Friday, March 27, 2009

பா.ம.க. வெற்றி தொகுதிகள்

சென்ற 2004 லோக்சபா தேர்தலில் பா.ம.க. வெற்றி தொகுதிகள் இவை. (தமிழ்நாடு)

செங்கல்பட்டு
அரக்கோணம்,
திண்டிவனம்,
தர்மபுரி,
சிதம்பரம்

மற்றும் புதுச்சேரி

மேலும் இப்போது தொகுதி சீரமைப்பு என்று சிறிது, பிரித்து மேய்ந்திருக்கிறார்கள். அதனால், சுமார் மூன்று தொகுதிகள் தி.மு.க வசம் போகும்! மிச்சம் காங்கிரஸ் பலம் மிகுந்தவை. ஜாதிகள் (வன்னியர்) போட்டி சிறிது இருக்கும்.

பா.ம.க. முதல் அல்லது இரண்டாம் இடங்களை பிடிக்கும் தொகுதிகள் இவை. (அ.தி.முக பலத்துடன் மட்டும்)

விழுப்புரம், காஞ்சீபுரம், கடலூர், ஆரணி, சேலம், தர்மபுரி, வேலூர், அரக்கோணம், மயிலாடுதுறை, புதுச்சேரி.

மேலே உள்ள பத்தில், நிச்சயம் அவர்கள் தான் வெற்றி நினைக்கும் ஆறு தொகுதிகள்.... பலத்த போட்டி... விஜயகாந்த் வோட்டை பிரித்தால் (இதில் கவர்ன்மென்ட் தளத்தில் நான் பார்த்தபடி 2006 எலெக்சனில் தே.மு.தி.க பெற்ற வோட்டுக்கள் நிச்சயம் பாதிக்கும்), தி.மு.க சாகசம் செய்யும், காங்கிரஸ் மூன்றில் வெற்றி நிச்சயம்.... திருமாவளவனும் வெற்றி பெறுவார்.

அரக்கோணம் (மீண்டும்),
ஆரணி,
காஞ்சீபுரம்,
தர்மபுரி (மீண்டும்),
சிதம்பரம் (மீண்டும்),
கள்ளக்குறிச்சி (இது மட்டும் அ.தி.முக பலத்துடன் நிச்சயம் ஜெயிக்கலாம்)

சரி எல்லோரும், ப்ளோக்கை மட்டும் படிக்காமல் வோட்டு போடுங்க.

நல்லவர்கள் ஜெயிக்கட்டும்! நாடு வளம்பெறட்டும்.

Thursday, March 26, 2009

தமிழ்நாட்டு தேர்தல் கணிப்பு

என்னுடைய தமிழ்நாட்டு தேர்தல் கணிப்பு இப்படி இருக்கும்....

தி.மு.க (16)+ காங்கிரஸ்(13) + தே.மு.தி.க. (10) + வி.சி.கே(1) என கூட்டணி அமைத்தால், நிச்சயம் 40 / 40 (முஸ்லீம் கட்சிகள், மற்றும் ஆர்.எம்.வி போன்றோர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள்)

தே.மு.தி.க எங்கெல்லாம் பா.ம.க நிற்கின்றதோ, அங்கு போட்டியிடவேண்டும், சூடு பறக்கும்!

மற்றவர்கள் 0 / 40

அப்படி விஜயகாந்த், மாற்றம் செய்யாவிட்டால்! மே 13 தான் எலெக்சன். ஏப்ரல் ஆறு தான் கெடு குறிக்கும் நாள். அது வரை டைம் உள்ளது.

அ.தி.மு.க (15) + ம.தி.மு.க (5)+பா.ம.க.(5)+கம்மூனிஸ்ட்ஸ்(4) 29 / 40
தி.மு.க (6)+ காங்கிரஸ்(3) + முஸ்லீம் கட்சி (1) 10 / 40
தே.மு.தி.க 1/40 (அதுவும், விஜயகாந்த் மனைவி நின்றால்)

இதை குறித்துக்கொள்ளுங்கள்.

