Wednesday, June 3, 2009

உலகின் விலை அதிகமான உணவு

உங்களுக்கு தெரியுமா, உலகின் விலை அதிகமான உணவு எது?

Lobster + Caviar + Snails + Gold = World's most expensive curry

இது தான்...

இங்கே பாருங்கள் லாப்ஸ்டர் + காவியார் + ஸ்நயில்ஸ் + தங்கம்

விலை ரொம்ப குறைவு - ஜஸ்ட் 2000 பவுண்ட்ஸ். ரூ. 1, 60, 000/-

******

எங்க குடும்பத்துக்கு இரண்டு வருடம் மளிகை சாமானம் வாங்கலாம்...

அனானிமஸ் கமன்ட்டர்கள்

சிறிது நேரத்திற்கு முன் எனது நண்பி/தோழி/க்ளாஸ்மேட் திவ்யாவுடன் ( ஆம், இப்போது இந்தியாவில் இருக்கிறார்! ) பேசிக்கொண்டு இருந்தேன்.

எப்படி சில "அனானிமஸ் கமன்ட்டர்கள்" மக்களின் மனதை புண்படுத்துகிறார்கள் என்று பேசிக்கொண்டு இருந்தோம்.

இங்கே பாருங்கள்... பெங்களூரில் நான்

யாரோ ஒருவர், அவர் தந்தையார் பெயரில் எழுதி வரும் தமிழ் ப்ளாகில், ஒரு அனானிமஸ் கம்பட்டார் கிண்டலாக திவ்யாவின் ப்ளாகை எழுதுவதும் அவர் தான் என்ற கிண்டல் தொனியில் எழுதிவிட்டார். அதற்காக அந்த நபர், "சிறு விஷயம்" தெளிவுப்படுத்த திவ்யாவை, அவர் ப்ளாக்கில் கமன்ட் இட கேட்டுக்கொண்டார். திவ்யாவும், "நான் அவரில்லை, அவள்" என்று விவரம் சொல்லி ஒரு கமன்ட் போட்டார்.

அதன் பிறகு, அதே அனானிமஸ் கமன்ட்டார், மிகவும் கொச்சைபடுத்தி திவ்யாவை விமர்சனம் செய்துள்ளார். தேவையற்றது அது.

இப்போது அது சீரியசான ரூட்டில் போய்க்கொண்டு உள்ளது. யார் அந்த அனானிமஸ் கமன்ட்டார் என்று "ஐ.பி. அட்ரெஸ்" வைத்து கண்டுபிடித்து தக்க சன்மானம் வழங்க போகிறார்கள்.

எதற்கு இதை நான் எழுதுகிறேன்?

இந்த ப்லோக்கிலேயே நான் எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்து இந்த தொந்தரவு இருந்தது. சிலர் மிரட்டல் தொனியிலும், சிலர் மிகவும் என் இனத்தை குறிப்பிட்டு கேவலமாகவும் எழுதினார்கள் ( அதுவும், மேல் ஜாதி என்று நம்பிக்கொண்டு இருக்கும் சிலர் அடித்த கூத்து சொல்லி மாளாது ).

ஆனால், கமன்ட் மாடரேசன் இருந்ததால், தான் ஒழுங்கானவற்றை மட்டும் பிரசுரித்தேன். இப்போது பார்த்தாலும், ஐ.டி. ஆக்ட் பற்றி குறிப்பிட்டு உள்ளேன்.

ஆகவே, நண்பர்களே நிங்கள் தயவாய், உங்கள் ப்ளாகில் கமன்ட்களை மாடரேசன் செய்யவும்.

ஒழுங்கானவற்றை அனுமதித்தால், சம்மந்தப்பட்டவர்கள் மனம் நோகாது. நன்றிகள்.

