Monday, January 12, 2009

எதுவும் கடந்து போகும்

சர்வேசன் என்பவர் ஒரு கமண்டில் எனக்கு எழுதிய அருமையான வரிகள். "எதுவும் கடந்து போகும்!" நன்றிகள்.

சில சமயம் வாழ்க்கையும் அப்படி தான். தமிழ் தெரியாத நான் , தமிழ் இலக்கியம் எழுதுவதை போல. கணியன் பூங்குன்றனார் சொல்லுகிறார், "பழையன கழிதலும், புதியன புகுதலும், வழுவன கால வரையினானே!".

சாயாஜி ஷிண்டே, என் நண்பர், பாரதியாக நடித்தவர், இன்றும் கவலை படுகிறார், ஏன் தமிழர் ஒருவர் பாரதியாக நடிக்கவில்லை என்று.

இதுவும் கடந்து போகும்.

நான் ஒருவர் எழுதிய கதைக்கு என் கதை மாதிரி இருக்கு என்று சொல்ல போக, அதை மறந்து விட்டு, கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கழித்து, அதை பற்றி நான் என் நண்பியோடு (நண்பர் என்று தான் சொல்ல வேண்டும்) பேசியதை, குறிப்பிட்டு மானத்தை வாங்கினார் ஒரு பெண். நன்றிகள் அவருக்கு.

இதுவும் கடந்து போகும்.

Sunday, January 11, 2009

மன்னிப்பு கோருகிறேன்

இந்த பதிவு யாருக்கும் நான் மன்னிப்பு கேட்பதற்கு அல்ல. விவரம் கொடுக்க. ஹி ஹி. இதெல்லாம் பொது வாழ்க்கையிலே சகஜமுங்க. என் பக்கம் தான் நியாயம் இருக்குங்க.

அந்த எழுத்தாளர் எனக்கு ஒரு கமன்ட் போட்டிருந்தார், அதை நான் வெளியிடவில்லை. காரணம் உண்டு.... அவரே தேடி அந்த கதை கண்டுபிடித்தார்! இன்டக்ஸ் மூலம். வெரி சிம்பிள்.

//நீங்கள் குறிப்பிடுவது இந்த கதையா? நான் காப்பியடித்ததாய் சொல்லப்படுவது எது என்று சொல்லுங்கள். //

ஒரு ருபாய் கதை

என் கதையை, படியுங்கள்.... ரசியுங்கள்...

மூன்று மாதங்கள் கழித்து தன்னை வலையுலகில் மார்கெட்டிங் செய்துக்கொள்ள ஒரு வாய்ப்பு போல? நான் காபியடிததாக சொல்லவில்லையே!

பதிவுபோதை ஐயாவின் கதையை நான் காப்பியடித்தேனா?

அவருடைய கதை இது...

அட்மிஷன்- கல்கி தீபாவளி சிறப்பிதழ்

அதில் நான் தான் முதல் கமண்ட்ஸ் போட்டுள்ளேன். என் கதைகள் மாதிரி உள்ளது என்று.... கிழே பாருங்கள்....

//
Hi Nice Story!

I reminds me of multiple stories that I have written in my blog over the last 2 months.

Appreciate your inputs on them!

Regards
Ramesh

4:39 AM//

நான் reminds me என்று சொன்னது , காப்பி அடித்ததாக சொல்லவில்லை, ஞாபகம் ஓடுகிறது. ஒரே மாதிரி இருக்கிறது, என்றும் கொள்ளலாம். காப்பி அடித்ததாக அவராக கற்பனை செய்துக்கொண்டு எழுதினால், அதற்கு நான் பொறுப்பல்ல. இண்டேர்ணலைஸ் பற்றி அவர் தெரிந்துகொண்டு எழுதியிருந்தால் நலம்.

அவரும் அதை படித்ததற்கு அறிகுறியாக, பப்ளிஸ் செய்துவிட்டு, இதை கேட்டார்.

//ரமேஷ், லிங்க் கொடுங்க. உங்க கதைகளைப் படித்துவிட்டு சொல்கிறேன்.//

நானும், எனது பதிவுபோதை ப்லோக் URL கொடுத்தேன். என் ப்லோக் ப்ரோபையில் மூலம் இமெயில் தெரிந்து மெயில் செய்திருக்கலாம். அதை அவர் பப்ளிஸ் செய்யவில்லை. காரணமும் சொல்லவில்லை. என்னிடம் அந்த கமன்ட்சின் காப்பியும் இல்லை. இண்டேர்ணலைஸ் டாபிக் வந்த் போது இதை வைத்து தான் என் உரையாடல் திவ்யாவுடன் அமைந்தது. அது திவ்யா அவருடைய பதிவில் வெளியிட்டு விட்டார். அதை இந்தியன் என்பவர் சிண்டு முடித்து விட்டார்.

