நான் தவறாமல் வாசிக்கும் எழுத்தாளர் நாகர்ஜுனன் ஒரு பதிவில் எழுதினார்.... படிக்க இங்கே கிளிக்கவும் ...
அதற்கு நான் எழுதிய ஒரு தொடர்புடைய பதிவு...
Friedrich Nietzsche ப்ரெட்ரிக் நீட்ஷே
நான் போட்ட ஒரு பின்னூட்டத்தை, ஒரு கருத்தாக மதிப்பளித்து, அதற்கு ஒரு விரிவான பதில் கொடுத்துள்ளார். நன்றிகள். :-)
Here is the snippet!
Astrology: தீராத கடன் எப்போது தீரும்?
3 hours ago
//நீட்ஷதான் சொன்னான்: "நம்மால் கடவுளைக் கைவிட்டு விட முடியுமென்று தோன்றவில்லை: ஏனெனில் நாம் இலக்கணத்தைக் கைவிடவில்லை." //
கடவுளை தேடிக்கொண்டே இருக்கிறோம் (இதை போன்ற வரிகள்) சொன்னதும் நீட்ஷே தான்!
அப்புறம் கடைசியில் அவர் சொன்னது... God is dead!
வேறு விஷயம் இருந்தால் எழுதுங்கள்!
நண்பருக்கு
தர்க்க அடிப்படையில் நீட்ஷ முரண்பட்டுச் சிந்திப்பதைப்போல முதலில் தோன்றும். ஆனால் அந்த முரணியக்கத்தின் மூலம் அவர் வந்துசேரும் புள்ளிகளை நிதானமான வாசிப்பின்மூலம் புரிந்துகொள்ளலாம். நம்மைக் கொஞ்சம் இழந்துதான் இதைச் செய்ய வேண்டும்.
கடவுள் இறந்துவிட்டார் என்று நீட்ஷ கூறுவதைப் பரவலாக நேரடி அர்த்தத்தில் பலர் பார்க்கிறார்கள். நீட்ஷ, கேளிக்கையான ஞானம் என்ற புத்தகத்தில்தான் முதலில் மூன்றுமுறை இதுபற்றிப் பேசுகிறார். பிறகு ஜரதுஷ்டிரன் பேசுகிறான் என்ற புத்தகத்தில் பேசுவதைத்தான் நீங்கள் உள்ளிட்ட பலரும் மேற்கோள் காட்டுகிறீர்கள். அந்த முழு வாசகம் ஆங்கிலத்தில் இதோ.
God is dead. God remains dead. And we have killed him. How shall we comfort ourselves, the murderers of all murderers? What was holiest and mightiest of all that the world has yet owned has bled to death under our knives: who will wipe this blood off us? What water is there for us to clean ourselves? What festivals of atonement, what sacred games shall we have to invent? Is not the greatness of this deed too great for us? Must we ourselves not become gods simply to appear worthy of it?
இதை முழுவதும் வாசிக்க வேண்டும். நீட்ஷ கூறுவதற்கு உருவக அர்த்தம் உண்டு. அதாவது அறம், ஒழுக்கம் போன்றவற்றை கடவுள் மற்றும் பிற ஆன்மீக அடிப்படையில் இனியும் அணுக முடியாது என்கிறார். நீட்ஷ இதை ஒரு நெருக்கடியாகக் காண்கிறார். கிறித்துவத்தை வைத்தே இதைக் கூறினார் என்றாலும் பொதுவான அர்த்தத்தில் கடவுளின் குணாம்சங்கள், அல்லது குணாம்சங்கள்-அற்ற-தன்மை பற்றி மதங்கள் பலவும் விவாதித்துவந்திருப்பதோடு வைத்துப்பார்க்கும்போது நீட்ஷ கூறுவதற்குப் புதுப்பரிமாணம் வருகிறது. இதையடுத்து ஒரு பித்தனை நீட்ஷ பேசவைக்கிறார். அவன் பேசுவது நாத்திகவாதிகளை நோக்கி என்பதாகத் தெரிகிறது. அதாவது, தேவவிதி, ஒழுங்கு என்பது இல்லாத நிலையில் எப்படி அறத்தைச் சாத்தியப்படுத்துவது என்பதே கேள்வி.
கடந்த நூற்றாண்டும் சரி, இந்த நூற்றாண்டும் சரி, நீட்ஷவின் சிந்தனையும் எழுத்தும் உலகெங்கும் பலரை இந்தக்கேள்வியைச் சந்திக்கச்செய்கிறது. என்னையும்தான். ஒருவிதத்தில் என் எழுத்துப்பரப்பு முழுதும் இந்தக்கேள்வி தலைகாட்டுகிறது என்பேன். ஆக, இதுதவிர எழுதுவதற்கு எனக்கு வேறுவிஷயமே இல்லை என்று தோன்றுகிறது.