Thursday, May 28, 2009

பிச்சையும் காசும்

பிச்சை கேட்கிறார்கள்,
சில்லறை இல்லை என்றேன்.
மகள் கேட்டாள் சாகலேட் வாங்கிகொடு,
இந்தாமா ஒரு ருபாய் வச்சுக்கோ!

********

இந்த கவிதைக்கும், கருணாநிதிக்கும், அவர் முதுகு வலிக்கும், பிள்ளைகளுக்கு பதவி வேண்டி டில்லிக்கு சென்றதும்... சம்பந்தமில்லை... ;-)

Monday, May 25, 2009

கொல்கத்தாவில் மழை தீவிரம், புயல் ஓய்ந்தது

கொல்கத்தாவில் மழை தீவிரம், புயல் ஓய்ந்தது - ஐலா தான் அதன் பெயர்.

ஆனாலும் ஒன்பது பேர் இதுவரை காணவில்லை, இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது.

அனைத்து ப்ளைட்டுக்களும், கேன்சல். ட்ரெயின்கள் ஆங்காங்கே நின்றுள்ளன!

லெப்டு ஆட்களுக்கு வந்தது வினை.

ஆர்மி உதவி கேட்டுள்ளார் புதா.

************

ட்ரெயின்கள் இன்னும் இரண்டு நாட்கள் கழித்து தான் சென்று சேரும். என் நபர்கள், சென்னையில் இருந்து செல்பவர்கள், இப்போது பாலசோரில் இருந்து டாக்சி வைத்து செல்கிறார்கள். காலை சென்று சேர வேண்டியவர்கள், இரவாகிவிடும். கடும் மழை.

என்ன செய்ய? இது ஒரு மழைக்காலம்.

Sunday, May 24, 2009

மந்திரிகள் முடிவு

தி.மு.க குடும்பம் தான் கட்சி அரசியல், எல்லாம். என்ன செய்வது, தமிழ்நாட்டுக்கு விதி அப்படி. ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர் செய்தது சரி என்றே தோன்றுது!

பேரம் பேசுவதற்கு சென்ற கூட்டம் டிவியில் பார்த்தேன். டி.ஆர்.பாலு இல்லை! அய்யோ பாவம்!

அவர்கள் குடும்பம் என்ன செய்ய போகிறது. காசை அள்ளுவார்கள். பாவம் தயாநிதி மாறன், டெக்ஸ்டைல்ஸ் துறையாம்... கிளிஞ்சது... நல்லது செய்வார் என நம்புகிறேன்! கனிமொழி பெண்களுக்கு ஏற்ற துறை. நிறைய டிவியில் பேச வேண்டும். நன்றாக செய்வார். மீண்டும் ராஜா ஐ.டி. மற்றும் தொலை தொடர்பு துறை - வேலை ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. தலைவருக்கு தோல் கொடுக்க வேண்டும். என்ன இந்த 3G பிசின்ஸ்ஸை கொல்லுவார். எல்லாம் டிலே ஆகும், கம்மி விலைக்கு கம்பெனிகளுக்கு கொடுத்து, மார்க்கெட் ரெட் வித்தியாசம் ஆளுக்கு பாதி. ஒரு லட்சம் கோடி அனைவரும் சேர்ந்து அடித்தார்கள்.. ஜெயலலிதாவிற்கு மீண்டும் அட்டேக் செய்ய வாய்ப்பு.

பாவம் டி.ஆர். பாலு , தலைவர் குடும்பத்திற்கு உழைத்தது வீண். இப்போ துணை சபாநாயகர். என்ன ஆகும்? ஐந்து வருடம் வேஸ்டா? அதிலும் எதாவது லாபம் இருக்கும். மரியாதையான போஸ்ட்.

சரி இன்னும் மூன்று லக்கி ஆட்கள் யார் யார்? பழனிமாணிக்கம் - கலைஜர் ஆள். அப்புறம் ஜெகத்ரட்சகன், ஜாதி புது கட்சி செய்வார், மீண்டும் வந்துவிட்டார்... இன்னும் ஹெலன் டேவிட்சன் - சுற்றுலாத்துறைக்கு ஒரு துணை பதவி. பேசுவார்களா?