இருவருக்கும் ஒரே கரு - கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறுவது! இதை யார் வேண்டுமானாலும் இண்டேர்ணலைஸ் செய்யலாம். அகில உலக காபிரைட் எனக்கில்லை. யார் வேண்டுமானாலும் எழுதலாம். என் கதை மாதிரி என்றும் சொல்லெலாம்.

அப்புறம் அவர் எழுதுறார்,

//ஓரே ஒரு வார்த்தை ஏம்மா, எங்கதையை சுட்டே / திருடினே/ காப்பியடிச்சேன்னு என்னிடமே நேரா கேட்காமல், நீங்க ரெண்டு பேரும் சிரிச்சிருக்கீங்க. இப்ப பாருங்க, எனக்கு சிரிப்பே வரலை :-)//

அது தான் நான் போட்ட கமன்ட் வடிவில் அவர் கதையிலே முதலா உட்கார்ந்திருக்கே. எங்கே பொய் மூஞ்சி வச்சுக்குவீங்க இப்போ? நான் ரொம்ப சீரியஸ் ஆக கேட்குறேன். சிரிப்பு வரலே.

இண்டேர்ணலைஸ் செய்து எழுதி காவ்யா விஸ்வநாதன் (ஹார்வர்ட்) நன்றாக பட்டுள்ளார்.

நானும் அவருடைய ப்லோக் போஸ்டில் கமண்ட்ஸ் போட்டுள்ளேன்.

***

ரொம்ப அருமையாக எழுதியுள்ளீர். என் மெய் சிலிர்க்கிறது. நன்றிகள். வாழ்த்துக்கள்.

//வாசித்துப் பார்த்தால், அழகு தமிழில் இது அல்லவா இலக்கியம் என்று மெய்சிலிர்த்துப் போனேன். //

மராட்டி தாய்மொழி ஆளான நான், தமிழில் எழுதி ஒருவரிடம் பாராட்டு பெறுவது, கோடி புண்ணியம். மராட்டியர்களை அவமதித்ததாக நான் எடுத்துக்கொள்ளவில்லை.

நான் சம்பாரித்த பல கோடிகளை விட, இந்த வாழ்த்து அருமை. ஸுபர்!

இதற்க்கு நான் என்றேன்டும் கடமை பட்டுள்ளேன்.

மேலும், எனது அருமை நண்பி திவ்யாவுடன் ப்ரைவேட்டாக உரையாடியது, அவருடைய...Anecdote on Perceptions பதிவில் கோடிட்டு காட்டியிருந்தார்.

//My best friend Ramesh's Tamil story with a title One Rupee, was plagiarized (internalized) by someone called Ramachandran Usha, and even got published in a magazine. We laughed about it. She or He would have made few hundred rupees and people would have forgotten about it.//

அந்த உரையாடலுக்காக திவ்யாவிடம் நான் பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறேன். பொது வாழ்க்கைக்கு அது தேவை இல்லை. அறிஞ்சர்கள் தான் தனி மனித உரையாடலை எழுதலாம். அதை எடுக்குமாறு திவ்யா அவர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்போது அந்த பதிவு நீக்கப்பட்டு உள்ளது. மீண்டும் நன்றிகள் திவ்யா.

சரி இப்போது என்னை குறிப்பிட்டு அந்த எழுத்தாளர் எழுதிய பதிவு நீக்கப்பட்டால், நான் இந்த பதிவை நீக்குவேன். சரியா?

*******

ராமசந்திரன் உஷா அவர்கள், இண்டேர்ணலைஸ் பற்றி நக்கலாக அவரே தாக்கம் பற்றி எழுதியுள்ளார். அருமையான வரிகள். அசோகமித்திரன் கூட இப்படி எழுதியிருக்க முடியாது.

//படிச்சிட்டு அப்படியே பக்குன்னு ஆயிடுச்சு. என்ன கதை? அப்படி நம்மை இம்ப்ரஸ் செய்து, தாக்கத்தைத் தந்து மனசுல ஆழமா பதிஞ்சிப் போச்சா அல்லது புத்திசாலிகள் ஓரேமாதிரி சிந்திப்பார்களே என்பார்களே, அப்படி ஏதாவது நடந்துச்சா ? புத்திசாலியா கொஞ்சம் ஓவரா இல்லே - அட என்னை சொன்னேங்க- என்று மன்சாட்சி நக்கல் அடித்தது.//

*******

திவ்யாவும் தன்னுடைய புதிய பதிவில், இண்டேர்ணலைஸ் பற்றி எழுதியுள்ளார்.

