் மாமியும் வரவில்லை. அப்பா அம்மாவிற்கு லெட்டர் போட்டான். பதறி வந்தனர்.
ஒரு நாள் ஹைதராபத்தில் இருந்து ஒரு கடிதம் வந்தது.
ஒரு விலகல் டிவோர்ஸ் கடிதம் அதனோடு இணைக்கப்பட்டிருந்தது. "ஸொரி அத்தான். சுமங்கலி".
சுரேஷ் வேலை விட்டு விட்டு, சென்னை சென்றான். அங்கே அவன் நண்பனோடு ஒரு சொந்த கம்பனியில் வேலை செய்தான். படி படியாக முன்னேறினான். அமெரிக்கா சென்று செட்டில் ஆனான்.
அதன் பிறகு ஒரு முறை சுமங்கலியை சுரேஷ், சென்னை ஏர்போர்டில் பார்த்திருக்கிறான். அந்தஸ்தாக இருந்தாள். பார்த்தும் பார்க்காதவாறு சென்று விட்டாள்!
சுமங்கலி இப்போது இந்தியாவில் இருக்கும் பெரிய நிறுவனம் ஒன்றின் தலைவருக்கு இரண்டாம் மனைவி. அவன் சுரேஷின் நண்பன். ஆந்தராவாடு. சுரேஷ் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்து அவளை மயக்கியவன். சுரேஷ் பட்டினி போட்டதால், அவள் ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டாள். எவ்வளவு நாள் தான் கல்யாணம் ஆகாத பெண், காத்துக்கொண்டு இருப்பாள். அவன் தான் சுரேஷ் இல்லாத போது வந்து அழைத்து சென்றவன்.... அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி இருந்தது. அவன் சொத்துக்காக கல்யாணம் செய்த பெண், பிட்ஸ் அடிக்கடி வருவதால், தாய் வீடு சென்றுவிட்டாள். அது சுமங்கலி மீது அவன் கண் வைக்க ஒரு இதுவாயிற்று. முதல் மனைவி இறந்துவிட்டாள்.. ஆந்தராவாடு, சுமங்கலியை லீகலாக கரம் பிடித்தான்.
******
அவன் அப்பா சென்ற வருடம் தான் காலமானார். அவன் நண்பர் உதவியுடன் கவர்மன்ட் உதவித்தொகை வாங்கி வந்து கொடுத்து தான் முதல் சம்பாத்யம். ஐந்து வருடம் அது நடந்தது.
மகன் எப்படி சம்பாரித்தால் என்ன. தான் சம்பாரித்த காசு என்று ஒரு பெருமிதம்.
அம்மாவும் அந்த உதவி தொகை வாங்கினாள், அப்பாவின் கட்டாயத்திற்காக. அது அப்படியே எழு குழந்தைகள் பெற்று வளர்த்த கமலா மாமியிடம் கொண்டு பொய் கொடுப்பாள்.
அப்பா சென்ற வருடம் காலமானார். அவர் காசி சென்றதில்லை. திதி காசி சென்று செய்தனர்.
அம்மாவை அமெரிக்கா அழைத்து சென்றான். சந்தோசமாக இருக்கிறாள்.
*****
சுரேஷ் இப்போது ஒரு விதவை அமெரிக்கனை கல்யாணம் செய்துள்ளான். அன்பாக பார்த்துகொள்கிறாள் ரீடா.
இன்று அவன் நான்கு குழந்தைகள் தத்து எடுத்து வளர்கிறான்.
இந்தியாவில் இருந்து யுஎஸுக்கு பகவத் கீதை சொற்பொழிவு ஆற்றுவதற்குஅவருடைய பழைய ஊர் ஆச்சாரியார்களை அழைத்து சென்று ஆன்மீக பனிசெய்கிறான்.
சுரேஷ் என்னை இந்த கதை எழுத சொன்னது, எல்லோருக்கும் ஒரு பாடம் ஆகட்டும் என்பதற்காக.
( இந்த சுரேஷ் என் மனைவிக்கு சொந்தக்காரர் கிடையாது :-) )
Astrology மகர லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்
16 hours ago
2 comments:
Ramesh
It is a nail in the head!
Luv
Divya
;-)
என்ன பதிலிடுவது என்றே தெரியாமல் குழப்பமாக இருக்கிறது ரமேஷ் சார். வாழ்வின் ஆரம்பம் கோரமானதாக இருந்தால் வாழ்வின் முடிவு இன்பமானதாக இருக்கும். வாழ்க்கை என்பது பிறருக்காக வாழ்வது என்பது சுரேஷ் அவர்களின் வாழ்வின் மூலம் உண்மை என்று உணரவைத்துள்ளீர்கள். நன்றி. எனது வாழ்த்துக்களை சுரேஷுக்குச் சொல்லி விடுங்கள்...
Post a Comment