தமிழகத்தில் இருந்து ஒரு முஸ்லீம் கூட ஆட்சிக்கட்டிலில் இல்லையா?

தமிழ் ஈழத்திற்கு குரல் கொடுப்பார்களா? சம உரிமை அங்கு எப்போதும் வேண்டும்!

Friday, May 22, 2009

ஆட்சிக்கு பார்முலா, குடும்பம், பதவி, யு.பி.ஏ.

இப்போது யு.பி.ஏ. அரசு இரண்டாம் முறை பதவி ஏற்க உள்ளது, சயந்திரம் ஆறரை மணிக்கு.

ஆட்சிக்கு பார்முலா , யு.பி.ஏ., குடும்பம், பதவி என போகிறது ஆச்சி கப்பல்.

சென்ற ௨00௪ சமயம், வகுத்த பார்முலா இது -

ஆறு எம்.பிக்கு ஒரு கேபினட். மொத்தம் முப்பது கேபினட் அமைச்சர்கள் இருந்தார்கள். ( இதில் ஏழு ராஜ்ய சபா உறுப்பினர்கள் )

மூன்று எம்.பிக்கு ஒரு மினிஸ்டர் ஆப ஸ்டேட். மொத்தம் முப்பத்தி ஏழு கேபினட் அமைச்சர்கள் இருந்தார்கள். ( இதில் மூன்று ராஜ்ய சபா உறுப்பினர்கள் )

ஆக, காங்கிரஸ் 147 எம்பிக்களுடன், மொத்தம் முப்பது அமைச்சர்கள் வைத்திருந்தார்கள். தமிழ்நாட்டில் இருந்து மட்டும் சிதம்பரம், வாசன், தங்கவேலு, இளங்கோவன் என தலைவர்கள்...

தி.மு.க 16 எம்.பிக்களுடன் , மொத்தம் ஏழு அமைச்சர்கள் வைத்திருந்தார்கள். பார்முலா 3 + 4 ! ( 3 + 5 என்பதை, பா.ம.கவிற்காக 1 விட்டு கொடுத்தார்கள் ).

அப்புறம் உங்களுக்கு தெரியும் ஆட்சியில் அமர்ந்த மைனாரிடி அரசுக்கு ஆதரவு எம்.பிக்கள் மொத்தம் 221, மற்றும் 61 லேப்ட் எம்.பிக்கள் வெளியில் இருந்து ஆதரவு.

**********

சரி இப்போது என்ன நடக்கிறது?

மன்மோகன் சிங் அரசு இப்போது வைத்திருக்கும் ஆதரவு -

காங்கிரஸ் 206 எம்பிக்களுடன், மொத்தம் அமைச்சர்கள் நாற்பது வைத்திருக்க ஆசைப்படுகிறார்கள்!

திரிணமூல் காங்கிரஸ் 20 எம்.பிக்களுடன் மொத்தம் ஏழு அமைச்சர்கள் எதிர்ப்பர்ர்கிறார்கள். ரயில்வே அமைச்சர் பதவி மமதாவிர்க்கு. பெண்களுக்கு சந்து போனதெல்லாம் ரயில்கள் ஓடும். பெங்காலிகள் நிறைய பேர் ரயில்வே அமைச்சரால் வேலை பெறுவார்கள்.