இங்கே பாருங்கள்... ஒரு கதை

//அப்புறம் internalize என்றால் கதையின் கருவை எடுத்து, மெருகேற்றுவது!//

*************

மேலும் , என்ன கமண்ட்ஸ் போட்டாலும், தயவு செய்து, கமண்ட்ஸ் பாக்ஸ் மேலே நான் சொல்லியுள்ள... "நல்லபடியாக யோசித்து கமண்ட்ஸ் போடுங்கள்! தேவையில்லாமல் கமன்ட் போடுவது தவறு. ஐடி ஆக்ட் படி, தண்டனைக்குரியது. அப்பப்ப வந்துட்டு போங்க!" வாசகம் படிக்கவும். இஷ்டமிருந்தால் தான் பப்ளிஷ் செய்வேன்!

இஷ்டமிருந்தால் தான் பப்ளிஷ் செய்வேன்

என்ன கமண்ட்ஸ் போட்டாலும், தயவு செய்து, கமண்ட்ஸ் பாக்ஸ் மேலே நான் சொல்லியுள்ள... "நல்லபடியாக யோசித்து கமண்ட்ஸ் போடுங்கள்! தேவையில்லாமல் கமன்ட் போடுவது தவறு. ஐடி ஆக்ட் படி, தண்டனைக்குரியது. அப்பப்ப வந்துட்டு போங்க!" வாசகம் படிக்கவும். இஷ்டமிருந்தால் தான் பப்ளிஷ் செய்வேன்!

அப்புறம் இன்னொரு விஷயம், பதிவுக்கு சம்பந்தப்பட்ட கமண்ட்ஸ் போடவும்.

எனக்கு தனியாக மெயில் போடனும்னா, ப்ரோபயில்லே இமெயில் ஐடி இருக்கு.

Friday, January 9, 2009

மீண்டும் ஐ.பி.சி. செக்சன் 498 ஏ

நான் எழுதிய பதிவு குறித்து நினைவு கூறுங்கள், கல்யாணமும் ஐ.பி.சி. செக்சன் 498 ஏவும். இன்று நியூஸ் பேபரில் சில விஷயங்கள், எப்படி பெண்கள் ஆண்களுக்கு எதிராக பயன் படுத்துகிறார்கள் என்று.

என் எதிர் வீட்டுக்காரர் ஒரு ஸ்டுவர்ட். அவர் மனைவி ஸ்வீடன் நாட்டுக்காரி. தினமும் சண்டை. மாதம் பதினைந்து நாள் வெளி நாடு வேலை என்று சென்றுவிடுகிறார்கள். ஒரே சண்டை.

நேற்று நான் பெல் அடிக்க வேண்டிய நிலைமை! ஒரே சத்தம். அந்த பெண் வெளியே சென்று போலீசிடம் கம்ப்ளெயின்ட் கொடுத்துள்ளார். அப்போது எழுதப்பட்ட சட்டம் ஐ.பி.சி. செக்சன் 498 ஏ. தெரியவில்லை, ஏன் என்று.

ஒரு பாயின்ட், இன்னும் இருவரும் ஒன்றாக தான் உள்ளார்கள்.

போலிஸ் விஷயம் என்ன ஆயிற்று?

Friday, January 2, 2009

2008 முதல் பத்து தமிழ் சினிமா - தொடர்

2008 முதல் பத்து தமிழ் சினிமா என்ற தொடருக்கு எழுத அழைத்த சகோதிரி வினிதாவிற்கு நன்றி.

என்னுடைய வரிசை இதோ.

10. குசேலன்
9.
ஜெயம் கொண்டான்
8. வாரணம் ஆயிரம்
7. சாது மிரண்டால்
6. வெள்ளி திரை
5.
பொய் சொல்ல போறோம்
4. அஞ்சாதே
3.
தசாவதாரம்
2. பூ
1. சுப்ரமணியபுரம்

மேல் வரிசை போக என்னுடைய சூப்பர் டாப் படங்கள்... ஜிரோ லெவல்!

திண்டுக்கல் சாரதி, காதலில் விழுந்தேன் மற்றும் ஜே.கே.ரித்தீஷின் நாயகன்.

***

நான் இந்த "2008 முதல் பத்து தமிழ் சினிமா " தொடர் எழுத அழைப்பது...