மேலும், மூன்றாம் அணிக்கு ஆதரவு கொடுக்க, போட்டி போட்டு தமிழ்நாட்டிற்கு மீண்டும் பன்னிரண்டு அமைச்சர்கள் கிடைக்கும் வாய்ப்பு அதிகம். இது ப.ஜ.க. கூட்டணி (என்.டி.ஏ) 250 சீட்டு லெவலில் வந்தால் கூட நடக்கும்.

தேர்தல் தமாஷா

இது என்ன கூத்து... ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒருமுறை பாட்டாளி மக்கள் கட்சி. ராமதாஸ் (தமிழ் குடிதாங்கி அய்யா!). இப்போது நண்பரோடு (தொல்.திருமா) மோதும் சிதம்பரம். அதிலும் தி.மு.க., தென்காசி தொகுதியைவிடுதலை சிறுத்தைகளுக்கு கொடுத்தால் தப்புவார்! (இப்போது - குற்றாலமா?). மேலும் டாக்டர் கிருஷ்ணசாமியின் வாக்கு வங்கி கொஞ்சம், அ.தி.மு.க விற்கு போகும்...

விஜயகாந்த் நிச்சயம், தி,மு.காவிற்கு சாதகமாக தான், வாக்குகளை பிரிப்பார். என் இஷ்டம், அவர், பத்து சீட் கேட்டு வாங்கி, தி.மு.க (16)+ காங்கிரஸ்(12) + தே.மு.தி.க(10) + வி.சி.கே(1) என கூட்டணி அமைத்தால், நலம். தமிழ்நாட்டிற்கு திட்டங்கள் வரும். பாண்டிச்சேரி காங்கிரஸ் வசம் கொடுத்துவிடுவார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சி: அன்புமணி ராமதாஸ் தேர்தலில் நிற்க மாட்டார்! ராஜ்ய சபை வழி தான் , தனி வழி.

இங்கே கர்நாடகாவிலும், குடும்பம், சண்டை கோஸ்டி என பி.ஜே.பி ஓடுகிறது..

தேவ கவுடாவின் மகன்களின் அக்கப்போர் தாங்க முடியவில்லை.

Wednesday, March 25, 2009

எவ்வளவு பெரிய சைக்கிள்



இவர் ஜெர்மானியர்! கொடி தெரியுதா?

Tuesday, March 17, 2009

இந்தியா தேர்தல் களம்

இந்தியா தேர்தல் களம் ஓர் பெரிய மாயை.

லாலு பிரசாத் தான் இப்போது ஆட்டம் ஆரம்பித்து உள்ளார். காங்கிரஸ் மூன்று தொகுதி மட்டும், பீகாரில்.

ஜார்கண்டிலும் லாலு கட்சி மூன்று இடங்களை பிடிக்கும். மொத்தம் இருபத்தி எட்டு இடங்கள் வைத்துக்கொண்டு, மூன்றாவது அணியிடம் பேரம் பேசி, பிரதமர் ஆகலாம் என்று நினைக்கிறார் போல.

தமிழ்நாட்டை பொறுத்த வரையில் தி.மு.க. கூட்டணி தான் நாற்பது தொகுதிகள் (பாண்டி உட்பட) ஜெயிக்கும் தோற்றம் உள்ளது. அதற்கு விஜயகாந்த் அல்லது பா.மா.க. தயவு தேவை. கம்யுனிஸ்டுகள் கோவை மாவட்டத்தில் இரண்டு தொகுதிகள், அ.தி.மு.க பலத்துடன் ஜெயிக்கலாம், என்கிறார் நண்பர்.