தி.மு.காவும் பதினெட்டு எம்.பிக்களுடன் மொத்தம் எட்டு அமைச்சர்கள் ( 4 + 4 பார்முலா ) எதிர்பார்கிறார்கள், அவர்கள் கேட்க்கும் இலாக்ககளுடன். சுகாதாரம் ( ஹெல்த் ) கனிமொழி, இண்டஸ்ட்ரிஸ் அ.ராஜா , ஐ.டி. & டெலிகாம் தயாநிதி, ஷிப்பிங் & சர்பேஸ் டிரான்ஸ்போர்ட் பாலு, ஸ்டீல் & கெமிக்கல்ஸ் அழகிரி ஆகியோர் கேபினட் மந்திரிகள், அப்புறம் பவெர், ரயில்வேஸ், பைனான்ஸ், டூரிசம், மற்றும் என்வைரன்மேன்ட் இலாக்காகளில் நான்கு மினிஸ்டர் ஆப ஸ்டேட் என கேட்கிறார்கள். பழனிமாணிக்கம், ஜெகத்ரட்சகன், டி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் ஹெலன் டேவிட்சன் ஆகியோருக்கு வாய்ப்பு.

காங்கிரஸ் சொன்ன அயிட்டங்கள் ( அது தாங்க, இலாக்கா ) தி.மு.கவிற்கு பிடிக்கவில்லை. குடும்பம் ( அழகிரி, கனிமொழி மற்றும் தயாநிதி ) மந்திரிசபையில் உட்கார கூடாது என்கிறார்கள். ஆனால் அவர்கள் மட்டும் காங்கிரஸ் கட்சியை குடும்பம் வைத்து நடத்துவார்கள். என்.சி.பி தலைவர் மகள் சுப்ரியாவை ராஜ்ய சபை எம்.பி ஆக்கினார். அப்புறம் இப்போது லோக் சபை எம்.பி செய்துவிட்டார், மந்திரி ஆக்குவார்!

டி.ஆர.பாலு மற்றும் ஆ.ராஜா ( லட்சம் கோடிகள் மேல் ஊழல் என்கிறார்கள்! ) அமைச்சரவையில் உட்கார மன்மோகன் சிங் விரும்பவில்லை. மிஸ்டர் க்ளீன் அவர்! இன்னொரு சான்ஸ் கொடுத்து பார்க்கலாம்! திருந்துவார்களா?

தி.மு.கா இல்லாவிட்டால் அ.தி.மு.க அமைச்சரவையில் பங்கு பெரும். மைத்ரேயன் பேசிக்கொண்டு இருக்கிறாராம். தமிழ்நாட்டில் தி.மு.க அரசு டிஸ்மிஸ். இருக்கும் ஒன்பது அமைச்சர்கள் வைத்து, இரண்டு கேபினட், இரண்டு மினிஸ்டர் ஆப ஸ்டேட் வேண்டும் என்கிறார்கள். ராகுல் காந்திக்கு ஆங்கிலம் பேசும் தலைவர்கள் என்றால் தான் பிடிக்கும்!

சரி கருணாநிதி கேட்பதில் என்ன தவறு?

Tuesday, May 19, 2009

ஒரு வடநாட்டு மகன்

அரவிந்த் என்பவரின் கமன்ட் ஒரு ப்ளாகில் ஸூபர்!

//மும்பையில் ஒரு வடநாட்டு தே மகன் இந்த செய்தியை பார்த்து விட்டு ரொம்ப மகிழ்ச்சி அடைந்தான்

நான் கேட்டேன் உன் வீட்டில் நுழைந்து உன் அம்மா தங்கை கையை பிடித்து ஒருவன் இழுத்தால் நீ புலியாக மாறுவாயா அல்லது பூனையாக மாறுவாயா

அவன் பதிலே சொல்லவில்லை

இந்த வதந்திகளை பரப்பும் எல்லோரும் இந்த கேள்வியை கேட்டு கொள்ளுங்கள்

மானமுள்ள தமிழர்கள் அந்த சமயத்தில் எப்படி மாறுவார்கள் எப்படி மாறினார்கள் என்று இந்த சரித்திரம் பேசும்

பிரபாகரனை காட்டி கொடுத்த மற்றும் தன் சொந்த தாயை கூட்டி கொடுத்த துரோகி கருணா இன்னும் சில நாட்களில் கொல்ல படுவான் (அவன் கூட்டு சேர்ந்த சிங்கள நாய்களால்)

