இந்தியா தேர்தல் களம் ஓர் பெரிய மாயை.
லாலு பிரசாத் தான் இப்போது ஆட்டம் ஆரம்பித்து உள்ளார். காங்கிரஸ் மூன்று தொகுதி மட்டும், பீகாரில்.
ஜார்கண்டிலும் லாலு கட்சி மூன்று இடங்களை பிடிக்கும். மொத்தம் இருபத்தி எட்டு இடங்கள் வைத்துக்கொண்டு, மூன்றாவது அணியிடம் பேரம் பேசி, பிரதமர் ஆகலாம் என்று நினைக்கிறார் போல.
தமிழ்நாட்டை பொறுத்த வரையில் தி.மு.க. கூட்டணி தான் நாற்பது தொகுதிகள் (பாண்டி உட்பட) ஜெயிக்கும் தோற்றம் உள்ளது. அதற்கு விஜயகாந்த் அல்லது பா.மா.க. தயவு தேவை. கம்யுனிஸ்டுகள் கோவை மாவட்டத்தில் இரண்டு தொகுதிகள், அ.தி.மு.க பலத்துடன் ஜெயிக்கலாம், என்கிறார் நண்பர்.
கர்நாடகாவில், ஐந்து தொகுதிகள், பழைய ராஜாக்கள் குடும்பம் வெற்றி பெறுகிறார்கள். பெல்லாரியில் சோனியா நின்றால், ஒரு வேளை ஜெயிக்கலாம்.
தேவ கவுடா, நல்லா முயற்சி செய்து, மூன்றாம் அணி பலத்துடன், ஒரு பாத்து சீட்டு பிடிப்பார். தேர்தல் தமாஸ், பி.ஜே.பிக்கு கை வந்த கலை. பத்து சீட்டு நிச்சயம்.
சரத் பவர் தனியாக நிற்கிறார், மகாராஷ்ட்ரா தவிர. கூத்து தான்.
குஜராத்தில் நரேந்திர மோடி வெற்றி வாகை , பதினைந்து சீட்டுகளில். முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் ஐந்து சீட்டுக்கள் காங்கிரசுக்கு.
கூட்டி கழித்து பார்த்தால், பெரிய கூட்டணி, காங்கிரஸ் தலைமையில் மீண்டும் வரும் வாய்ப்பு அதிகம் தான். நான் சொல்கிறேன், 290 முதல் 300 எம்.பிக்கள் சப்போர்ட் வைத்திருப்பார்கள்.
புதுவை வெண்முரசு கூடுகை 78
16 hours ago
3 comments:
இந்த 'தேர்ட் ஃப்ரன்ட்'னு எதோ சொல்றாங்களே? அவங்களை பத்தி என்ன நினைக்கிறீங்க?
தேர்ட் ஃப்ரன்ட் might get 50 to 65 seats!
your guess is rite,.
Post a Comment