ஜ்யோவ்ராம் சுந்தர்
நர்சிம்
யுவ கிருஷ்ணா (சும்மா டைம் பாஸ் மச்சி)

தமிழரும் கிளிநொச்சியும்

கிளிநொச்சி வீழ்ந்ததா? இல்லை இது ஒரு டுபாக்கூர் செய்தியா? மஹேந்திர ராஜபக்சே தான் சொல்ல வேண்டும். டிவியில் மாற்றி மாற்றி காட்டுகிறார்கள்.

ஜோதிடப்படி இது நம்பத்தகுந்த செய்தி என தெரிகிறது... சனியின் நல் பலம் குறையும் காலம், ஜனவரி 15 வரை.

கிரக நிலைகள் பார்க்கும் போது 2014 வரை புலிகள் தலைவர் இருப்பார். ராஜா யோகம் எல்லாம் கிடையாது.

சரி இதனால் தமிழருக்கு என்ன நன்மை?

டைம்ஸ் நவ் டிவி சேனல் சொல்லுகிறார்கள், இனி தமிழருக்கு போய் சேர வேண்டிய உதவி (டன் கணக்கில் தேங்கி உள்ளது...) சென்று சேரும் என்றார்கள். அங்கு பெட்ரோல் 2500 ருபாய் லிட்டர், தேங்காய் எண்ணெய் 1000 ருபாய். என்ன கொடுமை சரவணன் இது?

வைக்கோவின் பேட்டி மாற்றி மாற்றி காட்டப்படுகிறது. இந்திய ஸ்ரீலங்காவிற்கு உதவி செய்ய கூடாது என்கிறார்.

Wednesday, December 31, 2008

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

எனது பதிவுபோதையின் வாசகர்களுக்கு மனமார்ந்த நன்றி.

= ரமேஷ் =

Sunday, December 28, 2008

பெருவெளி

பெருவெளி என்றால் அண்டம், கேலக்சி.

இந்த பெருவெளியில் (மில்கி வே) இருபது உலகம் - பூமி.

அருமையான தோசை போன்றது இந்த பெருவெளி.

புரியாத தமிழ் என்று நிறைய இருக்கிறது....

நிறைய பேர் எழுதுகிறார்கள்...

சினிமாவில், எல்லாம் இது நடைபெறாது.... நான் பார்த்த இரண்டு படங்கள், சென்ற வாரத்தில்...

The curious case of Benjamin Button என்ற படம், முதுமையில் தொடங்கி இளமையில் (குழந்தையாக) வந்த முடியும் ஒருவனின் வாழ்க்கை... பெஞ்சமின் பட்டன்... அருமை. ஒரு சிறுகதை காவியம் ஆனது...

திண்டுக்கல் சாரதி என்ற படம் பார்த்தேன். கருணாகரன் என்ற கருணாஸ் அருமையாக நடித்துள்ளார். ஒரு தமிழ்நாட்டு (அல்லது உலகத்தின்) மனதை படம் பிடித்துள்ளார்.

மனம் தான் முக்கியம், கலர் என்ன?

பெருவெளியில் இதெல்லாம், சகஜம்.

Tuesday, December 23, 2008

ஸ்கூல் கிறிஸ்தமஸ்

இங்கே தீபாவளி என்று செய்வதில்லை ஸ்கூலில்.

அதென்னவோ கிறிஸ்தமஸ் மட்டும் செய்கிறார்கள்.

நீங்கள் சொல்லுங்கள்.

தெர்மாகோல் பெல் செய்து அனுப்பினேன் இன்று...

ஆங்கிலேயர்கள் ஆதிக்கம். கொடுமை.

Monday, December 22, 2008

புதுசு

சில பதிவுகள் படித்தேன்... அருமை...

என்னுடைய இந்த பதிவிற்கு... சத்யம் தவறிய கதைகள் ஒரு கமன்ட் கூட வரவில்லை. நன்றி. ஷ்.... அப்பாடா...

முதலில் பரிசல்காரனின் அபியும் நானும் படம் விமர்சனம்... அபியும் நானும் - விமர்சனம்

நாட்டில் இப்படியும் நடக்கிறது... திருட்டு கல்யாணங்கள்

ஒரு கதை .... பென்டியம் மனிதர்கள்

****************

வீடு வாங்குவதற்கு இது நல்ல நேரம். சென்னை அண்ணா நகரில் ஒரு பிளாட் 5800 ஒரு சதுர அடிக்கு விற்றது, சனிக்கிழமை என் மாமனார், 3100 ரூபாய்க்கு அட்வான்ஸ் கொடுத்தார். விலை வீழ்ச்சி ஒரு வருடத்தில். வாழ்க ரியல் எஸ்டேட்.