ஒரு தீவில் பிரபாகரன் என்ற ஒரு மக்களின் தலைவர் இருந்தார் . ஆனால் அதே தீவை சேர்ந்த பலருக்கு அவர் என்றல் ரொம்பவே பயம் முக்கியமாக இருவருக்கு அவர்கள் (சரத் பொன்சேகா மட்டும் மகிந்த ராஜபக்சே ) ரொம்ப ரொம்ப பயம் மட்டும் இல்லாது அவரை பிடிக்கவே பிடிக்காது .

ஆனால் வாய் பேச்சில் வல்லவர்கள் .

இருவரும் ஒருநாள் சாப்பிட்ட உணவே செரிக்காததால் காட்டு பக்கம் ஒதுங்கி இருக்கிறார்கள் .

அப்போது அந்த பக்கம் பிரபாகரன் வந்தவுடன் பதறி போய் ஒரு புதரில் ஒளிந்து கொண்டார்கள் .

பிரபாகரன் சென்ற பிறகு

சரத் பொன்சேகா : நீங்க ரொம்ப பயந்துட்டிங்க தானே

மகிந்த ராஜபக்சே : இல்லவே இல்லை

சரத் பொன்சேகா : சும்மா சொல்லுங்க பயந்துட்டிங்க தானே

மகிந்த ராஜபக்சே : இல்லை நான் பயப்படவே இல்லை

சரத் பொன்சேகா : யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன் எனக்கு தெரியும் நீங்க பயந்துட்டிங்க

மகிந்த ராஜபக்சே : ஆமா நீ எப்படி கண்டு பிடிச்ச ??

சரத் பொன்சேகா : பயத்துல நீங்க எனக்கு கழுவிட்டிங்க

மகிந்த ராஜபக்சே : பிரபாகரனை பிடிக்க நான் உனக்கு மட்டும் இல்ல நான் எல்லார் *த்தையும் கழுவி விடுவேன் .

தமிழக மக்கள் : நீ எவன் *த்தை கழுவி தண்ணி குடித்தாலும் பிரபாகரனை ஒன்றுமே செய்ய முடியாது

தயவு செய்து வதந்திகளை நம்பாதீர்கள் //

Nice comment on another blog. Wanted to appreciate you on your blog. ;-) I am too ஒரு வடநாட்டு மகன்!

Monday, May 18, 2009

மீண்டும் பீனிக்ஸ் எழுமா?

இன்று ஒன்று போயின்
நாளை ஒன்று பிறக்கும்
கிடைக்கும் என்பது
கிடைத்தே தீரும்!

- ரமேஷ்

ஒரு மனத்தோற்றம். குண்டுகள் இல்லாமல், அனைத்து தமிழ் தலைவர்களையும் அரவனைத்துபோயிருந்தால், இந்த நிலைமை வந்திருக்காதோ?

வீரப்பனும் ஆம்புலன்சில் போனான். இவரும்?

"வீரவணக்கம் - பிரபாகரன் மற்றும் ஒட்டு மொத்த ஈழத்தமிழனத்திற்கும்!"

"இனத்தின் சினம்,ரணத்தின் தினம்,"

இனி நடக்க வேண்டியது பிரணாப் முகர்ஜி சொல்வதை போல, ராஜபக்சே தமிழர்கள் தனி ஆளுமை அதிகாரம் கொடுக்க வேண்டும். மாநில சுயாட்சி பற்றி முரசொலி மாறன் எழுதிய புத்தகம், ஆங்கிலத்தில் இருந்தால் அவருக்கு அனுப்பவும்.

Friday, May 15, 2009

தேர்தல் நிலவரம்

பிரச்ன ஜோஷியம் படி காங்கிரஸ் 163 இடங்கள் எடுப்பார்கள். சென்ற தடவை விட கூடுதல்.

