நேற்று என்னோடு நெருங்கி பழகிய சென்னை நண்பர் அழைப்பின் பேரில் காலை சென்னை வந்தேன்.
சிறு வேலை. நாளை வரை சென்னையில் அலைய வேண்டும். ஒரு நிலம் விஷயம். நாற்பது ஏக்கர். நேற்று வரை ஒரு ஏக்கர் ஒரு லட்சம் விற்றது, இன்று ஒரு கோடி கேட்கிறார்கள். நூறு வருட ரிகார்ட் பார்க்க வேண்டும். வில்லங்கம் போன்றவை. செங்கல்பட்டு மாவட்டம்... ஸ்ரீபெரும்புதூர்... வெளிநாடு கம்பனி... இருபது கோடிகள் பட்ஜெட். ஆளும்கட்சி ஆள், பதினைந்து பாத்திரம் கையில் வைத்திருக்கிறார். யார் யார் பேரிலோ இடங்கள்.... ஊரை ஏமாற்றி பறித்த சொத்து ஆக இல்லாமல் இருக்க வேண்டும். கொஞ்சம் சந்தேகம் வந்தாலும்... நானே வர வேண்டிய பிசினசை தொலைத்து விடுவேன்.
கூட வந்த ப்ரோகர் சொன்னார்... பொய் சொல்ல போறோம் படம் மாதிரி ஜல்லி அடிப்பாங்க இங்கே. புரிந்த மாதிரி இருந்தது. என் பாடி கார்ட் சிரித்துக்கொண்டார்! அவர் கையில் இருந்த ஏ.கே கன் நடுங்கியது.
கொஞ்சம் பயம் தான்.
********
அமெரிக்க நண்பர் ஒருவர் வருகிறார். இன்று இங்கே சென்னையில் சந்திக்கிறேன்.
நான் துவங்கவிருக்கும் ஒரு சாப்ட்வேர் நிறுவனம் குறித்து ஒரு ஆலோசனை நடத்த வேண்டும். சில கோடிகள் முதலீடு.
ஆனந்த சைதன்யா தியானமையம் திறப்புவிழா
1 hour ago
2 comments:
இதனை படித்துவிட்டு சிரித்துவிட்டு விட்டுவிட கூடாது!
in today's recession days, is it 1 crore, be careful.
Post a Comment