சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா
பாதி மனதில் தெய்வம் இருந்து
பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து
ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகம் இன்று
அடங்கி விட்டதடா
அமைதி தெய்வம் முழு மனதில்
கோயில் கொண்டதடா
ஆரவாரப் பேய்களெல்லாம்
ஓடி விட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில்
கூடி விட்டதடா
தர்ம தேவன் கோயிலிலே
ஒளி துலங்குதடா - மனம்
சாந்தி சாந்தி சாந்தி என்று
ஓய்வு கொண்டதடா
எறும்புத்தோலை உரித்துப் பார்க்க
யானை வந்ததடா - நான்
இதயத் தோலை உரித்துப் பார்க்க
ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம்
இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி
வந்து விட்டதடா!
*******
இந்தியா ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்தவர்களும், ஜான் மெக்கைனை ஆதரித்தவர்களும், பாடுவது இது!
Thursday, November 6, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
:):):)
Post a Comment