அப்புறம் ஈஸ்ட் டிரக்ச்சன் பார்திஸ் சப்போர்ட் பண்ணுவாங்க. சவுத் சப்போர்ட் நிச்சயம். _/\_

மன்மோகன் தான் மீண்டும் பிரதமர்.

இங்கே ஒரு சேலஞ் உள்ளது. நான் விவரம் அனுப்பியுள்ளேன். பார்க்கலாம்! ஜோதிடம் ஒரு மன அமைதிக்கு என்று போய் , இன்று சேலஞ் நிலைமை. :-(

*********

சரி தமிழ்நாட்டில் எப்படி இருக்கும் நிலவரம்? கிட்டத்தட்ட 60 டு 90% சீட்ஸ் டி.எம்.கேவிர்ற்கு கிடைக்கும் வாய்ப்பு அதிகம். ஜெயலலிதாவிற்கு மூஞ்சியில் கரி பூசுவார்கள்...

இது சொன்னபடி நடக்க வாய்ப்பு இருக்கிறது!

பொறுத்திருந்து பாருங்கள்.

கோலங்கள், நேரத்திற்கு தகுந்தமாரி மாறும். அப்போ ரிசல்டும் தான்.

***********

நண்பர் ஒருவர் மகன் தமிழ்நாடு ப்ளஸ் 2 எக்சாமில் பாஸ். கிரிக்கெட் என்று அலைந்துக்கொண்டு இருந்தான். அவர்கள் நம்பவே இல்லை. வரும் ஞாயிறு ஒரு பெரிய பார்டி தருகிறார்கள் சென்னையில்... பெற்ற மதிப்பெண்கள், 1100. எங்காவது இஞ்சினீர் சீட் நிச்சயம். கிண்டி காலேஜில், கிடைக்கலாம் 199 கட ஆப். வாழ்த்துக்கள் சுனில் அருண்குமார். ( அவரின் சித்தப்பா மகேஷ் ஒரு ஐ.ஏ.எஸ். )

சுனில் 90% வாங்குவார் என்று பிரசனம் பார்த்து கூறியிருந்தேன்.

Sunday, May 10, 2009

சில சிரிப்புகள் - எனக்கு வந்த மெயில்

திரையரங்க கடைவாசலில்...

"விஜயை மீட் பண்ணணுமா? coke குடிங்குங்க"

என்று சொல்லும் விளம்பரப் படத்தில் நம்ம அண்ணன் "இளைய தலைவலி"விஜய் சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருந்தான்.

"இந்த கோக் மாதிரி கூல்டிரிங்ஸில பூச்சிக் கொல்லி மருந்துங்க அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல கலந்திருக்கானுங்களாம்.அதெல்லம் இவனுக்குத் தெரியாது? இந்த மயிரும் நாளைக்கு அரசியலில குதிக்கப் போகுதாம். எப்படியா இந்த நாடு உருப்படும்?" என்று யாரோ சொல்லி நகர...

நான் திடுக்கிட்டுத் திரும்பினேன்.

சொன்னது யார் என்று அறிய முயற்சித்தேன், முடியவில்லை.

எனக்கு கடைசியாக பார்த்த படம் ஞாபகத்திற்கு வந்தது.

அந்த படத்தின் பெயர்
"யாவரும் நலம்."

படம் பார்த்து அசந்துட்டேன் போங்க...

செத்துப் போனவங்க எல்லாம், ஒரு குறிப்பிட்ட வீட்டு டிவியில மட்டும்,அதுவும் சரியா ஒரு குறிப்பிட்ட நேரத்தில், அவங்க வீட்டு டிவியில மட்டும் வர்ற தொடர் நாடகத்தில நடிக்கும் கதாபத்திரங்களா வருவாங்களாம்...

(சிரிக்காதீங்க)

காதுல பூ வைக்கிறத கேள்விப் பட்டிருக்கோம்.இந்த படத்தில தாராளமா டிவி கேபிள் வயரையே சுத்தி வீட்டுக்கு அனுப்புறானுங்க.