கர்நாடகாவில், ஐந்து தொகுதிகள், பழைய ராஜாக்கள் குடும்பம் வெற்றி பெறுகிறார்கள். பெல்லாரியில் சோனியா நின்றால், ஒரு வேளை ஜெயிக்கலாம்.
தேவ கவுடா, நல்லா முயற்சி செய்து, மூன்றாம் அணி பலத்துடன், ஒரு பாத்து சீட்டு பிடிப்பார். தேர்தல் தமாஸ், பி.ஜே.பிக்கு கை வந்த கலை. பத்து சீட்டு நிச்சயம்.

சரத் பவர் தனியாக நிற்கிறார், மகாராஷ்ட்ரா தவிர. கூத்து தான்.

குஜராத்தில் நரேந்திர மோடி வெற்றி வாகை , பதினைந்து சீட்டுகளில். முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் ஐந்து சீட்டுக்கள் காங்கிரசுக்கு.

கூட்டி கழித்து பார்த்தால், பெரிய கூட்டணி, காங்கிரஸ் தலைமையில் மீண்டும் வரும் வாய்ப்பு அதிகம் தான். நான் சொல்கிறேன், 290 முதல் 300 எம்.பிக்கள் சப்போர்ட் வைத்திருப்பார்கள்.

Friday, March 13, 2009

பரிசல்காரன் என் எனிமியா?

பரிசல்காரன் தான் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேசன், பதிவுகள் எழுத.

தமிழ் வலிபூக்களில் ஒரு வித்தியாசமான முயற்சியில், அவர் செய்த கூத்துக்கள் அருமை.

இப்போது அவர் புதிய பதிவில் இருந்து......

எதிரிகளைக் காதலிக்கிறேன்!

*********


சமீபத்தில் எனக்கு ஒரு மெயிலில் வந்ததன் சாராம்சம் இது. ஹாலிவுட்டில் 70-80 களில் பிரபல நகைச்சுவை நடிகரான ஜார்ஜ் கார்லின் (சமீபத்தில் காலமானார்) சொன்னவை...

நமது வாழ்வின் முரண் என்னவென்றால்...

நாம் குறைவாகச் சம்பாதிக்கிறோம்.. நிறைய செலவழிக்கிறோம்.
பெரிய வீட்டில் வசிக்கிறோம். சின்ன குடும்பம்தான் இருக்கிறது.
நிறைய வசதிகள் இருந்தாலும், குறைவான நேரமே இருக்கிறது. நிறைய படித்திருக்கிறோம்.. ஆனால் அறிவைத் தவறாகப் பயன்படுத்துகிறோம். நிறைய அறிவிருக்கிறது.. ஆனால் தவறான முடிவை எடுக்கிறோம். நிறைய வழிகாட்டும் நண்பர்களைப் பெற்றிருக்கிறோம்.. ஆனால் அதைவிட அதிகமான பிரச்சினைகளைச் சந்திக்கிறோம். நிறைய மருந்துகள்.. அதைவிட அதிகமான உடல்நலக்குறைவுகள்..

நிறைய குடிக்கிறோம், நிறைய புகைபிடிக்கிறோம், நிறைய வேலை செய்கிறோம், வேகமாக வாகனம் செலுத்துகிறோம். குறைவாக சிரிக்கிறோம், தாமதமாக உறங்கச் செல்கிறோம்.. தாமதமாக எழுகிறோம். நிறைய உணவுகள்.. செரிமானம்தான் ஆவதில்லை!

நிறைய எழுதுகிறோம். குறைவாகக் கற்றுக் கொள்கிறோம். ஒருத்தர் மீது அன்பைச் செலுத்த அதிக நேரம் யோசிக்கிறோம். ஆனால் வெறுக்க..? ஒரு கணத்தில் வெறுக்கிறோம்.

மிகப் பெரிய மனிதர்கள்.. மிகச் சின்ன புத்திகள்.

-இப்படியே போகிறது அந்த மின்னஞ்சல்.

Wednesday, March 11, 2009

கூட்ஸ் வண்டி கவிதைகள்

கூட்ஸ் வண்டி என்ற வலைப்பதிவை படித்தேன்.... அஜயன்பாலா என்பவர் எழுதுவது.

