Wednesday, October 15, 2008

எரிச்சல்

தொட்டதற்கெல்லாம் எரிச்சல் வேண்டாம்
வயதான காலத்தில் நல்லதில்லை
தேவையில்ல உடல் பிரசனைகள்
வேண்டாத வீண் வினைகள்

சிறு வயதில் அம்மாவிடம் அடி
பாகற்காய் கசக்குது என்றதற்கு
மனைவி திட்டுகிறாள் இன்று
பாகற்காய் தின்று நெஞ்சை காப்பாற்று!

பாவம் செய்திருக்கவேண்டும்
பாகற்காய் தின்ன...
பிடிக்காத ஒரு காய் மருந்தாகிறது
நெஞ்சினிலே கொஞ்சம் உரமாகிறது


ஒரு அடி ஏறினால் மூன்று அடி சறுக்குவது
மனித வாழ்கையின் நியதி
புரிந்து விளையாடி தான் பாருங்கள்
வாழ்க்கை ஒரு பரமபத விளையாடடு!

இளமை கொஞ்ச நாள் தான்
முதுமை அதிக நாள் இருக்கும்
பழையது நினைத்து பழையது உண்டு
ஜீரணித்து வாழ்வது வாழ்க்கை!