இந்த மாதிரி ஹைடெக் பிச்சைக்காரனுங்க இணையத்திலும் புகுந்தாச்சு.

அதுங்க எல்லாம் , வித விதமா இருக்கிற ஏதாவது ஒரு கடவுள் பெயரில , ஏதாவது ஒரு வாய்க்குள்ள நுழைய முடியாத பேர்ல இணைய தளத்த ஆரம்பிக்குதுங்க. அந்த கோயில் கணக்குல கிரிடிட் கார்ட் வழியா , பணம் கட்டினா,நம் வீட்டுக்கே பிரசாதத்தை அனுப்பி வைக்குங்களாம்.

நாம அத வாங்கி வீட்லேயே மொட்டைய போட்டுட்டு,நாமத்த நெத்தியில பூசிக்கிட்டு, அதுங்க கொடுக்கிற பிரசாதத்த வாய்ல வைச்சுக்கிட்டு "பக்தி பழமா" மாறி உக்காந்துகலாமாம்.

"இன்னும் எத்தனை நாளக்கிடா, எங்கள ஏமாத்துவீங்க?..."


"மரியாதை" என்ற படத்திற்குப் போயிருந்தேன்.

"இயக்குநர் விக்ரமன்" என்றால் கண்ணை மூடிக்கொண்டு வரவேற்கிற ஆள் நான்.

அதே மாதிரி அவரின் படப்பாடல்களை யோசிக்காமல் வாங்கிக் கேட்கிற ஆட்களில் நானும் ஒருத்தன்.

அவர் மேல் வைத்திருக்கிற நம்பிக்கை தான் காரணம்.

கதைக்காக அங்க,இங்க, ஏன் இங்கிலீஷ் படத்தப் பார்த்து காப்பியடிக்கிறது. அதெல்லாம் கெடையாதுங்க.

மனுசன் தன்னம்பிக்கையான ஆளு...

தன் படத்தை தானே காப்பியடிச்சுக்குவார்.

"வானத்தைப் போல,உன்னை நினைத்து...,சூர்யவம்சம்"...ன்னு பெரிய பட்டியலே நீளுது மீதிய நீங்களே கண்டுபிடிச்சுக்குங்க.

ரெண்டு விஜயகாந்த் இருக்காங்க,ஆனா உண்மையிலே ஹீரோ யாருன்னா நம்ம ரமேஷ் கண்ணா தான்!

படம் முழுக்க சிரிப்பு வெடிய கொளுத்திப் போட்டுக்கிட்டே போகிறார்.ஆங்கில படப்பாணி, ஒரே மாதிரி சிரிப்புத் தான் என்றாலும்,ரசிக்க,சிரிக்க முடிகிறது.

ஆனந்த விகடன், குமுதம் மாதிரி நாட்டுப் பற்றோடு வெளி வருகிற தேசிய வார ஏடுகளில் வந்த பழைய குப்பைகளை, அர்த்தமுள்ள நகைச்சுவைகளை(சிரிக்காதீங்க....!).

எப்படி ஒரு குப்பையும் ஒரு கலைஞனின் கைப் பட்டால் கலைப் பொருளாகுமோ,அந்த அதிசயம் இந்த படத்திலும் நடந்திருக்கிறது.

சமூகம் பெண்ணை நடமாடும் அழகுநிலையமாகவும், ஆணை பணம் கொட்டும் ATM இயந்திரமாகத் தான் பார்க்கக் கற்றுத் தருகிறது.

காதல் கருகி,வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டிய வயதில் வாழ்க்கையும், மனசும் கருகிப் போன என் தேசத்து இளைஞனுக்கு தனக்கு தெரிந்த மொழியில் ஆறுதல் சொல்லிப் போகிறது,இந்த படம்.