இந்த கவிதை, என்னை மிகவும் லயிக்க வைத்து.

வார்த்தை விளையாட்டு!

***************

இரு காதல் கவிதைகள்

1
போனேன் கண்டு கலங்கி
அழகான பெண் ஒன்றை ஒர் நள்ளிரவில்
இன்னமும் தீராது நடுநடுங்கி மனசு
மண் புயலில் சுற்றி சுழலும் காலம்
கண்களில் மண் அப்பி
இறைவன் கொண்டு செல்வான் என வியந்து
கை தூக்கி நிற்கிறேன்
அவ்ள் கடந்து சென்றபோது
அதிர்ந்த ஸ்லீப்பர் கட்டைகளின் இடி முழக்கத்தில்
நொறுங்கி தூளாகும் என் எலும்புகளின் ஓசையுடன்
அசையா புகைப்படமாய்
கம்ப்யூட்டரில் ஒட்டியிருக்கிறது
உன் திரு.மதி.முகம்.
2
நேற்று நான் பாத் ரூமில் கதவை
தட்டியபோது
ஒரு குளிர் காற்றாய் உன் வளைக்கரம்
கன்விலே முகிழும்போது மட்டும்
ஏன் கொண்டை போட்டு வரவேண்டும்
என் கண்மணி
நேற்று நீ குளித்த் ஆற்றில்
செத்து விழுந்தனவே என் மன
பாரம்தாங்காதந்தகிளைகள்.
இன்னமும் மனசை மயக்குக்கிறது
நீ விட்டுச்சென்ற கல்லின்ஈர மஞ்சள்.

Tuesday, March 10, 2009

என் கவிதை

என் கவிதை ஒன்று கிழே... (பழசு)

மவுனத்தின் படிகளில்
கோபங்கள் தணியும்
வார்த்தைகளின் பிடியில்
அமைதி நிலவும்

*************

இது புதுசு

காற்றினிலே சொல்லும் வார்த்தைகள்
கடலலை போல தவழ்ந்திடும்
உன் நெஞ்சத்தை அடைந்திடும்
உன் கண்ணீர் நெஞ்சினை மூழ்காதவரை!


Monday, March 9, 2009

சர்வதேச மகளிர் தினம்

சர்வதேச மகளிர் தினம் நேற்று பெண்களால் கொண்டாடப்பட்டது. வாழ்த்துக்கள்.

அரை கிலோ ஸ்வீட்சும், பெங்களூரு கோரமங்களா சாந்தி சாகர் உணவும் என்று கழிந்தது.

ஞாயிறு என்றால் எப்படியும் வெளியே உண்ணும் பழக்கம், இன்னும் மாறவில்லை.

ஹோலி இன்று/நாளை. கல்கத்தாவில் ஒரே குஷி சமயம். சிறு வயதில் மதுரா சென்ற ஞாபகம் இப்போ வருது. கிருஸ்னர் கோவிலும், வறண்ட ஜிலேபியும், இன்னும் மறக்கவில்லை.

எல்லோருக்கும் ஹோலி வாழ்த்துக்கள்.

Tuesday, March 3, 2009

பாக்கிஸ்தானுக்கு அவமானம்

மீண்டும் மீண்டும் பாக்கிஸ்தானுக்கு அவமானம்! என்னய்யா பண்ணுறீங்க?



இங்கே படித்து பாருங்கள்....

எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லே, எதிரிக்கு ரெண்டு கண்ணு போகணும்.

இது தாங்க அவர்களுடைய தத்துவம்.

அதனாலே தான் யு.எஸ்.ஏ அவர்களை மட்டம் தட்டுகிறது.

வேறு ஒன்றும் எழுதுறதுக்கு இல்லே! எல்லாம் சொல்லியாச்சு!

*******

இன்னொரு பதிவு.... பாகிஸ்தானில் கொடுரம்