இப்போது யு.பி.ஏ. அரசு இரண்டாம் முறை பதவி ஏற்க உள்ளது, சயந்திரம் ஆறரை மணிக்கு.
ஆட்சிக்கு பார்முலா , யு.பி.ஏ., குடும்பம், பதவி என போகிறது ஆச்சி கப்பல்.
சென்ற ௨00௪ சமயம், வகுத்த பார்முலா இது -
ஆறு எம்.பிக்கு ஒரு கேபினட். மொத்தம் முப்பது கேபினட் அமைச்சர்கள் இருந்தார்கள். ( இதில் ஏழு ராஜ்ய சபா உறுப்பினர்கள் )
மூன்று எம்.பிக்கு ஒரு மினிஸ்டர் ஆப ஸ்டேட். மொத்தம் முப்பத்தி ஏழு கேபினட் அமைச்சர்கள் இருந்தார்கள். ( இதில் மூன்று ராஜ்ய சபா உறுப்பினர்கள் )
ஆக, காங்கிரஸ் 147 எம்பிக்களுடன், மொத்தம் முப்பது அமைச்சர்கள் வைத்திருந்தார்கள். தமிழ்நாட்டில் இருந்து மட்டும் சிதம்பரம், வாசன், தங்கவேலு, இளங்கோவன் என தலைவர்கள்...
தி.மு.க 16 எம்.பிக்களுடன் , மொத்தம் ஏழு அமைச்சர்கள் வைத்திருந்தார்கள். பார்முலா 3 + 4 ! ( 3 + 5 என்பதை, பா.ம.கவிற்காக 1 விட்டு கொடுத்தார்கள் ).
அப்புறம் உங்களுக்கு தெரியும் ஆட்சியில் அமர்ந்த மைனாரிடி அரசுக்கு ஆதரவு எம்.பிக்கள் மொத்தம் 221, மற்றும் 61 லேப்ட் எம்.பிக்கள் வெளியில் இருந்து ஆதரவு.
**********
சரி இப்போது என்ன நடக்கிறது?
மன்மோகன் சிங் அரசு இப்போது வைத்திருக்கும் ஆதரவு -
காங்கிரஸ் 206 எம்பிக்களுடன், மொத்தம் அமைச்சர்கள் நாற்பது வைத்திருக்க ஆசைப்படுகிறார்கள்!
திரிணமூல் காங்கிரஸ் 20 எம்.பிக்களுடன் மொத்தம் ஏழு அமைச்சர்கள் எதிர்ப்பர்ர்கிறார்கள். ரயில்வே அமைச்சர் பதவி மமதாவிர்க்கு. பெண்களுக்கு சந்து போனதெல்லாம் ரயில்கள் ஓடும். பெங்காலிகள் நிறைய பேர் ரயில்வே அமைச்சரால் வேலை பெறுவார்கள்.
தி.மு.காவும் பதினெட்டு எம்.பிக்களுடன் மொத்தம் எட்டு அமைச்சர்கள் ( 4 + 4 பார்முலா ) எதிர்பார்கிறார்கள், அவர்கள் கேட்க்கும் இலாக்ககளுடன். சுகாதாரம் ( ஹெல்த் ) கனிமொழி, இண்டஸ்ட்ரிஸ் அ.ராஜா , ஐ.டி. & டெலிகாம் தயாநிதி, ஷிப்பிங் & சர்பேஸ் டிரான்ஸ்போர்ட் பாலு, ஸ்டீல் & கெமிக்கல்ஸ் அழகிரி ஆகியோர் கேபினட் மந்திரிகள், அப்புறம் பவெர், ரயில்வேஸ், பைனான்ஸ், டூரிசம், மற்றும் என்வைரன்மேன்ட் இலாக்காகளில் நான்கு மினிஸ்டர் ஆப ஸ்டேட் என கேட்கிறார்கள். பழனிமாணிக்கம், ஜெகத்ரட்சகன், டி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் ஹெலன் டேவிட்சன் ஆகியோருக்கு வாய்ப்பு.
காங்கிரஸ் சொன்ன அயிட்டங்கள் ( அது தாங்க, இலாக்கா ) தி.மு.கவிற்கு பிடிக்கவில்லை. குடும்பம் ( அழகிரி, கனிமொழி மற்றும் தயாநிதி ) மந்திரிசபையில் உட்கார கூடாது என்கிறார்கள். ஆனால் அவர்கள் மட்டும் காங்கிரஸ் கட்சியை குடும்பம் வைத்து நடத்துவார்கள். என்.சி.பி தலைவர் மகள் சுப்ரியாவை ராஜ்ய சபை எம்.பி ஆக்கினார். அப்புறம் இப்போது லோக் சபை எம்.பி செய்துவிட்டார், மந்திரி ஆக்குவார்!
டி.ஆர.பாலு மற்றும் ஆ.ராஜா ( லட்சம் கோடிகள் மேல் ஊழல் என்கிறார்கள்! ) அமைச்சரவையில் உட்கார மன்மோகன் சிங் விரும்பவில்லை. மிஸ்டர் க்ளீன் அவர்! இன்னொரு சான்ஸ் கொடுத்து பார்க்கலாம்! திருந்துவார்களா?
தி.மு.கா இல்லாவிட்டால் அ.தி.மு.க அமைச்சரவையில் பங்கு பெரும். மைத்ரேயன் பேசிக்கொண்டு இருக்கிறாராம். தமிழ்நாட்டில் தி.மு.க அரசு டிஸ்மிஸ். இருக்கும் ஒன்பது அமைச்சர்கள் வைத்து, இரண்டு கேபினட், இரண்டு மினிஸ்டர் ஆப ஸ்டேட் வேண்டும் என்கிறார்கள். ராகுல் காந்திக்கு ஆங்கிலம் பேசும் தலைவர்கள் என்றால் தான் பிடிக்கும்!
சரி கருணாநிதி கேட்பதில் என்ன தவறு?
ஐந்து முகங்கள் – கடிதம்
14 hours ago
No comments:
Post a Comment