தனக்குள்ளே சிரிக்க, அழுகிற, பூப்பூக்கிற படைப்புக்கு சொந்தக்காரன், நம்ம விக்ரமன்.

அவன் படப்பாடல்களைக் கேட்கும் போது,காதுகள் இருந்த இடத்தில் காதுகள் மறைந்து,பூக்கள் பூக்கும்.

வீட்டில் எல்லோரையும் துரத்தி எங்காவது அனுப்பி விட்டு கதவு சன்னல்களை மூடிவிட்டு இவன் படப்பாடல்களை மட்டும் ஒலிக்க விட்டு கேளுங்கள்...

ரோசாபபூ... சின்ன ரோசாப்பூ...(படம்-சூர்ய வம்சம்) ஒலிக்க விட்டு ஒரு பிறவிக் குருடனை கேட்கச் சொல்லுங்கள்.அவனையே ஒரு ரோஜாப் பூவாக மாற்றும் சக்தி அந்த பாடலுக்கு உண்டு.

ஏனோ இந்த படத்தில் பாடல்கள் எல்லாம் பெருத்த ஏமாற்றம்.

வழக்கம் போல விக்ரமன் படங்களில் வரும் , மிகைப் படுத்தப்படாத வில்லன்களே இதிலும் .

காதலித்து ஏமாற்றும் மீனா கதாபாத்திரத்தின் மீது கூட கடைசியில் பரிதாபந்தான் வருகிறது.

நல்ல உத்தி!


அம்மாவின் சமையலை கிண்டலடிக்கும் காமெடி சற்று அதிகமாகவே வருவதால்,அம்மாவோடு படம் பார்த்தால்,உங்கள் அம்மாவின் கைகள் உங்கள் முதுகில் படமுடியாத தூரத்தில் உட்கார்ந்து கொள்ளுங்கள். அப்பத்தான் தப்பிக்க முடியும்.

பெற்றோர்களே, உங்கள் விருப்பங்களை உங்கள் பிள்ளைகள் மேல் திணிக்காதீங்க.அவர்களை,அவர்களாகவே சுயமாக சிந்திக்க,முடிவெடுக்க விடுங்கள்.

பெண்கள் வெறும் சமையல் செய்யும் இயந்திரமல்ல,மனுசி!...

என்பது மாதிரியான நல்ல வசனங்களுக்கு பஞ்சமில்லை.

பல நேரங்களில் நாடகத்தனம் தலை தூக்கினாலும், அது ஒன்றும் குறையாகத் தோன்ற வில்லை.

கதாநாயகனே திரையில் தோன்றி கஞ்சா ( நான் கடவுள்) கேட்கிறான்.அப்படி ஒரு கிறுக்கு வேகத்தில் தமிழ் திரையுலகம் பயணிக்கும் போது...

அம்மா( விக்ரமன்) ஊட்டும் பால் நிலாச் சோறு எத்தனை பேருக்குப் பிடிக்கும்? என்று தெரியவில்லை.



சில கல் தொலைவில் நடக்கும் தமிழீழ மனிதப் படுகொலைகளைப் பற்றி,ஒரு சின்ன நேரடி, மறைமுக காட்சியோ,வசனமோ வைக்காமால் படங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் வெளிவருகிறது...!

போங்கடா நீங்களும் உங்க கலைகளும்...மனுசங்களாடா நீங்க...?



--
5/10/2009 03:26:00 PM அன்று விழி,எழு,செயல்படு! (foryouths) இல் *ஆதிசிவம்@சென்னை* ஆல் இடுகையிடப்பட்டது






இந்த பதிவின் முகவரியை மட்டும் அடைய/கருத்துச் சொல்ல..
http://www.beyouths.blogspot.com/2009/05/blog-post_10.html#links


எல்லா பதிவுகளையும் மின்னல் வேகத்தில், பார்வையிட்டு வெளியேற......
http://feedproxy.google.com/beyouths/bImA